Thursday, 6 July 2017

மருத்துவ படிப்புக்கு கூடுதலாக 200 இடங்கள் சட்டசபையில் அமைச்சர் அறிவிப்பு

தமிழக சட்டசபையில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறைக்கான மானியக் கோரிக்கை மீது எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர். அவர்களுக்கு பதில் அளித்த அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், பின்னர் அந்தத் துறைக்கான புதிய 108 அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- மருத்துவ படிப்புக்கு கூடுதல் இடங்கள் நெல்லை, மதுரை அரசு மருத்துவ கல்லூரிகளில் தலா 100 இடங்கள் என மொத்தம் 200 எம்.பி.பி.எஸ். இடங்கள் கூடுதலாக ஏற்படுத்தப்படும். அனைத்து மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அவற்றுடன் இணைந்த மருத்துவமனைகளில் 40 கோடியே 85 லட்சம் ரூபாய் செலவில் மருத்துவ தகவல் மேலாண்மைத் திட்டம் வலுப்படுத்தப்படும். புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு 26 கோடியே 76 லட்சம் ரூபாய் செலவில் புதிய உபகரணங்கள் வழங்கப்படும். வேலூர், சேலம், கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய நான்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 26 கோடியே 28 லட்சம் ரூபாய் செலவில் தீக்காய சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்படும். சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு 366 பல்வேறு பணியிடங்கள் ஏற்படுத்தப்படும். மகப்பேறு முன்கவனிப்பு வார்டுகள் கடலூர், சிதம்பரம், திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர், கோவில்பட்டி, ஈரோடு, திருப்பூர், பட்டுக்கோட்டை, மயிலாடுதுறை மற்றும் காஞ்சீபுரம் ஆகிய 11 மாவட்ட மற்றும் வட்ட மருத்துவமனைகளில் தமிழகத்தில் முதல் முறையாக இந்திய அளவில் ஒரு முன்னோடி முயற்சியாக டி.என்.பி. மருத்துவ பட்ட மேற்படிப்பு தொடங்கப்படும். தேனி மற்றும் திருவண்ணாமலையில் 50 படுக்கைகள் கொண்ட சித்தா, யோகா மற்றும் இயற்கை மருத்துவத்துடன் இணைந்த ஆயுஷ் மருத்துவமனை ஏற்படுத்தப்படும். 14 அரசு மருத்துவமனைகளில் மகப்பேறு முன்கவனிப்பு வார்டுகள் மற்றும் 12 அரசு மருத்துவமனைகளில் பிரசவித்த தாய்மார்களுக்கான பின்கவனிப்பு வார்டுகள் 123 செவிலியர் பணியிடங்களுடன் ஏற்படுத்தப்படும். 108 ஆம்புலன்ஸ் அனைத்து மாவட்டங்களிலும், மாவட்டத்திற்கு ஒன்று வீதம் வட்டார நவீன கண்பரிசோதனை மற்றும் சிகிச்சை மையம் ஏற்படுத்தப்படும். '108' ஆம்புலன்ஸ் சேவை திட்டத்திற்கு 5 கோடி ரூபாய் செலவில் 50 புதிய வாகனங்கள் வழங்கப்படும். சென்னை மாநகரில் புளியந்தோப்பு, ராதாகிருஷ்ணன் நகர், அயனாவரம், வடபழனி, அடையார், மீர்ஷாகிப்பேட்டை மற்றும் சஞ்ஜீவிராயன் பேட்டை ஆகிய இடங்களில் உள்ள நகர்ப்புற சமுதாய சுகாதார மையங்கள் வலுப்படுத்தப்படும். பல் சிகிச்சைப் பிரிவு மேலும் 9 மேம்படுத்தப்பட்ட நகர்ப்புற சமுதாய சுகாதார நிலையங்களுக்கு மருந்துகளுக்காக 90 லட்சம் ரூபாய் கூடுதல் நிதி வழங்கப்பட்டும், இளம் சிசு நிலைப்படுத்துதல் பிரிவுகளுக்கு 48 செவிலியர்கள் நியமனம் செய்யப்பட்டும் அவை வலுப்படுத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments: