Sunday, 24 September 2017

TRB SPECIAL TEACHER (SEWING) 2017 - ANSWER KEY DOWNLOAD - TEACHERS CARE ACADEMY, KANCHEEPURAM

TRB SPECIAL TEACHER (SEWING) 2017 - ANSWER KEY DOWNLOAD - TEACHERS CARE ACADEMY, KANCHEEPURAM | TEACHER'S CARE ACADEMY KANCHIPURAM TNPSC–TRB–TET-SPECIAL TEACHER - COACHING CENTER DR.P.S.SRINIVASAN MPL HR.SEC. SCHOOL, KANCHIPURAM-631501 K.A.P.VISVANATHAM HR. SEC. SCHOOL, THILLAI NAGAR, TIRUCHIRAPALLI - 620018 CELL: 9566535080, 9952167782, 9786269980

  1. TRB SPECIAL TEACHER (SEWING) 2017 - ANSWER KEY DOWNLOAD - TEACHERS CARE ACADEMY, KANCHEEPURAM | TEACHER'S CARE ACADEMY KANCHIPURAM TNPSC–TRB–TET-SPECIAL TEACHER - COACHING CENTER DR.P.S.SRINIVASAN MPL HR.SEC. SCHOOL, KANCHIPURAM-631501 K.A.P.VISVANATHAM HR. SEC. SCHOOL, THILLAI NAGAR, TIRUCHIRAPALLI - 620018 CELL: 9566535080, 9952167782, 9786269980  | CLICK HERE
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TRB SPECIAL TEACHER _PHYSICAL SCIENCE _ TENTATIVE ANSWER KEY - 2017 - SHIVALAYA ACADEMY VILLUPURAM | Dr J.MANOHAR-Dr A.SURESH-Dr V.MANIVANNAN.

TRB SPECIAL TEACHER _PHYSICAL SCIENCE _ TENTATIVE ANSWER KEY - 2017 - SHIVALAYA ACADEMY VILLUPURAM | Dr J.MANOHAR-Dr A.SURESH-Dr V.MANIVANNAN.Mobile No: 9597026162, 7845595520

  1. TRB SPECIAL TEACHER _PHYSICAL SCIENCE _ TENTATIVE ANSWER KEY - 2017 - SHIVALAYA ACADEMY VILLUPURAM | Dr J.MANOHAR - Dr A.SURESH - Dr V.MANIVANNAN Mobile No: 9597026162, 7845595520  | CLICK HERE


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TRB SPECIAL EXAM ANSWER KEY DOWNLOAD | தையல், ஓவியம், உடற்கல்வி சிறப்பாசிரியர் தேர்வு 94 சதவீதம் பேர் பங்கேற்பு.


தையல், ஓவியம், உடற்கல்வி சிறப்பாசிரியர் தேர்வு 94 சதவீதம் பேர் பங்கேற்பு | அரசு பள்ளிகளில் தையல், ஓவியம், இசை, உடற்கல்வி ஆகிய சிறப்பாசிரியர் காலியிடங்களை நிரப்ப நேற்று எழுத்துத் தேர்வு நடைபெற்றது. அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 1,325 சிறப்பாசிரியர் இடங்களை நிரப்ப செப். 23-ம் தேதி தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. இந்த தேர்வில் பங்கேற்க விண்ணப்பித்தவர் களில், 37,951 பேருக்கு நுழைவு சீட்டு வழங்கப்பட்டது. இந்த நிலையில் தேர்வை நடத்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்தது. இந்த தடை நேற்று முன்தினம் விலக்கப்பட்டதையடுத்து, திட்டமிட்டபடி நேற்று தேர்வு நடைபெற்றது. மொத்தம் 11 மாவட்டங்களில் 106 மையங்களில் தேர்வு நடைபெற்றது. சென்னையில் அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தி.நகர் சாரதா வித்யாலயா பள்ளி, ஹோலி ஏஞ்சல்ஸ் மேல்நிலைப் பள்ளி, கோடம்பாக்கம் பதிப்பகச்செம்மல் கணபதி அரசு மேல்நிலைப் பள்ளி, சைதாப்பேட்டை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, நுங்கம்பாக்கம் வித்யோதயா பள்ளி உள்பட 14 மையங்களில் தேர்வு நடைபெற்றது. நேற்று காலை 10 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெற்ற தேர்வில் நுழைவுச் சீட்டு பெற்றவர்களில் 94 சதவீதம் பேர் பங்கேற்றனர். "கேள்வித்தாள் கடினமாக இல்லை, அதே வேளையில் சுலபமாகவும் இல்லை" என தேர்வில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர். தேர்வு முடிவுகள் வெளியான பிறகு 1 காலியிடத்துக்கு 2 பேர் என்ற விகிதாச்சார அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள். அதன் பின்னர் பதிவு மூப்பு, இடஒதுக்கீடு அடிப்படையில் பணி வழங்கப்படும். அரசுப் பள்ளிகளில் சிறப்பாசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு நடத்துவது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன்னர் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பணி வழங்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.CLICK HERE

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பாடத்திட்டங்களை மாற்றுவது என பல்கலைக்கழகத்தின் கல்விக் குழு கூட்டத்தில் (அகடெமிக் கவுன்சில்) முடிவு செய்யப் பட்டுள்ளது.


3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பாடத்திட்டம் மாற்றம் | சென்னை பல்கலைக்கழக கல்விக் குழு முடிவு | 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பாடத்திட்டங்களை மாற்றுவது என பல்கலைக்கழகத்தின் கல்விக் குழு கூட்டத்தில் (அகடெமிக் கவுன்சில்) முடிவு செய்யப் பட்டுள்ளது. சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பி. துரைசாமி பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக பல்கலைக்கழகத்தின் கல்விக் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு பி.துரைசாமி தலைமை தாங்கினார். கல்விக் குழுவின் உறுப்பினர்கள், பல்கலைக்கழக பதிவாளர் எஸ். கருணாநிதி ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. குறிப்பாக பல்கலைக்கழக மானியக்குழு அறிவுறுத்தியபடி, தேர்வுகளில் தோல்வியடையும் மாணவர்கள் கல்லூரி முடிந்து 2 ஆண்டுகளுக்குள் வெற்றி பெற வேண்டும் என்ற விதியை அமல்படுத்துவது என முடிவு செய்யப்பட்டது. விபத்து, குழந்தைப்பேறு போன்ற தவிர்க்க முடியாத சமயங்களில் கூடுதலாக 1 ஆண்டு நீட்டிப்பு வழங்கப்படும். மேலும் பாடத்திட்டத்தில் ஒழுக்கம், ஊழல் தடுப்பு, ஊழல் தடுப்பு அமைப்புகளின் செயல்பாடுகள், சிபிஐ செயல்பாடு ஆகியவற்றை சேர்க்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு புதிய தொழில்நுட்பங்களை கற்றுக் கொடுக்கும் வகையில் குறைந்தது 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், 2019-19 கல்வியாண்டு முதல் பல்கலைக்கழக ஆராய்ச்சி துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பின்னர் உறுப்பினர்கள் கொண்டுவந்த தனி தீர்மானங்கள் மீது விவாதம் நடத்தப்பட்டது. அப்போது வணிகவியல் பாடத்தில் ஜிஎஸ்டி தொடர்பான பாடங்களை சேர்க்க வேண்டும் என உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். இதை ஏற்றுக் கொண்ட துணைவேந்தர், நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, 23 September 2017

G.O (3D)29 DSE Date:20.09.2017- Direct Recruitment- Tamil Nadu School Educational Service- Post of District Educational Officer- TNPSC 2012-Approval of Selected Candidates to the post District Educational officer

G.O (3D)29 DSE Date:20.09.2017- Direct Recruitment- Tamil Nadu School Educational Service- Post of District Educational Officer- TNPSC 2012-Approval of Selected Candidates to the post District Educational officer
  1. G.O (3D) 29 DSE Date:20.09.2017- Direct Recruitment- Tamil Nadu School Educational Service- Post of District Educational Officer- TNPSC 2012-Approval of Selected Candidates to the post District Educational officer  | CLICK HERE
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TRB-PHYSICAL EDUCATION TEACHERS 2017 ANSWER KEY | DR.S.SAMSUDEEN - KSR ACADEMY - MADURAI - TRB-PHYSICAL EDUCATION TEACHER ANSWER KEY KSR ACADEMY - MADURAI DR.S.SAMSUDEEN

TRB-PHYSICAL EDUCATION TEACHERS 2017 ANSWER KEY | DR.S.SAMSUDEEN - KSR ACADEMY - MADURAI - TRB-PHYSICAL EDUCATION TEACHER ANSWER KEY KSR ACADEMY - MADURAI DR.S.SAMSUDEEN
  1. TRB-PHYSICAL EDUCATION TEACHERS 2017 ANSWER KEY | DR.S.SAMSUDEEN - KSR ACADEMY - MADURAI - TRB-PHYSICAL EDUCATION TEACHER ANSWER KEY KSR ACADEMY - MADURAI DR.S.SAMSUDEEN  | CLICK HERE
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TRB SPECIAL TEACHER _PHYSICAL SCIENCE QUESTION PAPER AND ANSWER KEY - 2017 - VEERAN PHYSICAL DIRECTOR

TRB SPECIAL TEACHER _PHYSICAL SCIENCE QUESTION PAPER AND ANSWER KEY - 2017 - VEERAN  PHYSICAL DIRECTOR

  1. TRB SPECIAL TEACHER _PHYSICAL SCIENCE QUESTION PAPER AND ANSWER KEY - 2017 - VEERAN PHYSICAL DIRECTOR 9884634347  | CLICK HERE
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TRB SPECIAL TEACHER (DRAWING) 2017 - ANSWER KEY - TEACHERS CARE ACADEMY, KANCHEEPURAM

TRB SPECIAL TEACHER (DRAWING) 2017 - ANSWER KEY - TEACHERS CARE ACADEMY, KANCHEEPURAM |TEACHER'S CARE ACADEMY KANCHIPURAM TNPSC–TRB–TET-SPECIAL TEACHER - COACHING CENTER DR.P.S.SRINIVASAN MPL HR.SEC. SCHOOL, KANCHIPURAM-631501 K.A.P.VISVANATHAM HR. SEC. SCHOOL, THILLAI NAGAR, TIRUCHIRAPALLI - 620018 CELL: 9566535080, 9952167782, 9786269980

  1. TRB SPECIAL TEACHER (DRAWING) 2017 - ANSWER KEY - TEACHERS CARE ACADEMY, KANCHEEPURAM |TEACHER'S CARE ACADEMY KANCHIPURAM TNPSC–TRB–TET-SPECIAL TEACHER - COACHING CENTER DR.P.S.SRINIVASAN MPL HR.SEC. SCHOOL, KANCHIPURAM-631501 K.A.P.VISVANATHAM HR. SEC. SCHOOL, THILLAI NAGAR, TIRUCHIRAPALLI - 620018 CELL: 9566535080, 9952167782, 9786269980  | CLICK HERE
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, 22 September 2017

அரசு ஊழியர்களுக்கான புதிய ஊதியம் அக். 13-க்குள் முடிவு எடுக்க தமிழக அரசுக்கு கெடு | அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதை நிறுத்தி வைக்க வேண்டும் | வேலைநிறுத்த நாட்களுக்கான சம்பளத்தை பிடித்தம் செய்யக் கூடாது | நீதிபதிகள் உத்தரவு

§பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடந்த 7-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் டி.சேகரன், உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து நீதிமன்ற தடை உத்தரவை ஏற்று அரசு ஊழியர்கள் போராட்டத்தை தற்காலிகமாக தள்ளிவைத்தனர். இந்நிலையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு எதிரான வழக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி கே.கே. சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
§அப்போது தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நேரில் ஆஜரானார். அரசு தரப்பு கருத்துகளை அறிக்கையாக சமர்ப்பித்தார். 
நீதிபதிகள் பிறப்பித்த இடைக்கால உத்தரவு: 
§ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள குழு அரசிடம் செப். 30-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

§அந்த அறிக்கையை ஏற்பதா? வேண்டாமா? என்பது தொடர்பாக தமிழக அரசு அக்டோபர் 13-ம் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும்.
§அதற்குள் முடிவு எடுக்காவிட்டால், ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்.
§வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதை மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்க வேண்டும்.
§வேலைநிறுத்த நாட்களுக்கான சம்பளத்தை பிடித்தம் செய்யக் கூடாது. அதற்கு பதிலாக சனிக்கிழமைகளில் வேலைக்குச் சென்று வேலைநிறுத்த காலத்தை சமன் செய்ய அனுமதிக்க வேண்டும்.
§அடுத்த விசாரணை அக்டோபர் 23-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதிகளில் ஒருவரான கே.கே.சசிதரன் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாறுதலாகி செல்வதால், இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரிக்க இரு தரப்பும் தலைமை நீதிபதியிடம் மனு அளிக்கலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
 DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

2,315 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணிநியமன ஆணை | அனைத்து பள்ளிகளிலும் யோகா வகுப்புகள் | ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறந்த 4 பள்ளிகளுக்கு புதுமைப்பள்ளி விருது | சிறந்த 6 ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் விருது | முதல்வர் கே.பழனிசாமி அறிவித்தார்.

2,315 ஆசிரியர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கும் விழா | அனைத்து பள்ளிகளிலும் யோகா வகுப்புகள் தொடங்கப்படும் | முதல்வர் கே.பழனிசாமி அறிவிப்பு மாணவர்களின் திறனை வளர்க்கும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் யோகா வகுப்புகள் தொடங்கப்படும் என்று முதல்வர் கே.பழனிசாமி அறிவித்தார். ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய போட்டித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட 2,315 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கும், 58 சிறப்பு கல்வியியல் ஆசிரியர்களுக்கும் பணிநியமன ஆணை வழங்கும் விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடைபெற்றது. பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், ஒவ்வொரு பாடத்திலும் முதலிடத்தைப் பிடித்த 11 ஆசிரியர்களுக்கு முதல்வர் கே.பழனிசாமி பணிநியமன ஆணையை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: ஆசிரியர் பணி என்பது ஒரு புனிதமான பணி. அரசியல்வாதிகள், மருத்துவர்கள், இன்ஜினீயர்கள், வழக்கறிஞர்கள் என அனைவரையும் உருவாக்குவது ஆசிரியர்கள்தான். அப்படிப்பட்ட புனிதமான பணிக்கு தேர்வுசெய்யப்பட்டு பணிநியமன ஆணை பெற்றுள்ள ஆசிரியர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஜெயலலிதாவின் அரசு கல்வித் துறைக்கு தொடர்ந்து முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. கடந்த 6 ஆண்டுகளில் 227 புதிய தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன. 116 தொடக்கப் பள்ளிகள், 829 நடுநிலைப் பள்ளிகள், 402 உயர்நிலைப் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. அரசு பள்ளிகளில் அவ்வப்போது ஏற்படும் காலியிடங்கள் உடனுக்குடன் நிரப்பப்பட்டு வருகின்றன. கடந்த 6 ஆண்டுகளில் 40,333 முழுநேர ஆசிரியர்களும், 15,169 பகுதிநேர ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக கல்வித் துறை வரலாற்றிலேயே முதல்முறையாக, சிறப்பு குழந்தைகளுக்கு பயிற்றுவிக்க, 588 சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்தும் வகையில் ரூ.437 கோடி செலவில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன. அறிவியல், தொழில்நுட்பம், கலை, இலக்கிய துறைகளில் சிறந்து விளங்கும் 100 அரசு பள்ளி மாணவர்களை ஆண்டுதோறும் தேர்வு செய்து அவர்கள் வெளிநாடுகளில் கல்விப் பயணத்துக்கு செல்ல வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறந்த 4 பள்ளிகளுக்கு புதுமைப்பள்ளி விருதும், சிறந்த 6 ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் விருதும் இந்த ஆண்டு முதல் வழங்கப்படும். கிராமப்புற மாணவர்களுக்கு கணினி மூலம் பாடங்களை பயிற்றுவிக்கும் வகையில் முதல்கட்டமாக 3 ஆயிரம் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் தலா ரூ.2 லட்சம் செலவில் 'ஸ்மார்ட் கிளாஸ்' வகுப்பறைகள் ஏற்படுத்தப்படும். தமிழக மாணவர்கள் எத்தகைய போட்டித் தேர்வுகளையும் தைரியத்தோடு எதிர்கொள்ளும் வகையில் அடுத்த ஆண்டு முதல் பாடத்திட்டம் படிப்படியாக மாற்றியமைக்கப்பட உள்ளது. மேலும், மாணவர்களின் திறனை வளர்க்கவும், அவர்கள் மனஅமைதி, உடல் வலிமை பெறவும் அனைத்துப் பள்ளிகளிலும் யோகா வகுப்புகள் தொடங்கப்படும். இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, "இந்த அரசு ஜெயலலிதாவின் திட்டங்களையும், சாதனைகளையும் மக்களிடம் முன்னெடுத்து செல்கிறது. அமைச்சர் செங்கோட்டையன் கட்சிப் பணி என்றாலும் சரி அரசுப் பணி என்றாலும் சரி ஜெட் வேகத்தில் செயல்படக் கூடியவர். அவரைப் போலவே அவர் வகிக்கின்ற பள்ளிக்கல்வித் துறையும் ஜெட் வேகத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறது" என்றார். இந்த விழாவில் டி.ஜெயக்குமார், திண்டுக்கல் சி.சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட அமைச்சர்கள், பாடநூல் கழக தலைவர் பா.வளர்மதி, நிர்வாக இயக்குநர் டி.ஜெகநாதன், கல்வித் துறை இயக்குநர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முன்னதாக, பள்ளிக்கல்வித் துறையின் முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் வரவேற்றார். நிறைவாக பள்ளிக்கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோ வன் நன்றி கூறினார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 19 September 2017

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு ரூ.125 கோடி வழங்க ஒப்புதல் உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு ரூ.125 கோடி வழங்க ஒப்புதல் உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு | அரசு ஊழியர்களுக்கான தன்பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின்கீழ் 3,288 ஊழியர்களுக்கு ரூ.125.24 கோடி வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதிலளித்துள்ளது. நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோருக்கும் மனநல ஆலோசனை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் ஏ.பி.சூர்யபிரகாசம் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த என்.கிருபாகரன் இது தொடர்பாக ஆசிரியர் சங்கங்களுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பினார். மேலும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் தன்பங்களிப்பு ஓய்வூதியம் குறித்தும், அதில் அரசின் பங்களிப்பு என்ன என்பது குறித்தும் கேள்விகளை எழுப்பியிருந்தார். இந்நிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் வெங்கட்ரமணி மற்றும் அரசு கூடுதல் பிளீடர் ப.சஞ்சய் காந்தி ஆகியோர் ஆஜராகி நிதித்துறை (செலவின பிரிவு) செயலாளர் எம்.ஏ.சித்திக் சார்பில் பதில் மனுவை தாக்கல் செய்தனர். அந்த பதில் மனுவில் கூறியிருப்பதாவது: ஒவ்வொரு அரசு ஊழியரும் தன்பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்துக்கு பங்களிப்பாக தனது மாதாந்திர அடிப்படை சம்பளத்தில் இருந்து 10 சதவீதத்தை செலுத்தி வருகின்றனர். ஊழியர்களின் பங்களிப்பு தொகையோடு, அரசும் தன் பங்களிப்பை தவறாமல் பொதுக் கணக்கில் செலுத்தி வருகிறது. கடந்த 31.3.17-ம் தேதி வரை இந்த தொகை வட்டியுடன் சேர்த்து ரூ. 18 ஆயிரத்து 16 கோடியாக உள்ளது. 2016-17-க்கான கணக்கு விவரங்களும் தனித்தனியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இணையதளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பணி ஓய்வு, திடீர் மரணம், பணி நீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு உடனடியாக அவர்களின் கணக்கு முடிக்கப்பட்டு ஓய்வூதியத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. கருவூல கணக்குத் துறை அறிக்கையின்படி கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி வரை தன்பங்களிப்பு ஓய்வூதிய கணக்கை முடித்து வழங்கக்கோரி 7 ஆயிரத்து 409 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அதன்படி ஓய்வுபெற்ற, ராஜினாமா செய்த மற்றும் இறந்த ஊழியர்களின் சார்பில் 3,288 விண்ணப்பங்கள் பெறப்பட்டு ரூ.125 கோடியே 24 லட்சத்து 24 ஆயிரத்து 317-க்கு இறுதி ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசு இந்த திட்டத்தின் கீழ் தொய்வின்றி தனது பங்களிப்பை வழங்கி வருகிறது என அதில் தெரிவித்து இருந்தார். இதையடுத்து விசாரணையை வரும் 22-ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனம் | தேர்வு நடந்த 2 மாதத்தில் இறுதி பட்டியல் வெளியீடு | ஆச்சரியப்படுத்திய ஆசிரியர் தேர்வு வாரியம் | அடுத்த தேர்வு நடத்தவும் தயார் .

முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனம் தேர்வு நடந்த 2 மாதத்தில் இறுதி பட்டியல் வெளியீடு ஆச்சரியப்படுத்திய ஆசிரியர் தேர்வு வாரியம் | அரசு பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் நேரடி நியமனத்துக்கு எழுத்துத்தேர்வு முடிந்து இரண்டே மாதத்தில் இறுதி தேர்வு பட்டியலை வெளியிட்டு தேர்வர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது ஆசிரியர் தேர்வு வாரியம். தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாகவுள்ள காலியாகவுள்ள 1,663 முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1) பணியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 9.5.2017 அன்று அறிவிப்பு வெளியிட்டது. பின்னர் புதிதாக 1712 காலியிடங்கள் சேர்க்கப்பட்டதால் மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை 3,375 ஆக அதிகரித்து. இத்தேர்வுக்கு 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். எழுத்துத்தேர்வு ஜூலை 1-ம் தேதி நடத்தப்பட்டது. தேர்வின் முடிவுகள் அடுத்த 41-வது நாளில் அதாவது ஆகஸ்ட் 11-ம் தேதி வெளியிடப்பட்டது. எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆகஸ்ட் 28, 29-ம் தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. அப்போது, அசல் சான்றிதழ்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டதுடன் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு, பணி அனுபவம் ஆகியவற்றுக்கு உரிய வெயிட்டேஜ் மதிப்பெண்கள் அளிக்கப்பட்டன. இந்த நிலையில், பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் இறுதி தேர்வு பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் 12-ம் தேதி வெளியிட்டது. முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு எழுத்துத் தேர்வு நடத்தி இரண்டே மாதத்தில் இறுதி தேர்வு பட்டியலை வெளியிட்டு தேர்வர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது ஆசிரியர் தேர்வு வாரியம். இதற்காக, பணிக்கு தேர்வானவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு பாராட்டு தெரிவித்தனர். இதற்கிடையே மொத்தம் 3,375 காலியிடங்கள் அறிவிக்கப்பட்ட போதிலும், 2315 பேர் மட்டுமே எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தகுதியானோர் கிடைக்காததால் 1066 இடங்கள் காலியாகவுள்ளன. (எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் பெற வேண்டும். எஸ்சி வகுப்பினர் 45 சதவீதமும் எஸ்டி பிரிவினர் 40 சதவீதமும் எடுக்க வேண்டும்) வேதியியல், பொருளாதாரம், தமிழ் உள்ளிட்ட பாடங்களில் அதிக காலியிடங்கள் உள்ளன. வேதியியல் பாடத்தில் 278 காலியிடங்களும், பொருளாதாரத்தில் 261 காலியிடங்களும், தமிழில் 157 காலியிடங்களும் உள்ளன. இதேபோல் வரலாறு உள்ளிட்ட இதர பாடங்களிலும் கணிசமான காலியிடங்கள் இருக்கின்றன. பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் தங்களுக்குப் பிடித்தமான மேல்நிலைப்பள்ளியை தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களில் ஆன்லைன் வழியில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டுவிழா அரங்கில் வியாழக்கிழமை நடைபெறும் விழாவில் முதல்வர் கே.பழனிசாமி முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணையை நேரில் வழங்குகிறார். இந்த நிலையில், தகுதியானோர் கிடைக்காத காரணத்தினால் காலியாகவுள்ள 1065 காலியிடங்களை நிரப்ப விரைவில் அடுத்த தேர்வு நடத்தப்படுமா என்ற எதிர்பார்ப்புக்கு முதுகலை பட்டதாரிகள் மத்தியில் எழுந்துள்ளது. இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் டி.ஜெகந்நாதனிடம் கேட்டபோது, "தேர்வு நடத்தி தகுதியானோரை தேர்வுசெய்து பட்டியலை பள்ளிக்கல்வித்துறையிடம் ஒப்படைத்துவிட்டோம். எஞ்சியுள்ள காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்து கொடுக்குமாறு அத்துறை கேட்கும் பட்சத்தில் தேர்வு நடத்த நாங்கள் தயாராக உள்ளோம்" என்றார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

திறன் மேம்பாட்டு போட்டிக்கு பாலிடெக்னிக், ஐடிஐ மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

திறன் மேம்பாட்டு போட்டிக்கு விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சியர் வே.அன்புசெல்வன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பொறியியல், பாலிடெக்னிக், ஐடிஐ மாணவர்கள், தொழில் பழகுநர்கள், தொழிற்சாலை பணியாளர்களின் புதிய கண்டு பிடிப்புகளை வெளிப்படுத்தும் வகையில் மாவட்ட அளவில் திறனாய்வு போட்டிகள் செப். 27-ல் நடத்தப்பட உள்ளன. கண்டுபிடிப்புகள், வருங்காலத்துக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கக்கூடிய தொழில்நுட்பங்கள், புதுவகை சாப்ட்வேர் கண்டுபிடிப்புக்கான செயல்விளக்கத்துடன் கலந்து கொள்ளலாம். முதலிடம் பெறுவோருக்கு பரிசும், சான்றிதழும் வழங்கப்படும். அவர்கள் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறும் மாநில அளவிலான திறனாய்வு போட்டிகளில் கலந்து கொள்ளலாம் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர் www.skiltraining.tn.gov.in என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம். 044-22501530 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 18 September 2017

POLYTECHNIC TRB –PHYSICS(2017) BOOKLET SERIES D ANSWER KEY DOWNLOAD | K.S ACADEMY, SALEM

POLYTECHNIC TRB –PHYSICS(2017) BOOKLET SERIES D ANSWER KEY DOWNLOAD | K.S ACADEMY, SALEM-POLYTECHNIC TRB ANSWER KEY | PQR 2017 PHYSICS TENTATIVE KEY PUBLISHED ON 17-09-2017(3 PM) (TRB ANSWER KEY IS FINAL) POLYTECHNIC TRB –PHYSICS(2017) BOOKLET SERIES D ANSWER KEY.
  1. POLYTECHNIC TRB – PHYSICS(2017) BOOKLET SERIES D ANSWER KEY DOWNLOAD | K.S ACADEMY, SALEM  | CLICK HERE
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பாடத்திட்டத்தில் மாற்றம் குறித்து நவம்பரில் மக்கள் கருத்து கேட்கப்படும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

பாடத்திட்டத்தில் மாற்றம் குறித்து நவம்பரில் மக்கள் கருத்து கேட்கப்படும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் | 'பாடத்திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு, அவை நவம்பர் மாதம் வெளியிடப்படும். அதன் பிறகு, கல்வியாளர்கள், பொதுமக்களின் கருத்துகள் கேட்கப்பட்டு தேவைப்படும் மாற்றங்கள் செய்யப்படும்' என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். இதுதொடர்பாக ஈரோடு மாவட்டம் கோபியில் நடந்த விழாவில், அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது: ஏழைகள் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என ஜெயலலிதா கனவு கண்டார். அதை கல்வி மூலம் செயல்படுத்த முடியும் என்பதால், பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. மாவட்ட நூலகங்களில் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுபவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த பணி அடுத்த மாதம் 15-ம் தேதி தொடங்கும். இந்த பயிற்சி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தினமும் 3 மணி நேரம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெறும். நீட் தேர்வு போன்ற போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களை தயார் செய்ய 412 பயிற்சி மையங்கள் தொடங்கப்பட உள்ளது. இந்த பணி அக்டோபர் மாதம் இறுதிக்குள் முடிவடையும். பாடதிட்டம் மாற்றம் மூலம், கல்வி கற்கும் அனைவருக்கும் வேலை வழங்கும் உத்தரவாதத்தை கொடுக்க முடியும். பாடத்திட்டம் மாற்றம் செய்வதற்கு முன் அந்த பாடங்கள் நவம்பரில் வெளியிடப்படும். கல்வியாளர்கள், பொதுமக்களின் கருத்துகள் பெறப்பட்டு தேவைப்படும் மாற்றங்கள் செய்யப்படும். மலேசியாவில் தமிழ் கற்றுகொடுப்பதற்கு ஆசிரியர்கள் கேட்டுள்ளனர். இதற்கு தமிழக அரசு தயாராக உள்ளது. வேறு எந்த நாட்டிலும் தமிழ்மொழியை கற்றுக்கொடுக்கவும் இந்த அரசு தயாராக இருக்கிறது. டெல்லியில் 7 தமிழ் பள்ளிகள் உள்ளன. இன்னும் 1 பள்ளி தொடங்க ரூ.5 கோடியை வழங்க அரசு தயாராக உள்ளது என்றார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Sunday, 17 September 2017

டிஎன்பிஎஸ்சி தகவல் குரூப் 4-ல் அடங்கிய 3,682 இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன

குரூப் 4-ல் 3,682 பணியிடங்கள் நிரப்பப்பட்டன டிஎன்பிஎஸ்சி தகவல் குரூப் 4-ல் அடங்கிய 3,682 இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த ஆணையத்தின் செயலாளர் எம். விஜயகுமார் நேற்று வெளியிட்ட செய்தி: குரூப் 4-ல் அடங்கிய இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் (3-ம் நிலை) ஆகிய பதவிகளுக்கு எழுத்துத்தேர்வு கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்றது. தேர்வு முடிவுகள் அடிப்படையில் ஜூலை 17 முதல் செப்டம்பர் 6 வரை கலந்தாய்வு நடைபெற்றது. இளநிலை உதவியாளர் பதவிக்கான முதல் கட்ட கலந்தாய்வில் 2,708 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. தட்டச்சர் பதவிக்கான கலந்தாய்வில் 1582 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. சுருக்கெழுத்து தட்டச்சர் (3-ம் நிலை) கலந்தாய்வில் 392 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன அலுவலர் மூலம் பணி நியமன ஆணைகள் வழங்கப்படும். நிரப்பப்படாமல் உள்ள காலிப் பணியிடங்களுக்கு தொடர்ந்து கலந்தாய்வு நடை பெறும். இவ்வாறு அதில் தெரிவிக் கப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

நெட் தேர்வுக்கு இலவச பயிற்சி. விண்ணப்ப விநியோகம் செப். 18-ம் தேதி தொடங்குகிறது.

நெட் தேர்வுக்கு இலவச பயிற்சி | பல்கலைக்கழகத்தின் மாணவர் ஆலோசனை மையம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: பல்கலைக்கழக மானியக் குழு சார்பில் நடத்தப்படும் நெட் தேர்வுக்கான (முதல் தாள்) இலவச பயிற்சி வகுப்பில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் சிறுபான்மையின பிரிவு மாணவர்கள் பங்கேற்கலாம். அக். 7 முதல் 29-ம் தேதி வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முதல் தாளுக்கான பயிற்சி வகுப்புகள் நடக்கும். இதற்கான விண்ணப்ப விநியோகம் செப். 18-ம் தேதி தொடங்குகிறது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை செப். 28-ம் தேதி மாலை 4 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044 25399518 என்ற எண்ணிலோ www.unom.ac.in இணையதளத்திலோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

சிறுபான்மையினர் கல்வி உதவிக்கு விண்ணப்பிக்க அவகாசம் செப்டம்பர் 30-ம் தேதி வரை நீட்டிப்பு

சிறுபான்மையினர் கல்வி உதவிக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு | சிறுபான்மையின மாணவ, மாணவியர், மத்திய அரசின் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:திருவள்ளூர் மாவட்டத்தில் வசிக்கும் சிறுபான்மையின மதத்தை சேர்ந்த மற்றும் 2017-18 கல்வி ஆண்டில் 1-ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்புகள் வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. அதை பெற www.scholarships.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அதற்கான காலக்கெடு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இது, தற்போது செப்டம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை சிறுபான்மையின மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

நர்ஸிங், பி.பார்ம்-க்கு 19-ல் கலந்தாய்வு தொடக்கம் இணையதளத்தில் அழைப்பு கடிதம்

நர்ஸிங், பி.பார்ம்-க்கு 19-ல் கலந்தாய்வு தொடக்கம் இணையதளத்தில் அழைப்பு கடிதம் | தமிழகத்தில் அரசு, தனியார் கல்லூரிகளில் மருத்துவம் சார்ந்த பிஎஸ்சி நர்ஸிங், பி.பார்ம், பிபிடி, பிஏஎஸ்எல்பி (செவித்திறன், பேச்சு மற்றும் மொழி நோய் குறியியல்), பிஎஸ்சி ரேடியாலஜி மற்றும் இமேஜிங் டெக்னாலஜி, பிஎஸ்சி ரேடியோதெரபி டெக்னாலஜி, பிஎஸ்சி கார்டியோ பல்மோனரி பெர்பியூசன் டெக்னாலஜி, பி.ஆப்டம், பிஓடி ஆகிய 9 பட்டப் படிப்புகள் உள்ளன. அரசு மருத்துவக் கல்லூரிகளில் 484 இடங்களும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 5,479 இடங்களும் இருக்கின்றன. இந்தப் படிப்புகளுக்கு 2017-18 கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் தமிழகம் முழுவதும் உள்ள 22 அரசு மருத்துவக் கல்லூரிகளில் கடந்த மாதம் 7-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி வரை நடந்தது. சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் தகுதியான 25,293 பேருக்கான தரவரிசைப் பட்டி யல் வெளியிடப்பட்டது. இதில் கட்-ஆப் மதிப்பெண் 199 முதல் 75 வரை உள்ள மாணவ, மாணவிகள் இடம் பெற்றுள்ளனர். கட்-ஆப் மதிப்பெண் 199 எடுத்த டி.சாமுவேல் என்ற மாணவர் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். இந்நிலையில், இந்த 9 பட்டப் படிப்புகளுக்கான சிறப்பு பிரிவினர்களுக்கான கலந்தாய்வு வரும் 19-ம் தேதி சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நடக்கிறது. செப்.26 வரை நடைபெறும் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு 20-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை நடைபெற உள்ளது. தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்றுள்ள மாணவ, மாணவிகள் தங்களுக்கான அழைப்புக் கடிதத்தை www.tnhealth.org மற்றும் www.tnmedicalselection.org என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் (டிஎம்இ) அறிவித்துள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழ்நாடு சாரண, சாரணியர் இயக்கத் தலைவர் பதவிக்கான தேர்தலில் பள்ளிக்கல்வி முன்னாள் இயக்குநர் பி.மணி வெற்றி பெற்றார்.

தமிழ்நாடு சாரணர் இயக்க தலைவராக மணி தேர்வு | தமிழ்நாடு சாரண, சாரணியர் இயக்கத் தலைவர் பதவிக்கான தேர்தலில் பள்ளிக்கல்வி முன்னாள் இயக்குநர் பி.மணி வெற்றி பெற்றார். இப்பதவிக்கு போட்டியிட்ட பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தோல்வி அடைந்தார்.தமிழ்நாடு சாரணர் இயக்கத்தின் தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கான தேர்தல் கடைசியாக 2010-ம் ஆண்டு நடந்தது. அதைத் தொடர்ந்து, 2013-ம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தலைவர் பதவிக்கு போட்டி உருவாகி, தேர்தல் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இதன் காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது.இந்நிலையில், தமிழ்நாடு சாரணர் அமைப்பின் செயற்குழு கடந்த மார்ச் 18-ம் தேதி கூடியது. அதைத்தொடர்ந்து, தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு செப்டம்பர் 16-ம் தேதி தேர்தல் நடத்த தீர்மானிக்கப்பட்டது. இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு பள்ளிக்கல்வி முன்னாள் இயக்குநர் பி.மணி, பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா ஆகியோர் போட்டியிட்டனர். தமிழ்நாடு சாரணர் இயக்கத் தலைவர் பதவிக்கு அரசியல் கட்சித் தலைவர் ஒருவர் போட்டியிட்டது இதுவே முதல்முறை என்பதால், தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்றபரபரப்பு ஏற்பட்டது.இந்நிலையில், தலைவர் உள்ளிட்ட மற்ற நிர்வாகிகளுக்கான தேர்தல் நேற்று காலை 10.20 மணியளவில் சென்னை மெரினா கடற்கரைச் சாலையில் உள்ள தமிழ்நாடு பாரத சாரண, சாரணியர் இயக்க தலைமையகத்தில் தொடங்கியது. மதியம் 2 மணி வரை நடைபெற்ற வாக்குப்பதிவில் சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 504 வாக்காளர்களில் 286 பேர் வாக்களித்தனர்.அதைத்தொடர்ந்து வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று, தேர்தல் நடத்தும் அதிகாரி எம்.வி.கலாவதி மாலையில் முடிவுகளை வெளியிட்டார். அதன்படி, மொத்தம் பதிவான 286 வாக்குகளில், பி.மணி 232 வாக்குகளும், எச்.ராஜா 52 வாக்குகளும் பெற்றனர். 2 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. இதையடுத்து, பி.மணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.தேர்தல் முடிவுகளை அறிவிப்பதற்கு முன்பாக எச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறும்போது, "தமிழ்நாடு சாரணர் இயக்க தேர்தல் தொடர்பாக பாரத சாரணர் இயக்க தலைமையகத்துக்கு பல புகார்கள் சென்றதால் நேற்று முன்தினம் மதியம் தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு தலைமையகத்திலிருந்து கடிதம் அனுப்பியுள்ளனர். அதில், பாரத சாரணர் இயக்கத்தின் தேசிய ஆணையர் உத்தரவு வரும் வரை தேர்தலை நடத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டிருந்தது. எனவே, இந்த தேர்தல் செல்லாது" என்றார்.தேர்தல் வெற்றிக்குப் பிறகு பி.மணி கூறும்போது, "பள்ளிக் கல்வித்துறை உதவியுடன் சாரணர் இயக்கத்தை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தொடங்க நடவடிக்கை எடுப்பேன். இதை பொதுமக்கள் இயக்கமாக மாற்றுவேன் எனவும் உறுதி அளிக்கிறேன்" என்றார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, 16 September 2017

PGT APPOINTMENT COUNSELLING | தமிழகத்தில் உள்ள ஆசிரியர் பணிக்கு தேர்வு பெற்ற 2,373 பேருக்கு செப்.19-இல் இணையதளம் மூலம் கலந்தாய்வு நடைபெறும் என பள்ளிக் கல்வி இயக்குநர் ரெ.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

முதுகலை ஆசிரியர் பணிக்கு தேர்வு பெற்ற 2,373 பேருக்கு செப்.19-இல் கலந்தாய்வு. தமிழகத்தில் உள்ள ஆசிரியர் பணிக்கு தேர்வு பெற்ற 2,373 பேருக்கு செப்.19-இல் இணையதளம் மூலம் கலந்தாய்வு நடைபெறும் என பள்ளிக் கல்வி இயக்குநர் ரெ.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை (செப்.15) வெளியிட்டுள்ள அறிவிப்பு:-அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு, நியமனம் செய்யும் வகையில் ஆசிரியர் வாரியத்தின் சார்பில் போட்டித் தேர்வு நடத்தப்பட்டது.இதன் மூலம் தேர்வு செய்யப்பட்ட 2,315 பேருக்கும், சிறப்புக் கல்வியியல் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 58 பேருக்கும் பணி நியமன ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் இணையதளம் மூலம் செவ்வாய்க்கிழமை (செப்.19) நடத்தப்படவுள்ளது.முதுநிலை ஆசிரியர், சிறப்புக் கல்வியியல் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட அனைவரும் தங்களது முகவரியில் தெரிவித்துள்ள மாவட்டங்களில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வழங்கப்பட்ட தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு மற்றும் இதர சான்றிதழ்களுடன் நேரில் சென்று கலந்து கொள்ள வேண்டும்.முதுநிலை ஆசிரியர்களைப் பொருத்தவரையில் முதலில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள காலிப் பணியிடங்களுக்கு அந்தந்த மாவட்டங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கான கலந்தாய்வும்,பின்னர் வேறு மாவட்டங்களில் பணிபுரிய விருப்பமுள்ளவர்களுக்கான கலந்தாய்வு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடத்தப்படும்.முதல்வர் வழங்குவார்: கலந்தாய்வில் கலந்துகொண்டு பணி நியமனம் பெற்றவர்களுக்கான பணிநியமன ஆணையை வியாழக்கிழமையன்று (செப்.21) காலை 9.30 மணிக்கு சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கில் நடைபெறும் விழாவில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வழங்குவார் என அதில் கூறப்பட்டுள்ளது.
FLASH NEWS
EDU NEWS
EMPLOYMENT NEWS
TNPSC NEWS
TET NEWS
TRB NEWS
ADMISSION NEWS
ASSEMBLY NEWS
B.ED NEWS
COUNSELLING NEWS
CPS NEWS
COLLEGE NEWS
COURT NEWS
DATE RELATED NEWS
DR RADHAKERISHNAN AWARD
ELECTION NEWS
EXAM NEWS
GENERAL NEWS
G.O NEWS
G.K NEWS
GPF NEWS
M.ED NEWS
MRB NEWS
NMMS NEWS
NET/SET NEWS
POLITICAL NEWS
PAY COM NEWS
SCHOOL NEWS
TECHNOLOGY NEWS
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, 15 September 2017

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அவர்கள் நம் மாநிலத்து மாணவர்களின் நீட் போராட்டத்துக்கு வலு சேர்க்கும் வகையில் இசையமைத்துப் பாடிய ஒரு "நீட் பாடல்”.

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அவர்கள் நம் மாநிலத்து மாணவர்களின் நீட் போராட்டத்துக்கு வலு சேர்க்கும் வகையில் ஒரு "நீட் பாடலை" இசையமைத்துப் பாடியிருக்கிறார். நீட் போராட்டத்தில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அவர்களும் ஆதரவாக பின் நிற்பதாக அறிவித்துள்ளார். இப்பாடலை அனைவருக்கும் பரப்பி நீட் போராட்டத்துக்கு வலு சேருங்கள்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

போராட்டம் தற்காலிக வாபஸ்: ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் அறிவிப்பு | செப்டம்பர் 21ம் தேதி தலைமைச்செயலாளர் நேரில் ஆஜராகி இவ்வழக்கில் விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவு.

போராட்டம் தற்காலிக வாபஸ்: ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் அறிவிப்பு | செப்டம்பர் 21ம் தேதி தலைமைச்செயலாளர் நேரில் ஆஜராகி இவ்வழக்கில் விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவு. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் தற்காலிகமாக வாபஸ் பெறபட்டுள்ளது. ஐகோர்ட் மதுரை கிளையின் எச்சரிக்கையை அடுத்து போராட்டத்தை அரசு ஊழியர்கள் வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர். இதுகுறித்து ஐகோர்ட் மதுரை கிளையில் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் நீதிபதிகளிடம் ஒப்புதல் அளித்துள்ளனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு ஐகோர்ட் தடை விதித்திருந்தது. எனினும் தடையை மீறி அரசு ஊழியர்கள் தங்களது போராட்டத்தை தொடர்ந்து வந்தனர். இதன்பின் போராட்டம் தொடர்பான உத்தரவை மீறியதால் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதுதொடர்பாக விளக்கமளிக்க ஜாக்டோ ஜியோ அமைப்பை சேர்ந்த 3 பேர் இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜராகினர். அப்போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும் என உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். மேலும் தடையை மீறியும், உத்தரவுகளை மீறியும் அரசு ஊழியர்கள் ஏன் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறீர்கள் என்று நீதிபதிகள் கடுமையான கண்டனங்களை தெரிவித்தனர். போரட்டத்தை உடனே கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர். நீதிமன்றத்தை நாடாமல் போராட்டத்தில் ஈடுபட்டது ஏன் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதனையடுத்து அரசு ஊழியர்கள் ஒரு மணிநேரத்தில் காத்திருப்பு போராட்டத்தை கைவிட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது. போராட்டத்தை கைவிடாவிட்டால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அப்புறப்படுத்தப்படுவார்கள். நிபந்தனையின்றி வேலை நிறுத்தத்தை கைவிட வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனிடையே ஐகோர்ட் எச்சரிக்கையை அடுத்து போராட்டம் தற்காலிக வாபஸ் பெறுவதாக அரசு ஊழியர்கள் அறிவித்துள்ளனர். வேலைநிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக ஐகோர்ட் மதுரை கிளையில் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் நீதிபதிகளிடம் ஒப்புதல் அளித்துள்ளனர். மேலும் அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். இன்றே பணிக்கு திரும்புங்கள் இதனிடையே பகல் 2 மணிக்குள் அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். வெள்ளிக்கிழமை புனிதமான நாள் என்பதால் இன்றே பணிக்கு திரும்புங்கள் என நீதிபதிகள் அறிவுறுத்தினர். மேலும் செப்டம்பர் 21ம் தேதி தலைமைச்செயலாளர் நேரில் ஆஜராகி இவ்வழக்கில் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். ஊழியர்களை விடுவிக்க உத்தரவு அரசுக்கு எதிரான போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட அரசு ஊழியர்களை விடுவிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தலைமைச் செயலக ஊழியர்கள் இன்று முதல் ஸ்டிரைக்

தலைமைச் செயலக ஊழியர்கள் இன்று முதல் ஸ்டிரைக் | புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ சார்பில் கடந்த 11-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.இந்நிலையில், தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. அதில் ஜாக்டோ - ஜியோ அமைப்பின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக தலைமைச் செயலக ஊழியர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட வேண்டும் என்று பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து, இன்று முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என முடிவு எடுக்கப்பட்டது.அதன்படி, 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்க உள்ளனர். முன்னதாக, தலைமைச் செயலக ஊழியர்கள் நேற்று பணியின்போது கறுப்பு பேட்ஜ் அணிந்திருந்தனர். அதேசமயம், இந்த சங்கத்தின் ஒரு பிரிவினர் வேலைநிறுத்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மத்திய வேலைவாய்ப்புத் துறை சார்பில் இன்றும், நாளையும் (15,16-9-2017) சென்னையில் வேலைவாய்ப்பு முகாம் 65-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்பு

மத்திய வேலைவாய்ப்புத் துறை சார்பில் இன்றும், நாளையும் சென்னையில் வேலைவாய்ப்பு முகாம் 65-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்பு | மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, தமிழ்நாடு திறன் மேம்பாடு கழகம் மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) ஆகியவை இணைந்து சென்னையில் இன்றும், நாளையும் வேலைவாய்ப்பு முகாமை நடத்துகின்றன. இதுதொடர்பாக சிஐஐ-டைட்டன் மாதிரி தொழில்நெறி வழிகாட்டி மைய அதிகாரி பரமேஸ்வர், மத்திய வேலைவாய்ப்புத் துறை அதிகாரி எஸ்.பிரேம்ஆனந்த் ஆகியோர் நேற்று கூறியதாவது: சென்னை கிண்டி திருவிக தொழிற்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக வளாகத்தில் செப்டம்பர் 15, 16-ம் தேதிகளில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும். காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் இளநிலை, முதுநிலை மற்றும் பொறியியல் பட்டதாரிகள், 10-ம் வகுப்பு, ஐடிஐ, பாலிடெக்னிக் படிப்பு பயின் றோர் பங்கேற்கலாம். முகாமில் முன்னணி தனியார் நிறுவனங்கள் உட்பட 65-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்று சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பினை வழங்க உள்ளன. வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க அனுமதி இலவசம். முகாமில் பங்கேற்க முன்பதிவு செய்யாதவர்கள் நேரடியாக முகாம் நடைபெறும் இடத்துக்கு வந்து பதிவு செய்துகொண்டு பங்கேற்கலாம். எனவே, இந்த வாய்ப்பினை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். முகாம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 044-22500540, 22500560 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE