Tuesday, 31 October 2017

G.O 651-NEW TRANSFER COUNSELLING NORMS PUBLISHED | பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக்கல்வித்துறையில் இனி வரும் காலங்களில் ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்களின் நிர்வாக மாறுதல் மற்றும் பொது மாறுதலின் போது கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் ஆணை

G.O 651-NEW TRANSFER COUNSELLING NORMS PUBLISHED | பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக்கல்வித்துறையில் இனி வரும் காலங்களில் ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்களின் நிர்வாக மாறுதல் மற்றும் பொது மாறுதலின் போது கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் ஆணை | DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அரசு ஊழியருக்கு நவ.20-க்குள் நிலுவைத்தொகை

அரசு ஊழியருக்கு நவ.20-க்குள் நிலுவைத்தொகை | தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் அக்டோபர் 1 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, அக்டோபருக்கான ஊதியத்தை நவம்பரில் பெறும்போது ஊதிய உயர்வுடன் பெற வேண்டும். இந்நிலையில், நிதித்துறைச் செயலர் கே.சண்முகம் வெளியிட்ட அரசாணையில், 'நவம்பர் 20-க்குள், அக்டோபருக்கான புதிய ஊதிய நிலுவைத்தொகையை அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கும் அலுவலர்கள் கணக்கிட்டுப் பெற்று வழங்க வேண்டும். நவம்பர் சம்பளத்தை டிசம்பரில் வழங்கும்போது, புதிய சம்பளம் வழங்கப்பட வேண் டும் என்று கூறியுள்ளார். | DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பிளஸ்-2 செப்டம்பர் மாத தேர்வு முடிவு இன்று (31.10.2017) வெளியானது. | முன்னதாக SSLC செப்டம்பர் மாத தேர்வு முடிவு (26.10.2017) ல் வெளியிடப்பட்டது.

பிளஸ்-2 செப்டம்பர் மாத தேர்வு முடிவு இன்று (31.10.2017) வெளியீடு | பிளஸ்-2 செப்டம்பர் மாத தேர்வு முடிவு இன்று (31.10.2017) வெளியிடப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் பிளஸ்-2 தேர்வில் பெயிலானவர்களுக்கும், தனியாக படித்தவர்களுக்கும் பிளஸ்-2 செப்டம்பர் மாதம் தேர்வு வெளியிடப்பட்டது. தேர்வு முடிவு இன்று (செவ்வாய்க் கிழமை) வெளியிடப்பட்டது. தனித்தேர்வர்கள் (தட்கல் தனித்தேர்வர்கள் உட்பட) தத்தமது தேர்வு முடிவினை, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களாகவே இன்று பிற்பகல் தாங்களே இணையதளத்திலிருந்து தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து பதிவிறக்கம் செய்துகொள்ளவேண்டும். தனித்தேர்வர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். விடைத்தாள் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் உரிய முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு அடுத்த மாதம்( நவம்பர் ) 2 -ந்தேதி முதல் 4-ந்தேதி வரை நேரில் செல்லலாம். இந்த தகவலை அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார். | DOWNLOAD
SSLC செப்டம்பர் மாத தேர்வு முடிவு (26.10.2017) ல் வெளியிடப்பட்டது. | SSLC செப்டம்பர் மாத தேர்வு முடிவு (26.10.2017) ல் வெளியிடப்பட்டது. | DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Letter No.54867-CMPC-2017-1 dated:30-10-2017 - அக்டோபர் மாத புதிய ஊதிய நிலுவைத்தொகையை 20.11.17 க்குள் பெற்று வழங்க வேண்டும்.பிறகு நவம்பர் மாத ஊதியம பில் சமர்பிக்கப்பட வேண்டும் என நிதித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

Letter No.54867-CMPC-2017-1 dated:30-10-2017 - அக்டோபர் மாத புதிய ஊதிய நிலுவைத்தொகையை 20.11.17 க்குள் பெற்று வழங்க வேண்டும்.பிறகு நவம்பர் மாத ஊதியம பில் சமர்பிக்கப்பட வேண்டும் என நிதித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். Recommendations of the Official Committee 2017 on revision of pay and allowances and other related benefits – Admitting of salary – Instructions – Regarding. | DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 30 October 2017

COMMON RECRUITMENT PROCESS FOR RECRUITMENT OF SPECIALIST OFFICERS | பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள ஆயிரத்து 1315 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான பொது எழுத்து தேர்வுக்கான அறிவிப்பை வங்கிகள் தேர்வு வாரியம் (ஐபிபிஎஸ்) வெளியிட்டுள்ளது.

பட்டதாரிகளுக்கு பொதுத்துறை வங்கிகளில் 1135 சிறப்பு அதிகாரி வேலை | The online examination (Preliminary and Main) for the next Common Recruitment Process (CRP) for selection of personnel in Specialist Officers' cadre posts listed below in the Participating Organisations is tentatively scheduled in December 2017/ January 2018.தற்போது மீண்டும் வங்கி வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் இந்திய இளைய தலைமுறையின் ஆண்கள், பெண்கள் பயன்பெறும் வகையில், பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள ஆயிரத்து 1315 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான பொது எழுத்து தேர்வுக்கான அறிவிப்பை வங்கிகள் தேர்வு வாரியம் (ஐபிபிஎஸ்) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியான பட்டதாரிகளிள் ஆன்லைன் மூலம் வரும் நவம்பர் 7 முதல் 27க்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கிப் பணிகளுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்து தரும் அமைப்பாக வங்கிகள் தேர்வு வாரியம் 'இன்ஸ்டிடூயூட் ஆப் பாங்கிங் பெர்சனல் செலக்சன் (ஐபிபிஎஸ்)' செயல்பட்டு வருகிறது. இந்தியன் வங்கி, கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளிட்ட 19 பொதுத்துறை வங்கிகளில் ஏற்படும் கிளார்க் மற்றும் புரபெசனரி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான பொது எழுத்து தேர்வு மற்றும் நேர்காணலை இந்த அமைப்பு நடத்தி வருகிறது. ஒவ்வொரு பொதுத்துறை வங்கிகளும் தங்களுக்கு தேவைப்படும் பணியாளர்களை இந்த தகுதித்தேர்வு மதிப்பெண் அடிப்படையில்தான் தேர்வு செய்கின்றன. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி மட்டும் பணியாளர்களை தேர்வு செய்ய தனியாக தேர்வு நடத்துகிறது. தற்போது பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 1315 சிறப்பு அதிகாரி "CRP SPL-VII" பணியிடங்களுக்கான 7-வது எழுத்து தேர்க்கான அறிவிப்பை ஐபிபிஎஸ் வெளியிட்டுள்ளது.
மொத்த காலியிடங்கள்: 1315
பணி: சிறப்பு அதிகாரி (Specialist Officer)
பணி மற்றும் காலியிடங்கள்:
1. IT Officers (Scale-I) -120
2. Agricultural Field Officer (Scale-I) - 875
3. Rajbasha Adhikari (Scale-I)    - 30
4. Law Officer (Scale-I) - 60
5. HR/ Personnel Officer - 35
6. Marketing Officer (Scale-I) -195
சிறப்பு அதிகாரி நிரப்பப்பட உள்ள வங்கிகள் விவரம்: அலகாபாத் வங்கி, கனரா வங்கி, இந்திய வங்கி, சிண்டிகேட் வங்கி, ஆந்திரா வங்கி, இந்திய மத்திய வங்கி, இந்தியன் ஓவர்சிஸ் வங்கி, யூகோ வங்கி, பாங்க் ஆஃப் பரோடா, கார்ப்பரேஷன் வங்கி, ஓரியண்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ், யூனியன் பாங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆஃப் இந்தியா, தேனா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா, ஐடிபிஐ, பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி, விஜயா வங்கி
தகுதி: பொறியியல் துறையில் CS, IT, EE மற்றும் ECE, Agricultural,  Horticulture, Animal Husbandry, Veterinary Science, Dairy Science, ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் முதுகலை பட்டம், சட்டத்துறையில் பட்டம் பெற்று பதிவு செய்திருப்பவர்கள், எச்ஆர், சந்தையியல் துறையில் எம்பிஏ  முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு: 01.11.2017 தேதியின்படி 20 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்
தேர்வு செய்யப்படும் முறை: வங்கிகள் தேர்வு வாரியத்தால் (ஐபிபிஎஸ்) நடத்தப்படும் முதல்நிலை தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு. சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வில் பொது அறிவு, பகுத்து ஆராயும் திறன் (ரீசனிங்), அடிப்படை கணிதத்திறன், பொது ஆங்கிலம் ஆகிய 4 பகுதிகளில் இருந்து 'அப்ஜெக்டிவ்' முறையில் கேள்விகள் கேட்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்கள் ரூ.600 கட்டணமாக செலுத்த வேண்டும். மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.100 செலுத்தி விண்ணப்பித்தால் போதுமானது. கட்டணங்களை ஆன்லைன் முறையில் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உடைய இளைஞர்கள் அதிகாரப்பூர்வ www.ibps.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். எதிர்கால பயன்பாட்டிற்காக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை 2 கணினி பிரதிகள் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கும் தேதி: 07.11.2017
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.11.2017
முதல்நிலைத் தேர்வு நடைபெறும் தேதிகள்: 30.12.2017 மற்றும் 31.12.2017
முதன்மைத் தேர்வு நடைபெறும் தேதி: 28.1.2018
மேலும் முழுமையான விவரங்களை http://www.ibps.in/wp-content/uploads/IBPS_CRP_SPL_VII_Detail_Advt.pdf என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்புக்கான லிங்கை கிளிக் செய்து படித்து தெரிந்துகொள்ளவும். | DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Sunday, 29 October 2017

பருவமழை முன்னெச்சரிக்கையாக பழுதடைந்த பள்ளி கட்டிடங்களை அப்புறப்படுத்த வேண்டும் பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் உத்தரவு

பருவமழை முன்னெச்சரிக்கையாக பழுதடைந்த பள்ளி கட்டிடங்களை அப்புறப்படுத்த வேண்டும் பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் உத்தரவு | வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பழுதடைந்த பள்ளி கட்டிடங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு, பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் உத்தரவு பிறப்பித்துள்ளார். பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ், மாவட்ட கலெக்டர்களுக்கு எழுதியுள்ள அவசர கடிதத்தில் கூறியிருப்பதாவது:- பழுதடைந்த கட்டிடங்கள் பல பள்ளி வளாகங்களில் பழுதடைந்த மற்றும் பாதுகாப்பற்ற முறையில் பல கட்டிடங்கள் இருக்கின்றன. கடந்த காலகட்டங்களில் இதுபோன்ற கட்டிடங்களால் காயங்கள், உயிரிழப்புகள் போன்ற சம்பவங்கள் குறிப்பாக பருவமழை காலங்களில் நிகழ்ந்துள்ளன. இதுபோன்ற கட்டிடங்கள் நீண்ட நாட்களாக பராமரிக்கப்படாத சூழ்நிலையில் அவை கொசு உற்பத்திக்கும் ஏற்றவிதமாக அமைந்துள்ளன. பள்ளி வளாகத்தில் உள்ள முக்கிய இடங்களை எல்லாம் அதுபோன்ற கட்டிடங்கள் ஆக்கிரமித்துள்ளதோடு பள்ளி மாணவர்களுக்கு அந்த சூழ்நிலை குறித்த தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் உள்ளாட்சி அமைப்புகளால் கட்டப்பட்ட இதுபோன்ற பள்ளிகளை அவர்கள் தான் அப்புறப்படுத்த வேண்டும். பஞ்சாயத்து யூனியன் கட்டிடங்களை வட்டார வளர்ச்சி அதிகாரிகள் தகுந்த உத்தரவுகளை வழங்கி முன்னுரிமை கொடுத்து அந்த கட்டிடங்களை அகற்ற வேண்டும். தனிக்கவனம் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் தாங்கள் பராமரித்துவரும் அதுபோன்ற கட்டிடங்களை அப்புறப்படுத்துவதற்கு அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். பொதுப்பணித்துறை அதிகாரிகளும் இந்த பணியில் ஈடுபட வேண்டும். இதுபோன்ற கட்டிடங்கள் பற்றிய பட்டியலை பெற்றுக்கொண்டு கலெக்டர்களிடம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அறிவுரைகளை பெற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எனவே இதுபோன்ற முகமைகள் மூலம் பழுதடைந்த கட்டிடங்களை அப்புறப்படுத்துவதில் தனிப்பட்ட கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஏற்கனவே இருக்கும் கட்டிடங்களை தூய்மையாக, உறுதியானதாக வைத்திருப்பதற்கு நீங்கள் முயற்சி எடுக்க வேண்டும். இந்த கடிதம் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நவம்பர் 15-ந் தேதிக்குள் அறிக்கையை அரசுக்கு அனுப்பிவைக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. குற்றச்சாட்டு ஒவ்வொரு ஆண்டும் இதுபோல பருவமழை காலங்களில் பழுதடைந்த கட்டிடங்களை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட துறைக்கும், அதிகாரிகளுக்கும் அரசு உத்தரவு பிறப்பித்தாலும், அதை சரிவர செய்வது இல்லை என்பது ஆசிரியர்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது. இந்த ஆண்டு எடுக்கப்படும் பட்டியலின் அடிப்படையில் பழுதடைந்த, பாதுகாப்பற்ற கட்டிடங்களை அப்புறப்படுத்துவதில் அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்பது கல்வி ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஆய்வு கட்டுரைகளை மதிப்பீடு செய்யும் ஆசிரியர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் தகவல்

ஆய்வு கட்டுரைகளை மதிப்பீடு செய்யும் ஆசிரியர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் தகவல் | ஆய்வு கட்டுரைகளை மதிப்பீடு செய்யும் ஆசிரியர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை 'செனட்' கூட்டத்தில் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் துரைசாமி தெரிவித்தார். சென்னை பல்கலைக்கழகத்தின் 'செனட்' கூட்டம் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா கட்டிடத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் பி.துரைசாமி தலைமை தாங்கினார். பதிவாளர் பேராசிரியர் ஆர்.சீனிவாசன் முன்னிலை வகித்தார். 4 பேராசிரியர் ஜெகநாதன், புதிய உறுப்பினர்களை அறிமுகம் செய்து வைத்தார். அதைத்தொடர்ந்து, துணை வேந்தர் துரைசாமி பேசியதாவது:- நாட்டிலேயே காகிதம் இல்லா பரிவர்த்தனை செய்யும் ஒரே பல்கலைக்கழகம் சென்னை பல்கலைக்கழகம் என்ற பெயர் பெற்று இருக்கிறது. தேசிய கல்வி களஞ்சியம் மூலம் பல்கலைக்கழகத்தின் சான்றிதழ்கள் அனைத்தும் டிஜிட்டல் ஆக்கப்படும். பல்கலைக்கழக மானியக்குழு வழிகாட்டுதலின்படி அண்டை மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் மாணவர்கள் சென்று படிக்க ஊக்கப்படுத்த விரும்புகிறோம். எம்.பில், பி.எச்.டி. படிப்பின் தரத்தை மேம்படுத்துவதற்கு பி.எச்.டி. சேர்க்கைக்கான விண்ணப்பம் ஆன்-லைனில் வழங்குதல், பி.எச்.டி. படிக்கும் மாணவர்களின் பட்டியலை பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடுதல், பல்கலைக்கழக மானியக்குழு எம்.பில், பி.எச்.டி. விதிமுறைகளை (2016) பின்பற்றுவது உள்பட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு முதுகலை படிப்புகளில் சேர்ந்த மாணவிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 20 சதவீதம் அதிகரித்துள்ளது. தரமணியில் உள்ள மாணவர் விடுதி, மாணவிகள் விடுதியாக மாற்றி திறந்து இருக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார். இதையடுத்து பல்கலைக்கழகத்தில் கொண்டு வரப்படும் திட்டங்கள் குறித்து விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது, துணை வேந்தர் துரைசாமி, ஆய்வு கட்டுரைகள் மற்றும் மதிப்பீடுகள் தரமானதாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் பல்கலைக்கழக விதிமுறைப்படி, ஆய்வு கட்டுரைகளை மதிப்பீடு செய்யும் ஆசிரியர்கள் ஆய்வு கட்டுரை மதிப்பீடு செய்வதற்கு முந்தைய 5 ஆண்டுகளில் 2 பதிப்புகளை வெளியிட்டு இருக்க வேண்டும். ஒரு ஆண்டில் ஒருவருக்குத்தான் அவர் மதிப்பீடு செய்ய வேண்டும் என்ற புதிய கட்டுப்பாடுகளை சென்னை பல்கலைக்கழகம் பின்பற்றும் என்று தெரிவித்தார். இதற்கு செனட் உறுப்பினர்கள் காந்திராஜ், மணிவாசகம், அனுராதா உள்பட பலர் பல்வேறு கருத்துகளை முன்வைத்தனர். இறுதியாக துணைவேந்தர், பாடத்திட்டக்குழு கூட்டத்தில் இதுகுறித்து முடிவு செய்து அறிவிப்புகள் வெளியிடுவதாக தெரிவித்தார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

உயர் நீதிமன்றத்தில் துப்புரவு பணிக்கு பொறியியல் பட்டதாரிகள் அதிக எண்ணிக்கையில் விண்ணப்பம் வேலையின்மையின் உச்சம் என கருத்து

உயர் நீதிமன்றத்தில் துப்புரவு பணிக்கு பொறியியல் பட்டதாரிகள் அதிக எண்ணிக்கையில் விண்ணப்பம் வேலையின்மையின் உச்சம் என கருத்து | உயர் நீதிமன்ற துப்புரவு பணியாளர் மற்றும் சுகாதார பணியாளர் பணிகளுக்கு அதிக எண்ணிக்கையில் பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர் என்பது வேலையின்மையின் உச்சம் என்ற கருத்து எழுந்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை உயர் நீதிமன்ற கிளை ஆகியவற்றில் 68 துப்புரவு பணியாளர் மற்றும் 59 சுகாதார பணியாளர் பணியிடங்களை நிரப்ப கடந்த ஜூலை மாதம் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. இப்பணிகளுக்கு குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. எஸ்சி, எஸ்டி, எம்பிசி, பிசி ஆகிய வகுப்பினருக்கு அதிகபட்ச வயதாக 35-ம், இதர வகுப்பினருக்கு அதிகபட்ச வயதாக 30-ம், ஏற்கெனவே அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு அதிகபட்ச வயதாக 45-ம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற வளாகத்தை தினமும் கூட்டித்தள்ளி, கழிப்பிடங்களை சுத்தம் செய்யும் துப்புரவு மற்றும் சுகாதார பணியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்த 3 ஆயிரத்து 612 பேரில் 2 ஆயிரத்து 569 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு அவர் களுக்கு எழுத்துத்தேர்வு கடந்த அக்டோபர் 8-ம் தேதி சென்னையில் நடத்தப்பட்டது. இப் பணிகளுக்கு விண்ணப்பித்தவர்களில் பெரும்பாலானோர் பொறியியல் மற்றும் முதுகலை மற்றும் எம்ஃபில் பட்டம் பெற்ற பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம் 75 மதிப்பெண் களுக்கு நடத்தப்பட்ட எழுத்துத்தேர்வில் 23 மதிப்பெண்கள் பெற்றால் தேர்ச்சி என்ற அடிப்படையில் இந்த தேர்வு நடத்தப்பட்டது. இதில், எந்த தொலைபேசி எண்ணில் இருந்து போலீஸை அழைப்பாய்? எந்த ஆண்டு நாம் விடுதலை பெற்றோம்? கப்பலோட்டிய தமிழன் யார்? நம்முடைய சுதந்திர தினம் எது? தேசிய சின்னம், பறவை, மரம் எது? என 8-ம் வகுப்பு தரத்திற்கேற்ப எளிமையான கேள்விகள் கேட்கப்பட்டதால், எழுத்துத்தேர்வில் பங்கேற்ற பெரும்பாலானோர் தேர்ச்சி பெற்றுள்ளதாக உயர் நீதிமன்ற வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து உயர் நீதிமன்ற அதிகாரிகள் சிலர் கூறும்போது, ''அதிகமான கல்வித்தகுதி உடையவர்களை இந்த பணி களுக்கு விண்ணப்பிக்கக் கூடாது என தடுக்க முடியாது. ஏனெனில் 8-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் யார் வேண்டுமென்றாலும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க முடியும். அதே நேரம் துப்புரவு அல்லது சுகாதார பணியாளர் பணியிடம் கிடைத்துவிட்டால், ஒரு பட்டதாரி தனது கல்வித் தகுதியை வைத்தே குறைந்த ஆண்டுகளில் ரீடர், உதவியாளர், உதவி செக்க்ஷன் அலுவலர், செக்க்ஷன் அலுவலர், உதவிப்பதிவாளர் என பதவி உயர்வில் இணைப்பதிவாளர் அந்தஸ்துக்கு செல்ல வாய்ப்புள்ளது. இப்பணியிடங்களுக்கு ரூ. 20 ஆயிரம் வரை சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது. வேலையின்மை காரணமாக பொறியியல் பட்டதாரிகள் வெளியிடங்களில் இதைவிடக் குறைவான ஊதியத்துக்கு வேலை பார்ப்பதால், துணிந்து விண்ணப்பித்துள்ளனர். மேலும் ஒரு துப்புரவு பணியாளராக பணியில் சேருபவர், தமிழ், ஆங்கிலத்தில் தட்டச்சு முடித்து சுருக்கெழுத்தில் தேர்ச்சி பெற்றால் அவர் நீதிபதி யின் நேர்முக உதவியாளராக செல்ல முடியும். இதனால் இந்த பணியிடங்கள் கிடைத்தால் போதும் என்ற அடிப்படையில் அதிகமாக விண்ணப்பித்துள்ளனர்'' என்றனர். இதுதொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ள உயர் நீதிமன்ற வழக்கறிஞர் எம்.ராதா கிருஷ்ணன் கூறும்போது, ''இது வேலையின்மையின் உச்சம். இதை சமீபத்தில் கூட நீதியரசர் என்.கிருபாகரன் இந்தியா முழுவதும் எத்தனை பொறியியல் பட்டதாரிகள் வேலையில்லாமல் உள்ளனர்? என மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பி சுட்டிக்காட்டியுள்ளார். உயர் நீதிமன்றத்தின் இணையதளத்துக்குச் சென்று விபரங்களை அறிந்து கொள்ளுங்கள் எனக் கூறுவது விளம்பரமே ஆகாது. அது வெறும் தகவல். எனவே உயர் நீதிமன்ற துப்புரவு மற்றும் சுகாதார பணிக்கு ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பாணையை அனைத்து விவரங்களுடன் தமிழிலும் வெளியிட்டு அதன்பிறகு தான் தேர்வு நடத்த வேண்டும் என்பதுதான் எங்களது வழக்கின் சாரம்சம். இந்த பணிநியமனம் எங்களது வழக்கின் இறுதி தீர்ப்பை பொறுத்தே அமையும் என ஏற்கெனவே உத்தரவிடப்பட்டுள்ளது. ஒருவேளை எங்களுக்கு சாதகமாக இந்த விளம்பரம் செல்லாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தால், இவர்களின் பணிநியமனமும் செல்லாததாகி விடும். ஆனால் உயர் நீதிமன்றத்தில் துப்புரவு பணியாளராக உள்ளே வந்து விட்டால் பணிப்பாதுகாப்பு மற்றும் பதவிஉயர்வு எளிதாக கிடைக்கும் என்பதால் பட்டதாரிகள் அதிக எண்ணிக்கையில் இப்பணிக்கு தைரியமாக விண்ணப்பித்து அதில் தேர்ச்சியும் பெற்றுள்ளனர்'' என்றார். | ஆர்.பாலசரவணக்குமார்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 24 October 2017

​ The Reserve Bank of India invites applications from eligible candidates for 623 posts of Assistant in various offices of the Bank.Website Link Open 18.10.2017 to 10.11.2017

The Reserve Bank of India invites applications from eligible candidates for 623 posts of Assistant in various offices of the Bank. Selection for the post will be through a country-wide competitive examination in two phases i.e. Preliminary and Main examination followed by a Language Proficiency Test (LPT). Please note that Corrigendum, if any, issued on the above advertisement, will be published only on the Bank's website www.rbi.org.in.
இது பற்றிய விவரம் வருமாறு:-
வங்கிகளின் வங்கி என அழைக்கப்படுவது ரிசர்வ் வங்கி. இந்தியாவின் தலைமை வங்கியான இதன் கிளைகள் அனைத்து மாநிலங்களிலும் செயல்படுகிறது. தற்போது இந்த கிளைகளில் உதவியாளர் (அசிஸ்டன்ட்) பணிக்கு 623 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் சென்னையில் 15 பணியிடங்கள் உள்ளன. அதிகபட்சமாக கான்பூர் லக்னோ கிளையில் 44 இடங்களும், புதுடெல்லியில் 47 இடங்களும், கவுகாத்தியில் 36 இடங்களும் உள்ளன.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 1-10-2017 தேதியில் 24 முதல் 28 வயது உடையவர்களாக இருக்க வேண்டும். ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படுகிறது.
கல்வித்தகுதி:
ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு படித்து, 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். கணினி இயக்கும் ஆற்றல் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை:
முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்தப் பணிக்கு நேர்காணல் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
கட்டணம் :
பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.450 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் முன்னாள் படைவீரர்கள் ஆகியோர் ரூ.50 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும், தகுதியும் இருப்பவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 10-11-2017-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். பின்னர் பூர்த்தியான விண்ணப்பத்தை நகல் எடுத்து குறிப்பிட்ட முகவரிக்கு 25-11-2017-ந் தேதிக்குள் கிடைக்கும் படி அனுப்பி வைக்க வேண்டும்.விண்ணப்பிக்கவும், இது பற்றிய விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.rbi.org.in என்ற இணையதள முகவரியைப் பார்க்கவும். | DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TN 7th Pay Calculation 11.0_Ultimate Software | Use All Government Staff Easiest Method | P.PANDIARAJAN, Hindu Hr. Sec. School, Madurantakam

TN 7th Pay Calc 9.9_Ultimate அப்டேட் செய்யப்பட்டு TN 7th Pay Calc 11.0_Ultimate என்று வடிவமைக்கப்பட்டுள்ளது இதில் 9.9 இருந்த குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது 1. HRA & CCA Pay Range இல்லாமல் தானாக இயங்கும் படி செய்யப்பட்டுள்ளது 2. Appendix - II உள்ள Next Increment & Increment Coloum தானாக இயங்கும் படி செய்யப்பட்டுள்ளது 3. Print Option தரப்பட்டுள்ளது ஒரே Click-ல் அனைத்து படிவங்களும் பிரிண்ட் ஆகிவிடும் 4. October Arrear Format இணைக்கப்பட்டுள்ளது TN 7th Pay Calculation 11.0_Ultimate this Software use All Government Staff Easiest Method | Name : P.PANDIARAJAN Designation : Drawing Teacher Address : Hindu Hr. Sec. School, Madurantakam Pincode : 603306 District : Kancheepuram Cell : 9751145484 Whatsup : 7811961646 Email : pandian.nila@gmail.com DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Sunday, 22 October 2017

மத்திய அரசின் நிதி உதவியுடன் 10 ஆயிரம் பள்ளிக்கூடங்களில் ஸ்மார்ட் வகுப்புகள் அமைக்கப்படும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

மத்திய அரசின் நிதி உதவியுடன் 10 ஆயிரம் பள்ளிக்கூடங்களில் ஸ்மார்ட் வகுப்புகள் அமைக்கப்படும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல் | மத்திய அரசின் நிதி உதவியுடன் 10 ஆயிரம் பள்ளிக்கூடங்களில் ஸ்மார்ட் வகுப்புகள் அமைக்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். ஸ்மார்ட் வகுப்புகள் ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா நேற்று நடந்தது. விழாவில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- பள்ளி மாணவ-மாணவிளுக்கு ஸ்மார்ட் அடையாள அட்டை வழங்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. வருகிற டிசம்பர் மாதம் இறுதிக்குள் ஸ்மார்ட் அட்டைகள் வழங்கப்படும். இந்த ஸ்மார்ட் அட்டையில் சிம் கார்டு பொருத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியது. ஆனால் அது மாணவ-மாணவிகளுக்கு பாதுகாப்பானது இல்லை என்பதால் சிம் கார்டு பொருத்துவது தவிர்க்கப்பட்டு உள்ளது. தற்போது தமிழ்நாட்டில் உள்ள 3 ஆயிரம் பள்ளிக்கூடங்களுக்கு தலா ரூ.2 லட்சம் செலவில் ஸ்மார்ட் வகுப்புகள் அமைக்கப்பட உள்ளது. அடுத்த ஆண்டு மத்திய அரசின் நிதியை பெற்று 10 ஆயிரம் பள்ளிக்கூடங்களில் ஸ்மார்ட் வகுப்புகள் அமைக்கப்படும். 9, 10, 11, 12 ஆகிய வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு முற்றிலும் கணினி கல்வி அளிக்கும் வகையில் ரூ.486 ஆயிரம் கோடியில் திட்டமிடப்பட்டு உள்ளது. 450 மையங்கள் மத்திய அரசின் பொதுத்தேர்வுகளை தமிழக மாணவ-மாணவிகள் சுலபமாக எதிர்கொள்ளும் வகையில் 412 மையங்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அது 450 ஆக உயர்த்தி தொடங்கப்படும். இந்த மையங்களில் சேர விரும்பும் மாணவ-மாணவிகள் அதற்கான இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும். வகுப்பு நடைபெறும் கால அட்டவணையும் தெரிவிக்கப்படும். 3 ஆயிரம் ஆசிரிய-ஆசிரியைகள் 450 மையங்களில் மாணவ-மாணவிகளுக்கு சிறந்த பயிற்சி அளிப்பார்கள். இதுபோல் இந்தியா முழுவதும் மத்திய அரசின் போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் 1,482 மையங்கள் நடத்தி வரும் தனியார் நிறுவனத்தினரும் ஒரு ஆண்டுக்கு தமிழக மாணவ- மாணவிகளுக்கு இலவசமாக பயிற்சி அளிக்க ஒப்புதல் அளித்து உள்ளனர். இதனால் இந்திய அளவில் எந்த தேர்வு நடந்தாலும் தமிழக மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைக்க முடியும். இலவச ஐ.ஏ.எஸ். பயிற்சி தற்போது மத்திய அரசு கொண்டு வந்து உள்ள 'அடல் ஆய்வகம்' என்ற அறிவியல் ஆய்வகங்கள் தமிழகத்தில் 12 பள்ளிக்கூடங்களில் அமைக்கப்பட்டு உள்ளது. சட்டமன்ற தொகுதிக்கு ஒரு ஆய்வகம் வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து இருக்கிறோம். தமிழகத்தில் கற்றல் குறைபாடு பிரச்சினை உள்ள சுமார் 12 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு வகுப்பறைகளிலேயே சிறந்த பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. புதிய பாடத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்த பின்னர் பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகள் உயர்படிப்பு படித்துக்கொண்டே வேலை செய்யும் ஆற்றல் மிக்கவர்களாக வருவார்கள். அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் விபத்து காப்பீட்டு திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அடுத்த ஆண்டு (2018) ஜனவரி மாதம் கட்டணமில்லாத ஐ.ஏ.எஸ். பயிற்சி மையங்கள் தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, 21 October 2017

NEW VERSION OF 95% FULLY AUTOMATIC SIMPLE CALCULATOR_7.5 | அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வுக்கான 7TH PAY SIMPLE CALCULATOR யை பதிவிறக்கம் செய்யுங்கள்.

NEW VERSION OF 95% FULLY AUTOMATIC SIMPLE CALCULATOR_7.6 | * New Version of User-friendly "Simple Calculator_7.6" * Special features: 1. Superannuation calculation added. 2. Now PP60 included for calculation. 3. Conveyance allowance for visually challenged-added. 4. October month 7th pay commision arrear will be calculated. 5. No need previous hra amount. 6. Bugs fixed. Performance improved. 7. Always user friendly simple calculator. | M.Tamilarasan M.C.A.,B.Ed.,M.Phil., Computer Instructor, Govt. Boys Hr. Sec. School Mariammankoil, Tanjavur District-613 501. Cell: 98 43 47 0024. email: mtamilmca@yahoo.com DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, 20 October 2017

TNPSC Hostel Superintendent cum Physical Training Officer Result | விடுதி கண்காணிப்பாளர் மற்றும் உடற்பயிற்சி அலுவலர் பதவிக்கான எழுத்துத் தேர்வு முடிவு வெளியீடு.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்தி வெளியீடு | தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி சார்நிலைப் பணியில் அடங்கிய விடுதி கண்காணிப்பாளர் மற்றும் உடற்பயிற்சி அலுவலர் பதவிக்கான எழுத்துத் தேர்வு 20.05.2017 மு.ப. & பி.ப. அன்று நடத்தப்பட்டது. அதில் மொத்தம் 1779 தேர்வர்கள் பங்கேற்றனர். விண்ணப்பதாரர்கள் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில், நேர்காணல் தேர்விற்கு முன் நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்ட 54 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல்-II தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு 09.11.2017 அன்று தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும். | The Written Examination for the post of Hostel Superintendent cum Physical Training Officer in Tamil Nadu Employment and Training Subordinate Service was held on 20.05.2017 FN & AN. Totally 1779 candidates have appeared for the said Examination. Based on the marks obtained in the above said Examination, following the rule of reservation of appointments and as per the other conditions stipulated in the Notification, a list of register numbers of 54 candidates those who have been provisionally admitted to Certificate Verification (List-II) to the said post is available at the Commission's Website "www.tnpsc.gov.in". The Certificate Verification will be held on 09.11.2017 at the Commission's office. V. SHOBHANA, I.A.S., CONTROLLER OF EXAMINATIONS.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வு முடிவு 23-ல் வெளியீடு

தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வு முடிவு 23-ல் வெளியீடு | தமிழ்நாடு மாநில தொழில்நுட்பக் கல்வி ஆணையரும், தொழில்நுட்பத் தேர்வுகள் வாரியத்தின் தலைவருமான ஆர்.பழனிசாமி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தட்டச்சு, சுருக்கெழுத்து (தமிழ் மற்றும் ஆங்கிலம்), மற்றும் கணக்கியல் தேர்வுகளின் முடிவுகள் 23-ம் தேதி (திங்கள்கிழமை) மதியம் 1 மணிக்கு வெளியிடப்படும். தேர்வர்கள் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் இணையதளத்தில் (www.tndte.gov.in) தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 19 October 2017

டிசம்பருக்குள் பள்ளிக் கல்வித்துறை முழுவதும் கணினி மயமாக்கப்படும்: பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

டிசம்பருக்குள் பள்ளிக் கல்வித்துறை முழுவதும் கணினி மயமாக்கப்படும்: பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல் | டிசம்பர் மாதத்திற்குள் பள்ளிக் கல்வித் துறை முழுவதும் கணினிமயமாக்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். திருச்செந்தூர் அறிவியல் பூங்கா திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது: மாணவர்கள் பொதுவாக மருத்துவம், ஆட்சிப் பணி, பொறியியல், வேளாண்மை மற்றும் கால்நடை உள்ளிட்ட பாடத் திட்டங்களையே பெரும்பாலும் பயின்று வருகின்றனர். ஆனால் மாணவர்கள் இது போன்றுள்ள 246 பாடத் திட்டங்களையும் பயின்றால் வேலையில்லாத் திண்டாட்டம் ஒழியும். மேலும் தற்போதுள்ள பாடத் திட்டத்திற்கேற்ப, 9, 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ. 483 கோடியில் தமிழகம் முழுவதும் 412 பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்பட உள்ளது. கடந்த தேர்வில் ரேங்க் சிஸ்டம் கொண்டுவரப்பட்டது.பொதுத் தேர்வு முடிவுகளை குறுஞ்செய்தி மூலம் மாணவர்களுக்கு உடனடியாக அனுப்பும் முறை, இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் நடைமுறைக்கு வந்தது. பள்ளிக் கல்வித் துறை சார்பில், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட உள்ளது. அந்த ஸ்மார்ட் கார்டுடன், மாணவர்களின் ஆதார் எண், முகவரி, ரத்த வகை இணைக்கப்பட உள்ளது. இதன் மூலம் மாணவர்களுக்கு ஏற்படும் பேரிடர்கள் போது, காப்பீடுத் திட்டத்தின் மூலம் 48 மணி நேரத்துக்குள் உரிய இழப்பீடு வழங்கப்படும். அது போல வரும் டிசம்பருக்குள் பள்ளிக் கல்வித் துறை முழுவதும் கணினி மயமாக்கப்படும்.இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான காலியிடங்களுக்கு 2013இல் டெட் தேர்வு எழுதி தேர்ச்சியடைந்தவர்களுக்கு விரைவில் வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேவைப்பட்டால் ஆசிரியர் பணியிடங்களுக்கு ரூ.7500 தொகுப்பு ஊதியத்திலும் கூடுதலான ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றார் செங்கோட்டையன்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, 18 October 2017

பள்ளியில் காப்பீடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்


பள்ளியில் காப்பீடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் | தமிழகத்தில் ஒவ்வொரு பள்ளிக்கும் 2 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு 3,000 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் துவங்கப்பட உள்ளது. இது தவிர 486 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு வரும் ஆண்டிலிருந்து 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு கம்ப்யூட்டர் மூலம் கல்வி கற்றுத்தரப்பட உள்ளது. பள்ளி மாணவ, மாணவியருக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டம் வரும் டிசம்பரில் துவங்கி இரண்டு மாதத்தில் முடியும். எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் பள்ளி மாணவ, மாணவியருக்கு விபத்து காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 578 ஆசிரியர் பயிற்றுநர் பணியிடத்துக்கு பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்


தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 578 ஆசிரியர் பயிற்றுநர் பணியிடத்துக்கு பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் | அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் வட்டார வளமையங்களில் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு மாவட்டங்களுக்கு இடையே உபரி மற்றும் தேவை அடிப்படையில் பணி நிரவல் செய்யப்பட்டது. மேலும் பணி ஓய்வு, ராஜினாமா, இறப்பு, பணி உயர்வு மற்றும் வேறு அரசு பணிக்கு செல்லுதல் போன்றவற்றால் தமிழகம் முழுவதும் 228 ஆசிரியர் பயிற்றுநர் பணியிடங்களில் காலியிடங்கள் ஏற்பட்டன. மேலும் நடப்பு கல்வியாண்டில் 350 ஆசிரியர் பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியர்களாக பணி மாறுதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதால் 578 ஆசிரியர் பயிற்றுநர் காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன. இந்தநிலையில் இந்த 578 ஆசிரியர் பயிற்றுநர் காலி பணியிடங்களை பட்டதாரி ஆசிரியர்களை கொண்டு நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இதனையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தது 3 ஆண்டுகள் ஆசிரியர் பயிற்றுனராக மாறுதலில் பணியாற்ற ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அந்த வகையில் 1.10.2016க்கு பின்னர் தேர்வு செய்யப்பட்ட தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களிடம் இருந்து விருப்ப விண்ணப்பம் பெற்று வரும் 31ம் தேதிக்குள் பட்டியலிட்டு அனைவருக்கும் கல்வி இயக்க அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க மாநில திட்ட இயக்குநர் பள்ளி கல்வி இயக்குநரை கேட்டுக்கொண்டுள்ளார். அவ்வகையில் ஆசிரியர் பயிற்றுனராக பணியாற்ற விருப்பம் உள்ள ஆசிரியர்களின் பெயர் விபரங்களை பட்டியலிட்டு அனுப்பி வைக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளி கல்வி இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பி வைத்துள்ளார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பிளஸ் 2 மாணவர்களுக்கான 'நீட்' பயிற்சி 'ஆன்லைன்' பதிவு துவக்கம் | 31 தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட கல்வி அதிகாரியாக, பதவி உயர்வு அளித்து, ஆணை


பிளஸ் 2 மாணவர்களுக்கான 'நீட்' பயிற்சி 'ஆன்லைன்' பதிவு துவக்கம் | 31 தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட கல்வி அதிகாரியாக, பதவி உயர்வு அளித்து, ஆணை | பிளஸ் 2மாணவர்களுக்கான, நுழைவு தேர்வு பயிற்சிக்கு, நேற்று முதல், 'ஆன்லைன்' பதிவு துவங்கியது; வரும், 26ம் தேதி வரை பதிவு செய்யலாம். தமிழக பள்ளிக் கல்வி துறையின், ஒருங்கிணைந்த புதிய இணைய தளத்தின் செயல்பாட்டை, பள்ளிக் கல்வி அமைச்சர், செங்கோட்டையன், துவங்கி வைத்தார். இதில் 'நீட்' உள்ளிட்ட நுழைவு தேர்வுகளுக்கான பயிற்சி திட்டத்திற்கு, புதிய இணையதளத்தில், 'ஆன்லைன்' பதிவும் துவங்கியது. இது குறித்து, அமைச்சர், செங்கோட்டையன் கூறுகையில், ''மாணவர்கள்தங்கள் பள்ளி வழியாக, பயிற்சியில் சேர, பதிவு செய்ய வேண்டும். தமிழகத்தில் இருந்து, 3,000 ஆசிரியர்களுக்கு, பிற மாநில நிபுணர்களால் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி முடிந்ததும், அந்த ஆசிரியர்கள், தமிழக மாணவர்களுக்கு, வார இறுதி நாட்களில் சிறப்பு பயிற்சி அளிப்பர்,'' என்றார். இந்த பயிற்சி மையங்களில் பயிற்சி பெற விரும்பும் மாணவர்கள் பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்கள் வழியாக பள்ளிக்கல்வித்துறை இணையதளத்தை நாடி அதில் விண்ணப்பிக்கலாம்.பள்ளிக் கல்வியின், http://tnschools.gov.in என்ற புதிய இணையதளத்தில், மாணவர்கள், தங்கள் பள்ளி ஆசிரியர்கள் மூலமாக, பெயர் மற்றும் பயிற்சி மைய விபரங்களை பதிவு செய்யலாம். இதற்கு, வரும், 26ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக, பள்ளிக் கல்வி இயக்குனர், இளங்கோவன் தெரிவித்தார். விண்ணப்பித்த உடன் விண்ணப்பித்தற்கான அடையாள சீட்டு கிடைக்கும். அதைக்கொண்டு எந்த பயிற்சி மையத்தில் பயிற்சி பெற விரும்புகிறார்களோ அந்த மையத்திற்கு செல்லலாம். தினமும் பள்ளிக்கூடம் விட்ட பிறகு மாலையில் இந்த பயிற்சி அளிக்கப்படும். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலையிலும், மாலையிலும் பயிற்சி அளிக்கப்படும் இந்த நிகழ்ச்சியில், 31 தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட கல்வி அதிகாரியாக, பதவி உயர்வு அளித்து, ஆணை வழங்கப்பட்டது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அரசு தேர்வுத் துறையில், 2008 முதல்,2012 வரை, 10ம் வகுப்பு தேர்வு எழுதியவர்களுக்கான சான்றிதழ் பெற, 15நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

10ம் வகுப்பு சான்றிதழ்கள் அழிக்க அரசு முடிவு | அரசு தேர்வுத் துறையில், 2008 முதல்,2012 வரை, 10ம் வகுப்பு தேர்வு எழுதியவர்களுக்கான சான்றிதழ் பெற, 15நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அரசு தேர்வுத்துறையின், சென்னை மண்டல துணை இயக்குனர், ராஜலட்சுமி அறிவிப்பு: பத்தாம் வகுப்பு பொது தேர்வை, 2008 முதல், 2012 அக்., வரை எழுதியவர்களில் பலர், தங்கள் சான்றிதழ்களை கோராமல் உள்ளனர். அவற்றை அழிக்க, தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. அதனால், அக்., 31 வரை, அந்த சான்றிதழை பெற, அவகாசம் வழங்கப்படுகிறது. சான்றிதழ் பெற விரும்புவோர், பெயர், பதிவெண், தேர்வு மையம், ஆண்டு, மாதம் போன்ற விபரங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். அதன்பின், உரிமை கோரப்படாத சான்றிதழ்கள் அழிக்கப்படும். இனி வரும் காலங்களில், இரண்டு ஆண்டு முடிந்த பின், உரிமை கோரப்படாத சான்றிதழ்கள், முன்னறிவிப்பு இன்றி அழிக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 17 October 2017

NEW PAY COMMISSION DETAILS, G.OS, FORMS DOWNLOAD | SIMPLE CALCULATOR | COMPLETE CALCULATOR | ULTIMATE CALCULATOR | புதிய ஊதியக்குழு விவரங்கள், கணக்கீட்டு தாள், அரசாணைகள் ....முழுமையான தொகுப்பு ...

    GIRILEO.G.B MODIFIED ON 13.11.17 VERSION 9.1  
  1. GIRILEO.G.B.07.11.17 | WITH PAY ARREARS CALCULATION, PROCEEDING TITLE-G.B.GIRILEO, B.T.ASST, GOVT HIGH SCHOOL, KARISALPATTI DINDIGUL DISTRICT AS PER GO 303, DATED:12/10/2017 | gbgirileo@gmail.com

  2. PANDIARAJAN.P MODIFIED ON 13.11.17
  3. TN 7th Pay Calculation 11.0_Ultimate Software |அனைத்து வகை (GENERAL EMPLOYEE, SPECIAL TIME EMPLOYEE, HILL AREA EMPLOYEE) ஊழியர்களும் பயன்டுத்தும் வகையில் எளிமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. | P.PANDIARAJAN, Hindu Hr. Sec. School, Madurantakam

  4. SENTHIL KUMAR.M MODIFIED ON 12.11.17
  5. TN 8TH PC PIXATION SOFTWARE @ MSK EDUSOFT - ONE MAN ARMY-ALSO FOR NEW APPOINTMENTS | M.SENTHIL KUMAR

  6. GUNA VIGNESH | GUNAFINGER@GMAIL.COM | MODIFIED ON 10.11.17
  7. Tamil nadu Revised Pay Fixation Form version 4.8 Download AS PER GO 303, DATED:12/10/2017 | GUNA VIGNESH | GUNAFINGER@GMAIL.COM

  8. TAMILARASAN.M MODIFIED ON 10.11.17
  9. TAMILARASAN.M 10.11.17 | NEW VERSION OF 95% FULLY AUTOMATIC SIMPLE CALCULATOR_7.6 | அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வுக்கான 7TH PAY SIMPLE CALCULATOR யை பதிவிறக்கம் செய்யுங்கள்.

  10. RONALD STEPHEN.L MODIFIED ON 02.11.17
  11. AN EXCEL FILE FORMAT FOR 7TH PAY COMMISSION FIXATION. | L. Ronald Stephen, Headmaster, Gandarvakottai, Pudukkottai District. Mobile No. : 9976138222 | mostlyoffice@gmail.com

  12. RAJA.A MODIFIED ON 09.11.17
  13. A-Z 7-TH PAY COM WITH ALL FORMS  | A. RAJA P. G ASST IN PHYSICS, GHSS, DEVIYAKURICHI-636112.| rsdbmmdi@gmail.com

  14. PANNEERSELVAM.a MODIFIED ON 17.10.17
  15. THE TAMINADU REVISED PAY RULES CALULATION SHEET (WORD FILE) BY A.PANNEERSELVAM, RETIRED P.G.TEACHER. IN COIMBATORE. CELL : 9842127650
  16. THE TAMINADU PAY REVISION PROCEEDINGS BY A.PANNEERSELVAM, RETIRED P.G.TEACHER. IN COIMBATORE. CELL : 9842127650

  17. govtadwbhss@gmail.com UPDATED ON 22.10.17
  18. TAMIL NADU REVISED SCALES OF PAY - VER 99.0 303 ULTIMATE FIX SOFTWARE | Govt Adw | govtadwbhss@gmail.com

  19. MARUTHAI.K MODIFIED ON 07.11.17
  20. 7TH PAY REVISED COMPLETE CALCULATOR DOWNLOAD | K. MARUTHAI, GOVT BOYS HIGHER SECONDARY SCHOOL, CHINNASALEM

  21. NEWS UPDATED ON 07.11.17
  22. புதிய ஊதியகுழு நிர்ணயம் | Web pay roll தகவல்.
  23. 2800 GP யில் உள்ள ஆசிரியர்கள் கவனத்திற்கு:
  24. Special Allowance குறித்தான விளக்கம்
  25. Letter No.54867-CMPC-2017-1 dated:30-10-2017 - அக்டோபர் மாத புதிய ஊதிய நிலுவைத்தொகையை 20.11.17 க்குள் பெற்று வழங்க வேண்டும்.பிறகு நவம்பர் மாத ஊதியம பில் சமர்பிக்கப்பட வேண்டும் என நிதித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
  26. புதிய ஊதியக்குழு நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய அடிப்படைத் தகவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் ...முழுமையாக படியுங்கள்...
  27. தமிழக அரசு ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்துவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளிட்டார் முதலமைச்சர் பழனிசாமி. விரிவான விவரங்கள்.
  28. அரசு ஊழியர்களின் 7-வது ஊதியக்குழு தொடர்பாக விவாதிக்க தமிழக அமைச்சரவைக் கூட்டம், முதல்வர் பழனிசாமி தலைமையில் இன்று காலை நடக்கிறது | 7-வது ஊழியக் குழு அரசாணை இன்றே வெளியாக வாய்ப்பு.
  29. NEW VERSION OF 95% FULLY AUTOMATIC SIMPLE CALCULATOR_7.5 | அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வுக்கான 7TH PAY SIMPLE CALCULATOR யை பதிவிறக்கம் செய்யுங்கள்.
  30. G.O NO. 300 DT: OCTOBER 10, 2017 3% D.A HIKE G.O DOWNLOAD | D.A. HIKE FROM 136% TO 139% | தமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு - அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
  31. MODEL FOR SGT TO PRIMARY HM PROMOTION FIXATION AS G.O NO 303

  32. G.O UPDATED ON 8.11.17
  33. G.O.Ms.No.303, Dated 11th October 2017. | PAY COMMISSION G.O DOWNLOAD | அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வுக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
  34. G.O.Ms.No.305 | REVISION OF RATES OF HRA AND CCA | G.O.Ms.No.305 Dt: October 13, 2017 | OFFICIAL COMMITTEE, 2017 - Recommendations of the Official Committee, 2017 on revision of pay and allowances – Revision of Rates of House Rent Allowance and City Compensatory Allowance - Orders - Download.
  35. G.O.MS.NO.306 | REVISION OF RATES OF PAY, ALLOWANCES, PENSION AND RELATED BENEFITS | G.O.Ms.No.306 Dt: October 13, 2017 | OFFICIAL COMMITTEE, 2017 - Recommendations of the Official Committee, 2017 on revision of pay, allowances, pension and related benefits – Revision of Rates of Allowances - Orders - Download
  36. G.O.Ms.No.307 | REVISION OF RATES OF TRAVELLING ALLOWANCE | G.O.Ms.No.307 Dt: October 13, 2017 | OFFICIAL COMMITTEE, 2017 - Recommendations of the Official Committee, 2017 on revision of pay and allowances – Revision of Rates of Travelling Allowance - Orders - Download
  37. G.O MS.NO. 311 DT: OCTOBER 23, | OFFICIAL COMMITTEE, 2017 - RECOMMENDATIONS OF THE OFFICIAL COMMITTEE, 2017 – FIXATION OF PAY ON PROMOTION IN THE REVISED PAY STRUCTURE - ORDERS - ISSUED.
  38. G.O Ms.No. 328 October 31, 2017 | OFFICIAL COMMITTEE, 2017 - Implementation of the recommendations of the Official Committee, 2017 on revision of pay and pension in respect of employees drawing higher pay and pension based on court orders – Orders – Issued.
  39. Letter No.54867-CMPC-2017-1 dated:30-10-2017 - அக்டோபர் மாத புதிய ஊதிய நிலுவைத்தொகையை 20.11.17 க்குள் பெற்று வழங்க வேண்டும்.பிறகு நவம்பர் மாத ஊதியம பில் சமர்பிக்கப்பட வேண்டும் என நிதித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.Letter No.54867/CMPC/2017-1 Dt: October 30, 2017 | Recommendations of the Official Committee, 2017 on revision of pay and allowances and other related benefits – Admitting of salary – Instructions – Regarding.

  40. RUBBER STAMP MODEL UPDATED ON 8.11.17
  41. RUBBER STAMP MODEL
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

‘நீட்’ உள்ளிட்ட போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள 412 இடங்களில் பயிற்சி மையங்கள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்

'நீட்' உள்ளிட்ட போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள 412 இடங்களில் பயிற்சி மையங்கள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார் | நீட் தேர்வு உள்ளிட்ட எந்த போட்டிதேர்வு களையும் மாணவர்கள் எதிர்கொள்ள பயிற்சி மையங்களை பள்ளிகல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கிவைத்தார். எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்பில் சேர தமிழகத்தில் நீட் என்ற நுழைவுத்தேர்வை மத்திய அரசு கொண்டுவந்தது. அதுபோல பிளஸ்-2 மாணவர்கள் உயர் கல்வி படிப்பில் சேர்ந்து படிக்க மத்திய அரசு எந்த போட்டி தேர்வுகளை கொண்டுவந்தாலும் அந்த தேர்வுகளை எதிர்கொள்ள தமிழகத்தில் 412 பயிற்சி மையங் கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அமைக் கப்பட்டு உள்ளன. கே.ஏ.செங்கோட்டையன் இந்த பயிற்சி மைய தொடக்க விழா, பள்ளிக்கல்வித்துறையின் மேம்படுத்தப்பட்ட இணையதளம் தொடக்கவிழா, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு பணி ஆணை வழங்கும் விழா ஆகியவை சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு விழா நூலகத்தில் நடைபெற்றது. விழாவில் பள்ளிகல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டு இணையதளத்தையும், பயிற்சி மையங்களையும் தொடங்கிவைத்தார். மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:- பள்ளி கல்வித்துறையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பள்ளிகல்வித்துறையில் மேம்படுத்தப்பட்ட இணையதளம் ( www.tnschools.gov.in) திறக்கப்பட்டுள்ளது. அந்த இணையதளத்தின் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளின் நடவடிக்கைகளை அறியமுடியும். மத்திய அரசு கொண்டு வந்துள்ள நீட் தேர்வு, வரக்கூடிய போட்டிதேர்வுகளை, மாணவர்கள் எதிர்கொள்ள வட்டார அளவில் அரசு பள்ளிகளில் பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த பயிற்சி மையங்களில் பயிற்சி பெற விரும்பும் மாணவர்கள் பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்கள் வழியாக பள்ளிக்கல்வித்துறை இணையதளத்தை நாடி அதில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த உடன் விண்ணப்பித்தற்கான அடையாள சீட்டு கிடைக்கும். அதைக்கொண்டு எந்த பயிற்சி மையத்தில் பயிற்சி பெற விரும்புகிறார்களோ அந்த மையத்திற்கு செல்லலாம். தினமும் பள்ளிக்கூடம் விட்ட பிறகு மாலையில் இந்த பயிற்சி அளிக்கப்படும். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலையிலும், மாலையிலும் பயிற்சி அளிக்கப்படும். மொத்தம் 412 பயிற்சி மையங்களில் இந்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 3 ஆயிரம் ஆசிரியர்கள் இதற்காக ஆசிரியர்கள் ஆந்திரா சென்று பயிற்சி பெறுகிறார்கள். அவர்கள் தமிழகத்திற்கு வந்ததும் 3 ஆயிரம் ஆசிரியர்களுக்கு 10 நாட்கள் பயிற்சி அளிப்பார்கள். பயிற்சி இந்த மாத இறுதிக்குள் தொடங்கப்படும். இவ்வாறு அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் , அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனர் நந்தகுமார், தமிழ்நாடு பாடநூல் கழக நிர்வாக இயக்குனர் ஜெகநாதன், இயக்குனர்கள் இளங்கோவன், கண்ணப்பன், ராமேஸ்வர முருகன், கார்மேகம், கருப்பசாமி மற்றும் இணை இயக்குனர்கள் கலந்துகொண்டனர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

காவல்துறை, தீயணைப்பு துறையில் காலியாக உள்ள 6 ஆயிரம் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

காவல்துறை, தீயணைப்பு துறையில் காலியாக உள்ள 6 ஆயிரம் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு | தமிழகத்தில் காலியாக உள்ள 6 ஆயிரம் காவல்துறை, தீயணைப்பு துறை பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதிக காவலர்கள் காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்பு துறையில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 15 ஆயிரத்து 621 சீருடை பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. பணிநியமன ஆணைகளை வழங்கி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:- சட்டம் ஒழுங்கை பராமரித்தும், குற்றங்களை தடுப்பதிலும், கண்டுபிடிப்பதிலும் ஸ்காட்லாந்து யார்ட் காவல்துறைக்கு இணையாக தமிழ்நாடு காவல்துறை விளங்கிக்கொண்டிருக்கிறது. சட்டம் ஒழுங்கை பராமரித்தும், நல்லிணக்கத்தை நிலைநாட்டியும், தேசிய ஒருமைப்பாட்டை பேணிக்காத்தும், தீவிரவாதம் தலைதூக்காமல் இருக்கவும் தமிழ்நாடு காவல்துறையினர் சிறப்பாக பணிபுரிந்து வருகின்றனர். இயற்கை பேரிடர் ஏற்படும் தருணங்களில் காவல் துறையினர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர், பிற துறையினருடன் ஒருங்கிணைந்து சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். சிறைத்துறையினரும் குற்றவாளிகளை நன்னடத்தை உடையவர்களாக மாற்ற சிறப்பான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பல்வேறு மாநிலங்களை ஒப்பிடுகையில், தமிழ்நாடு காவல்துறையில் அதிக எண்ணிக்கையில் காவலர்கள் இருக்கின்றனர். சீருடைப் பணியாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக தனி வாரியத்தை 1991-ம் ஆண்டு நவம்பரில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கினார். கடந்த ஆண்டு வரை, ஒரு லட்சத்து இரண்டு ஆயிரத்து நானூற்று முப்பத்திரண்டு சீருடைப் பணியாளர்களை இத்தேர்வு வாரியம் தேர்ந்தெடுத்துள்ளது. இந்த ஆண்டு நிதிநிலைக் கூட்டத்தொடரில் காவலர்கள் பணி நியமனம் குறித்து சட்டமன்றத்தில் நான் அறிவித்ததைத் தொடர்ந்து, மிகக்குறுகிய காலத்திலேயே 15 ஆயிரத்து 621 நபர்கள் பல்வேறு சீருடைப் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவற்றில், ஆயுதப்படைக்கு 6 ஆயிரத்து 4 இரண்டாம் நிலை ஆண் காவலர்களும், 2 ஆயிரத்து 564 இரண்டாம் நிலை பெண் காவலர்களும், தமிழக சிறப்புக் காவல் படைக்கு 4 ஆயிரத்து 567 இரண்டாம் நிலை ஆண் காவலர்களும், 5 பெண் காவலர்களும் என மொத்தம் 13 ஆயிரத்து 140 இரண்டாம் நிலைக் காவலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும் சிறைத்துறைக்கு 954 இரண்டாம் நிலை ஜெயில் வார்டர்களும், 36 இரண்டாம் நிலை பெண் ஜெயில் வார்டர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கு ஆயிரத்து 491 தீயணைப்பு வீரர்கள் என மொத்தமாக 15 ஆயிரத்து 621 நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து சரித்திரம் படைக்கும் வகையில் 4 திருநங்கைகளும் காவலர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் முதன்முறையாக காவல் துறையில் திருநங்கைகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் வாயிலாக விரைவில் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள். இதன்மூலம் தமிழ்நாடு காவல்துறையில் காலி பணியிடங்களே இல்லை என்ற நிலை உருவாகும். தமிழ்நாடு காவல் துறையில் பணியாற்ற வாய்ப்பு பெற்றிருக்கின்ற உங்கள் அனைவருக்கும் வாழ்வில் இது ஒரு பெருமைமிக்க தருணம் ஆகும். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற அண்ணாவின் லட்சியத்தின்படி, தமிழ்நாடு காவல்துறையில் கட்டுப்பாட்டையும், ஒழுக்கத்தையும் பேணி, நமது காவல்துறையின் வரலாற்று பெருமையை நிலைநாட்ட வேண்டிய கடமை உணர்வோடும், நடுநிலையோடும், தன்னலமற்ற சேவையை தமிழ்நாட்டு மக்களுக்கு நீங்கள் ஆற்ற வேண்டும். நேர்மையாக பணிபுரிய வேண்டும் சீருடைப்பணியில் ஏராளமான சவால்களையும், பல்வேறு இடர்களையும் எதிர்கொள்ளவேண்டியிருக்கும். அல்லும்பகலும் அயராது உழைக்க வேண்டிவரும். "ஒரு தவறு செய்தால், அதைத் தெரிந்து செய்தால், அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்" என்ற எம்.ஜி.ஆரின் பாடல் வரிகளுக்கு ஏற்ப விருப்பு, வெறுப்பின்றி பணியாற்ற வேண்டும். மக்களுடைய குறைகளை கனிவுடனும், கவனத்துடனும், பணிவுடனும், பரிவுடனும் கேட்டு, நடுநிலையுடனும், நேர்மையாகவும் பணிபுரிய வேண்டும். இதுதான் உங்களுடைய தலையாய கடமை. இன்று முதல் பணியில் சேரும் ஒவ்வொரு காவலரும், கடமையுணர்வுடனும், துணிவுடனும், சமயோசிதமாக செயல்பட்டு, நாட்டில் அமைதி நிலவ பாடுபடவேண்டும். நேரம் காலம் கடந்து பல தருணங்களில் பாடுபட்டு உழைக்க வேண்டிய தன்னலமற்ற சேவைதான் காவல்பணி. ஆனால் அந்த உழைப்பால் மக்கள் பெரும் அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றை கண்முன்னே நிறுத்தி பார்க்கும்போது உங்களுக்குள் ஒரு பூரிப்பும், மிடுக்கும் நிச்சயம் ஏற்படும். ஒளிவு மறைவின்றி, நேர்மையான முறையில் தேர்வுகளை நடத்தியவர்களுக்கு பாராட்டுகள். இவ்வாறு அவர் பேசினார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

G.O.Ms.No.307 | REVISION OF RATES OF TRAVELLING ALLOWANCE | G.O.Ms.No.307 Dt: October 13, 2017 | OFFICIAL COMMITTEE, 2017 - Recommendations of the Official Committee, 2017 on revision of pay and allowances – Revision of Rates of Travelling Allowance - Orders - Download

G.O.Ms.No.307 | REVISION OF RATES OF TRAVELLING ALLOWANCE | G.O.Ms.No.307 Dt: October 13, 2017 | OFFICIAL COMMITTEE, 2017 - Recommendations of the Official Committee, 2017 on revision of pay and allowances – Revision of Rates of Travelling Allowance - Orders - Download. 1. G.O.Ms.No.40, Finance (Pay Cell) Department, dated: 22-02-2017. 2. G.O.Ms.No.189, Finance (Pay Cell) Department, dated 27-06-2017. 3. G.O.Ms.No.303, Finance (Pay Cell) Department, dated 11-10-2017. DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

G.O.MS.NO.306 | REVISION OF RATES OF PAY, ALLOWANCES, PENSION AND RELATED BENEFITS | G.O.Ms.No.306 Dt: October 13, 2017 | OFFICIAL COMMITTEE, 2017 - Recommendations of the Official Committee, 2017 on revision of pay, allowances, pension and related benefits – Revision of Rates of Allowances - Orders - Download

G.O.MS.NO.306 | REVISION OF RATES OF PAY, ALLOWANCES, PENSION AND RELATED BENEFITS | G.O.Ms.No.306 Dt: October 13, 2017 | OFFICIAL COMMITTEE, 2017 - Recommendations of the Official Committee, 2017 on revision of pay, allowances, pension and related benefits – Revision of Rates of Allowances - Orders - Download. 1. G.O.Ms.No.40, Finance (Pay Cell) Department, dated: 22-02-2017. 2. G.O.Ms.No.189, Finance (Pay Cell) Department, dated 27-06-2017. 3. G.O.Ms.No.303, Finance (Pay Cell) Department, dated 11-10-2017.DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

G.O.Ms.No.305 | REVISION OF RATES OF HRA AND CCA | G.O.Ms.No.305 Dt: October 13, 2017 | OFFICIAL COMMITTEE, 2017 - Recommendations of the Official Committee, 2017 on revision of pay and allowances – Revision of Rates of House Rent Allowance and City Compensatory Allowance - Orders - Download.

G.O.Ms.No.305 - REVISION OF RATES OF HRA AND CCA | REVISION OF RATES OF HRA AND CCA | G.O.Ms.No.305 Dt: October 13, 2017 |OFFICIAL COMMITTEE, 2017 - Recommendations of the Official Committee, 2017 on revision of pay and allowances – Revision of Rates of House Rent Allowance and City Compensatory Allowance - Orders - Download. 1. G.O.Ms.No.40, Finance (Pay Cell) Department, dated: 22-02-2017.2. G.O.Ms.No.189, Finance (Pay Cell) Department, dated 27-06-2017. 3. G.O.Ms.No.303, Finance (Pay Cell) Department, dated:11-10-2017. DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 16 October 2017

7TH PAY REVISED SIMPLE CALCULATOR DOWNLOAD | புதிய ஊதியக்குழு நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய அடிப்படைத் தகவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் ...முழுமையாக படியுங்கள்...


1. அடிப்படை ஊதியம் + கிரேட் pay வை கூட்டி 2.57 ல் பெருக்க வேண்டும்.
2. வருகிற தொகையை pay Matrix உடன் ஒப்பிட்டு குறித்து கொள்ள வேண்டும். ( பெருக்கு தொகை 44623 என்று வந்தால் 44600 எனவும், 44678 என்று வந்தால் 45900 எனவும் எடுத்து கொள்ள வேண்டும்.)
3. அடிப்படை ஊதியத்திற்கு annual increment கொடுக்க வேண்டுமென்றால் அடிப்படை ஊதியத்திற்கு அடுத்து உள்ள தொகையை (pay matrix) எடுத்து கொள்ள வேண்டும் ( 45900 க்கு அடுத்து உள்ள தொகை 47300 எனவும், சாதாரண மற்றும் சிறப்பு நிலை ( selection , special grade) என்றால் 47300, 48700 எனவும் கணக்கிட வேண்டும். இது சென்ற வருடம் கணக்கிட்ட 3 % க்கு சமமாக வருகிறது )
4. ஜனவரி மாதம் கணக்கிட 31.12.2015 அல்லது 1.1.2016 இரண்டில் எந்த தொகையை கணக்கிட்டால் சரியாக வருகிறதோ அதை எடுத்துக் கொள்ளலாம்.( கணக்கிட்டால் இரண்டும் ஒரே தொகைதான் வருகிறது)
5. இதில் இடைநிலை ஆசிரியர்களில் 2800 கிரேட் பே வாங்கியவர்களுக்கு 750 ரூபாய் – யை கணக்கிடக்கூடாது. தனிஊதியமாக 2000 ரூபாய் சேர்த்து கொள்ள வேண்டும். இந்த 2000 ரூபாய் எந்த ஊதிய உயர்வுக்கும் ( annual increment , DA ) எடுத்துக் கொள்ளக் கூடாது
6. HRA பற்றி எந்த ஒரு அட்டவணையும் வெளிவரவில்லை. தற்சமயம் தோராயமாக 2017 செப்டம்பரில் வாங்கிய தொகையுடன் 2.5 ல் பெருக்கி போட்டு கொள்ளலாம்.
7. CCA – 2017 செப்டம்பரில் வாங்கிய தொகையுடன் இரண்டு மடங்கு
8. MA- 100 லிருந்து 300
9. தற்சமயம் அக்டோபர் மாத DA 5 %
10. தனியாக பெற்று வந்த சிறப்பு படி 500 மற்றும் 30 க்கு எந்தவித விளக்கம் இல்லை
11. எனவே 750 ரூபாய் மற்றும் 500, 30, வீட்டு வாடகைப்படி தொடர்பாக நிதித்துறைக்கு விரைவில் விளக்கம் கேட்க பட உள்ளது.
12. இனிமேல் எந்த ஒரு ஊதிய உயர்வும் அதே வரிசையில் செல்லவேண்டும்.அதாவது பதவி உய்ர்வு பெற்றால் அதே pay matrix ல் ஊதிய நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும் ( உதாராணமாக சென்ற வருடம் இடை நிலை ஆசிரியர் 2800 கிரேட் பே பெற்றவர் பட்டதாரி ஆசிரியராக சென்றால் 4600 ல் செல்வார்.அது போல் இந்த வருடம் செய்ய இயலாது)
13. 40 படிகளுக்கு 100 சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ளது. படிகள் விவரம் வெளியிட படவில்லை.
14. மேலும் ஊதிய உயர்வு சம்மந்தமாக பல விளக்கங்கள் வெளி வர வாய்ப்பு கண்டிப்பாக உள்ளது.
15. எந்த ஒரு ஊதிய குழுவும் நிர்ணயம் செய்யும் போது பழைய முறையில் பெறும் சலுகையை தர மறுக்கக் கூடாது. ஆனால் இதில் நிறைய சலுகைகள் மறுக்கப்பட்டு உள்ளதால் விரைவில் புதிய அறிவிப்புகள் வெளி வர வாய்ப்பு உள்ளது.
16. ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு (பென்சன்) தற்சமயம் பெறும் ஊதியத்துடன் 2.57 ல் பெருக்கிக் கொண்டு, DA 5 % கணக்கிட்டு கொள்ள வேண்டும். M.A- பற்றிய விவரம் வெளிவரவில்லை.  DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE