Thursday, 3 August 2017

BSMS ADMISSION 2017-2017 | சித்த மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம் தொடங்கியது. கடைசி நாள் 30-08-2017

சித்த மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம் தொடங்கியது 30-ந் தேதி கடைசி நாள் | சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி, யோகா, இயற்கை மருத்துவம், ஓமியோபதி ஆகிய இந்திய முறை மருத்துவ படிப்புகளுக்கு 6 அரசு கல்லூரிகளும், 22 தனியார் கல்லூரிகளும் உள்ளன. இந்த கல்லூரிகளில் 1,250 இடங்கள் உள்ளன. இந்த படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் வினியோகம் நேற்று சென்னை அரும்பாக்கம் அரசு சித்த மருத்துவ கல்லூரியில் தொடங்கியது. பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டு விண்ணப்பங்களை பெற்றுச்சென்றனர். இந்த விண்ணப்ப வினியோகம் வருகிற 30-ந் தேதி வரை வழங்கப்படும். அன்றுதான் பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் அரும்பாக்கத்தில் உள்ள தேர்வுக்குழுவுக்கு வந்து சேர கடைசி நாள். மேலும் விவரங்களை www.tnhealth.org என்ற இணைய தளத்திலும் தெரிந்து கொள்ளலாம்.

No comments: