Tuesday, 24 April 2018

பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் அதிகாரிப் பதவியில் 158 காலியிடங்கள் நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ளன.

பேங்க் ஆஃப் இந்தியா வங்கிப் பணி | மத்திய அரசின் முன்னணிப் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான ‘பேங்க் ஆஃப் இந்தியா’ வங்கியில் அதிகாரிப் பதவியில் 158 காலியிடங்கள் நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ளன. தேவையான தகுதி இப்பதவிக்கு ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு, எம்.பி.ஏ. பட்டம் அல்லது மேலாண்மையில் பட்டயம் அவசியம். குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் அவசியம். எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. வகுப்பினர், மாற்றுத் திறனாளிகளுக்கு 55 சதவீத மதிப்பெண் போதும். சி.ஏ., கம்பெனி செக்ரட்டரிஷிப், ஐ.சி.டபிள்யு.ஏ. முடித்தவர்களும் இதற்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர் ஆவர். வயது குறைந்தபட்சம் 21 ஆகவும் அதிகபட்சம் 30 ஆகவும் இருக்க வேண்டும். மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி, எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும் ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். என்ன கேட்பார்கள்? எழுத்துத் தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தகுதியானோர் பணிக்குத் தெரிவுசெய்யப்படுவர். ஆன்லைன்வழியிலான எழுத்துத் தேர்வில் ஆங்கிலம், வங்கித் துறை சம்பந்தப்பட்ட பொது அறிவு, நிதி மேலாண்மை ஆகிய 3 பகுதிகளில் இருந்து தலா 50 கேள்விகள் வீதம் மொத்தம் 150 கேள்விகள் இடம்பெறும். இதற்கு மதிப்பெண் 150. தேர்வு 2 மணி நேரம் நடைபெறும். ஆங்கிலப் பிரிவில், நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச மதிப்பெண் எடுத்துத் தேர்ச்சி பெற்றாலே போதும். அதில் எடுக்கும் மதிப்பெண் மெரிட் பட்டியலுக்குக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்படும். இதற்கு 100 மதிப்பெண். எழுத்துத் தேர்வுக்கும் நேர்முகத் தேர்வுக்கும் 80:20 என்ற விகிதாச்சாரத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் அளிக்கப்படும். அதன் அடிப்படையில் மெரிட் பட்டியல் தயாரிக்கப்பட்டு தகுதியானோர் பணிக்குத் தேர்வுசெய்யப்படுவார்கள். உரிய கல்வித் தகுதியும் வயதும் உடைய பட்டதாரிகள் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் இணையதளத்தைப் (www.bankofindia.co.in ) பயன்படுத்தி மே 5-க்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

குடும்பத்தோடு உண்ணாவிரதம் இருக்க முயன்ற 3,000 இடைநிலை ஆசிரியர்கள் கைது ஊதிய முரண்பாட்டை சரிசெய்யக் கோரிக்கை

‘சம வேலைக்கு சம ஊதியம்’ என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னை டிபிஐ-யில் உண்ணாவிரதம் இருக்க முயன்றதால் கைது செய்யப்பட்டு, எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் தங்க வைக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள். படம்: க.ஸ்ரீபரத் G_SRIBHARATH ஊதிய முரண்பாட்டை சரிசெய்யக் கோரி டிபிஐ வளாகத்தில் குடும்பத்தோடு உண்ணாவிரதம் இருக்க முயன்ற 3,000 இடைநிலை ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். ஆசிரியர்களின் போராட்டத்தை முன்னிட்டு டிபிஐ வளாகத்தின் அனைத்து நுழைவுவாயில்களும் முன்னதாக பூட்டப்பட்டன. டிபிஐ வளாகத்தின் அனைத்து நுழைவு வாயில்கள் முன்பும் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். ஆசிரியர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து, அனைவரும் டிபிஐ முதன்மை நுழைவுவாயில் முன்பு கூடத்தொடங்கினர். மாநிலப் பொதுச் செயலாளர் ஜெ.ராபர்ட், போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர்கள் எஸ்.ரெக்ஸ் ஆனந்தகுமார், கே.கண்ணன், எஸ்.வேல்முருகன், டி.ஞானசேகரன் ஆகியோர் தலைமையில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை குடும்பத்தினரோடு கைதுசெய்து போலீஸார் வேனில் ஏற்றிச் சென்றனர். கைது செய்யப்பட்டவர்கள், எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கம் மற்றும் அதன் அருகேயுள்ள திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டு கைதான 3,000 ஆசிரியர்களையும் பிற்பகலில் விடுவித்ததாக போலீஸார் தெரிவித்தனர். முன்னதாக போராட்டத்தின்போது தமிழ்நாடு இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் ஜெ.ராபர்ட் நிருபர்களிடம் கூறியதாவது: நாங்கள் மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் கேட்கவில்லை. மாநிலத்தில் சக இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டைச் சரிசெய்ய வேண்டும் என்று போராடி வருகிறோம். அப்போது அரசு தரப்பில் எங்களோடு பேச்சுவார்த்தை நடத்தியவர்கள், 2009-க்குப் பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாடுகளைச் சரிசெய்யும்படி, 7-வது ஊதியக்குழுவுக்குப் பரிந்துரைக்கப்படும் என உத்தரவாதம் அளித்தனர். ஆனால், நடைமுறைப்படுத்தப் படவில்லை. அதனால்தான் குடும்பத்தோடுஉண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுறபடுகிறோம் என்றார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஆன்-லைன் மூலம் என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கு 3-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கு மே 3-ந்தேதி முதல் ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார். இதுதொடர்பாக சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கே.பி.அன்பழகன் கூறியதாவது:- என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு முதல் ஆன்-லைன் மூலம் என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கையை நடத்த திட்டமிட்டு அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆன்-லைன் மூலம் மாணவர்கள் விண்ணப்பிப்பது தொடர்பான அறிவிப்பு வருகிற 29-ந்தேதி வெளியிடப்படுகிறது. ஆன்-லைன் மூலம் விண்ணப்பத்தை மாணவர்கள் பதிவு செய்வது அடுத்த மாதம் (மே) 3-ந்தேதி தொடங்குகிறது. 30-ந்தேதி பதிவு செய்ய கடைசி நாள் ஆகும். ஜூன் மாதம் முதல் வாரம் சான்றிதழ் சரிபார்ப்பு தொடங்குகிறது. ஜூலை மாதம் முதல் வாரம் மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரி, பாடப்பிரிவை தேர்வு செய்வது தொடங்குகிறது. பிளஸ்-2 தேர்வு முடிவு 16-ந்தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 42 உதவி மையங்கள் தேர்வு முடிவு வெளியாவது ஒருவாரம் வரை தள்ளிப்போனால் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட தேதியில் அனைத்தும் நடைபெறும். 10 நாட்களுக்கு மேல் தள்ளிபோனால் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட தேதியில் மாற்றம் செய்யப்படும். அதேபோன்று மருத்துவ கலந்தாய்வை பொறுத்தும் தேதியில் மாற்றம் செய்ய நேரிடலாம். மாணவர்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் ஆன்- லைன் மூலம் தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்யலாம். ஆன்-லைன் வசதியை பெற முடியாத நிலையில் இருக்கும் கிராமப்புற மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டும், ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை பற்றி தனக்கு தெரியாது என்று கருதும் மாணவர்களுக்காகவும் தமிழகத்தில் 42 உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆன்-லைன் மூலம் விண்ணப்பிப்பதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் இந்த உதவி மையத்தை மாணவர்கள் அணுகலாம். சான்றிதழ் சரிபார்ப்பு அனைத்து மாணவர்களின் அசல் சான்றிதழ்களும் உதவி மையத்தில் தான் சரிபார்க்கப்படும். சம்பந்தப்பட்ட மாணவர்கள் தான் அசல் சான்றிதழ்களை கொண்டு செல்ல வேண்டும் என்று இல்லை. அவரது பெற்றோரோ அல்லது உறவினரோ அசல் சான்றிதழை சமர்ப்பிக்கலாம். விண்ணப்ப பதிவுக்கான கட்டணம் ரூ.500 ஆகும். ஆதிதிராவிடர், பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு பதிவுக்கட்டணம் ரூ.250 ஆகும். ஆன்-லைன் மூலம் விண்ணப்பிப்பவர்கள் ஆன்-லைன் மூலம் பதிவுக்கட்டணத்துக்கான பணத்தை செலுத்த வேண்டும். உதவி மையத்தின் மூலம் விண்ணப்பிப்பவர்கள் அங்கு பதிவுக்கட்டணத்துக்கான பணத்தை செலுத்த வேண்டும். ஆன்-லைன் மற்றும் உதவி மையத்தில் பதிவு செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் எடுத்து அசல் கல்வி சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், சாதி சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்களுடன் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட உதவி மையத்தை சான்றிதழ் சரிபார்ப்பின் போது அணுக வேண்டும். அங்கு விண்ணப்பத்தில் உள்ள தகவல்கள் அசல் சான்றிதழ்களுடன் ஒப்பிட்டு பார்க்கப்படும். தகவல் கையேடு விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தை பதிவு செய்யும்போதே தங்கள் விருப்பப்படி எந்த உதவி மையத்தை வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளலாம். உதவி மையங்களில் விண்ணப்பதாரர்களுக்கு என்ஜினீயரிங் கல்லூரிகள் பற்றிய தகவல் கையேடு வழங்கப்படும். ஆன்-லைன் முறையிலான கலந்தாய்வில் கலந்துகொள்வதற்கான செயல் முறைகள் பற்றி மாணவர்களுக்கு வீடியோ காட்சி மூலம் உதவி மையத்தில் விரிவாக எடுத்துக்கூறப்படும். இதன்பின்பு, தரவரிசை பட்டியல் ஆன்-லைனில் வெளியிடப்படும். இதில் ஏதேனும் குறை இருந்தால் அதை சரிசெய்ய ஒரு வாரம் கால அவகாசம் அளிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் சென்னையில் செயல்படும் தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர்கள் சேர்க்கை செயலாளரை அணுகி குறைகளை சரி செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் தகுதி மதிப்பெண் அடிப்படையில் பல குழுக்களாக பிரிக்கப்படுவார்கள். அவ்வாறு பிரிக்கப்பட்ட குழுக்கள் கலந்தாய்வு சுற்றுகளில் மதிப்பெண்களின்படி அனுமதிக்கப்படுவார்கள். தற்காலிக இட ஒதுக்கீடு விண்ணப்பதாரர்கள் கலந்தாய்வுக்கான முன்வைப்பு தொகையை ஆன்-லைன் மூலம் செலுத்திய பின்பு தங்களுக்கு விருப்பமான கல்லூரி மற்றும் பாடப்பிரிவை பதிவு செய்யலாம். எத்தனை கல்லூரிகளை வேண்டுமானாலும் வரிசையாக பதிவு செய்யலாம். இதற்காக 3 நாட்கள் ஒதுக்கப்படும். இதன்பின்பு, தற்காலிக இட ஒதுக்கீடு அளிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் இதை தங்களது லாக்-இன் மூலமாக மறுநாள் பார்த்துக்கொள்ளலாம். இதை 2 நாட்களுக்குள் விண்ணப்பதாரர்கள் உறுதி செய்ய வேண்டும். குறுஞ்செய்தி கலந்தாய்வு குறித்த தகவல் அவ்வப்போது விண்ணப்பதாரர்கள் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி(எஸ்.எம்.எஸ்.) மூலமாக அனுப்பப்படும். அதேபோன்று இ-மெயிலுக்கும் தகவல் அனுப்பப்படும். மேலும், தகவல் அறிய விரும்புபவர்கள் https://tnea.ac.in மற்றும் https://www.an-n-au-n-iv.edu என்ற இணையதள முகவரியை பார்க்கலாம். அதேபோன்று 044-22359901-ல் தொடங்கி 22359920 வரையிலான தொலைபேசியில் தொடர்பு கொண்டும் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம். மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்களுக்கான கலந்தாய்வு, தொழிற்துறை படிப்புக்கான கலந்தாய்வு, ஆதிதிராவிடர் அருந்ததியருக்கான இட ஒதுக்கீடு நிரப்பப்படாத பட்சத்தில் அந்த இடத்தை நிரப்ப ஆதிதிராவிட மாணவர்களுக்காக நடத்தப்படும் கலந்தாய்வு, துணை கலந்தாய்வு ஆகியவை நேர்முக கலந்தாய்வாக சென்னையில் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது தமிழக உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் சுனில்பாலிவால், தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை செயலாளர் ரைமன்ட் உத்தரியராஜ், அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கணேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

10ம் வகுப்பு பாடம் நடத்தாதவர்கள் விடைத்தாள் திருத்த அழைப்பு

சிவகங்கை கல்வி மாவட்டத்தில் 10 ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணிக்கு 10ம் வகுப்பிற்குபாடம் நடத்தாத பட்டதாரி ஆசிரியர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால் மாணவர்களின் மதிப்பெண் குறைய வாய்ப்புள்ளதாக தலைமை ஆசிரியர்கள் தெரிவித்தனர். சிவகங்கை கல்வி மாவட்டத்தில் 10 ம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் பணி நாளை 24 ந் தேதி சிவகங்கை ஜஸ்டின் பள்ளியில் நடக்க உள்ளது.விடைத்தாள்களை திருத்தும் பணிக்கு சிவகங்கை கல்வி மாவட்டத்தில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதில்10ம் வகுப்பிற்கு பாடம் நடத்தாத ஆசிரியர்களுக்கும் அழைப்பு அனுப்பபட்டுள்ளது. தலைமை ஆசிரியர் ஒருவர் கூறுகையில், 10ம் வகுப்பிற்கு பாடம் எடுத்த ஆசிரியர்கள் மாணவர்கள் எழுதிய கருத்தை உள்வாங்கி மதிப்பெண்களை வழங்குவர். ஆனால் பாடம் எடுக்காத ஆசிரியர்கள் 'கீ ஆன்சர்களை' மட்டும் கொண்டு மதிப்பெண்வழங்குவதால், மாணவர்கள் உரிய பதிலை கருத்தோடு எழுதியிருந்தாலும் குறைவான மதிப்பெண்கள் கிடைக்கவாய்ப்புள்ளது. ஆங்கிலத்திற்கு பணி மூப்பு அடிப்படையில் ஆங்கில ஆசிரியர்கள் இல்லாமல் வேறு பாடங்களுக்கு பாடம் எடுத்த ஆசிரியர்கள் திருத்த வாய்ப்புள்ளதால் மதிப்பெண் குறைய வாய்ப்புஉள்ளது, என்றார். பள்ளி கல்வி துறை அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது: விடைத்தாள்களுக்கு ஏற்பபட்டதாரி ஆசிரியர்களுக்கு அழைப்பு அனுப்பபட்டுள்ளது, பாடம் எடுக்காத ஆசிரியர்கள் இருந்தால்திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மேலும் ஆங்கில பாடத்திற்கு ஆங்கில ஆசிரியர்களைகொண்டு திருத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுஉள்ளது, என்றார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தினமும் ஒரு மணி நேரம் விளையாட்டு பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ., அறிவுறுத்தல்

'பள்ளிக்கூடங்களில், 9 - 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, தினசரி விளையாட்டு வகுப்புகள் கட்டாயமாக்கப்பட வேண்டும்' என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., உத்தரவிட்டு உள்ளது. அட்டவணை தயார் : சி.பி.எஸ்.இ., பள்ளி களில், 2018 - 19ம் ஆண்டிற்கான வகுப்பு அட்டவணை தயார் செய்யும்போது, அதில், தினசரி ஒரு வகுப்பை, ஆரோக்கியம் மற்றும் உடற்கூறு கல்விக்காக ஒதுக்கும்படி, கல்வி ஆணையம், சமீபத்தில் தெரிவித்து இருந்தது.இந்நிலையில், இந்த கல்வியாண்டிலிருந்து, 9 -12ம் வகுப்பு மாணவர்களுக்கு, தினசரி ஒரு மணி நேரம், உடற்கல்வி கட்டாயமாக்கப்பட உள்ளது.இதன்படி, மாணவர்கள், மைதானத்திற்குச் சென்று, தங்களுக்கு பிடித்த விளையாட்டுகளில், ஒரு மணி நேரம் ஈடுபட வேண்டும். இணையதளம் : இந்த ஆரோக்கியம் மற்றும் உடற்கூறு கல்விக்கு, தனியாக மதிப்பெண்கள் உண்டு. இந்த மதிப்பெண்களை, ஒவ்வொரு பள்ளிக்கூடங்களும், சி.பி.எஸ்.இ.,யின் இணைய தளத்தில் பதிவேற்ற வேண்டும்.மேலும், 10 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வு களில் பங்கேற்கும் தகுதியை பெற, இதன் மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். ஆனால், இறுதி மதிப்பெண்களில், இது சேர்த்துக் கொள்ளப்படாது. 'இதற்காக, தனியாக உடற்கல்வி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என, அவசியமில்லை. 'மற்ற வகுப்பு ஆசிரியரின் உதவியுடனேயே, இந்த வகுப்புகளை நடத்தலாம்' என, கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்காக, 150 பக்கங்களில், புதிய வழிகாட்டுதல் புத்தகத்தையும், சி.பி.எஸ்.இ., வெளியிட்டு உள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மாணவர் எண்ணிக்கை குறைவால், எந்த பள்ளியும் மூடப்படாது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

எந்த பள்ளியும் பள்ளிகள் மூடப்படாது: செங்கோட்டையன் உறுதி மாணவர் எண்ணிக்கை குறைவால், எந்த பள்ளியும் மூடப்படாது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.கோவை மாவட்டம், அன்னுாரில் நேற்று, பள்ளி கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன், நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக அரசு, பள்ளிக்கல்வித் துறையில், பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. 'நீட்' தேர்வில் அதிக அளவில், அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவ - மாணவியர் வெற்றி பெற, பயிற்சி அளிக்கப்படுகிறது. வெற்றி பெறுவர் : ஒன்பது கல்லுாரிகளில், உணவு, இருப்பிடம் இலவசமாக அளித்து, 3,145 மாணவ - மாணவியருக்கு பயிற்சி அளித்து வருகிறோம். இம்முறை அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளிலிருந்து, அதிக மாணவ - மாணவியர், நீட் தேர்வில் வெற்றி பெறுவர். வழக்கமாக பள்ளிகளில், பாடத்திட்டங்களை மாற்ற, இரண்டு ஆண்டுகள் எடுத்துக் கொள்வர். ஆனால், இங்கு எட்டு மாதங்களுக்குள் புதிய பாடத்திட்டம் தயாரித்து, அச்சுக்கு கொண்டு வந்து உள்ளோம். இதன்படி, 1, 6, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, இந்த கல்வியாண்டில், புதிய பாடத்திட்டங்கள் அமல்படுத்தப்படுகிறது. ஆறாம் வகுப்புக்கு தயாரிக்கப்பட்டுள்ள புதிய பாடத்திட்டத்தை, மத்திய அரசின் பாடத்திட்ட குழு பாராட்டியுள்ளது. பல வண்ணம் : வழக்கமாக, 70 ஜி.எஸ்.எம்., காகிதத்தில் தயாரிப்பதற்கு பதில், இம்முறை, 80 ஜி.எஸ்.எம்., காகிதத்தில், தரமாக பல வண்ணத்தில் தயாரித்துள்ளோம்.மேல்நிலை வகுப்புகளில், 15 மாணவர்களுக்கு குறைவாக உள்ள வகுப்புகளை நீக்குவது குறித்த சுற்றறிக்கை, 2015 முதல், ஒவ்வொரு ஆண்டும், அனுப்பப்படுகிறது. ஆனால், மாணவர்கள் எண்ணிக்கை குறைவால், எந்த பள்ளியும் மூடப்படாது.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 23 April 2018

காஸ்ட்லி ஆகிறது இலவச எல்.கே.ஜி.,!

இலவச எல்.கே.ஜி., அட்மிஷன் திட்டத்துக்கு விண்ணப்பிக்க, வருமான சான்றிதழ் வாங்கி தருவதாக, சில இடைத்தரகர்கள், வசூல் வேட்டையில் இறங்கியுள்ளதால், அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கட்டாய கல்வி உரிமைச்சட்டப்படி, 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ், ஏழை மாணவர்கள் தனியார் பள்ளிகளில், கல்வி கட்டணமின்றி படிக்கலாம். இதற்கு தமிழகம் முழுக்ககடந்த, 20ம் தேதி முதல், &'ஆன்லைன்&' முறையில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. கல்வி இணையதளத்தில், (www.dge.tn.gov.in) அந்தந்த மாவட்டத்திற்கு தனியாக, மெட்ரிக் மற்றும் நர்சரி, பிரைமரி பள்ளிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன. இதில், குடியிருப்பின் அருகாமையில் உள்ள, ஐந்து பள்ளிகளை பெற்றோர் தேர்வு செய்யலாம். ஏதேனும் ஒரு பள்ளியில் அட்மிஷன் உறுதி செய்யப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்கும் நலிவடைந்த பிரிவினர், வாய்ப்பு மறுக்கப்பட்டோருக்கு, வருமான சான்றிதழ் தேவையில்லை. பொருளாதாரத்தில் பின்தங்கியோராக இருந்தால், ஆண்டு வருமானம், 2 லட்சம் ரூபாய்க்குள் இருப்பது அவசியம். இதற்கு, வருமான சான்றிதழ் பெறும் நடைமுறைகள், ஆன்லைன் மயமாக்கப்பட்டுள்ளன. அனைத்து இ - சேவை மையங்களிலும், விண்ணப்ப கட்டணம் செலுத்தினால், 15 நாட்களில், இச்சான்றிதழை இலவசமாக பெற முடியும். இதற்காக தகவல் வேண்டி, இ - சேவை மையம் செல்வோரை, இடைத்தரகர்கள் சூழ்ந்து கொண்டு, விரைவில் சான்றிதழ் பெற்று தருவதாக கூறி, வசூல் வேட்டை நடத்துவதாக, புகார் எழுந்துள்ளது. பொதுமக்கள் சிலர் கூறுகையில், &'இ - சேவை மையங்களில் விண்ணப்பித்தால், விரைவில் சான்றிதழ் பெற முடியாது என கூறி, இடைத்தரகர்கள் மூளைசலவை செய்கின்றனர். படிக்க தெரியாதவர்கள், வீண் அலைச்சலுக்கு பயந்து, பணம் கொடுக்கின்றனர். இடைத்தரகர்கள் மூலமாக, இ - சேவை மையத்தை அணுகுவோருக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. உரிய துறை அதிகாரிகள், இ - சேவை மையங்களில் ஆய்வு நடத்தினால், பொதுமக்கள் விண்ணப்பிப்பதில் சிக்கல் இருக்காது. மே 18ம் தேதி வரை மட்டுமே, இத்திட்டத்துக்கு விண்ணப்பிக்க இயலும். எனவே, சான்றிதழ் வழங்கும் நடவடிக்கைகளை, துரிதப்படுத்த வேண்டும்&' என்றனர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

குரூப்-2 பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வானவர்கள் இணையதளத்தில் மூலச்சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் டி.என்.பி.எஸ்.சி. தகவல்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுக்கட்டுப்பாடு அலுவலரும், செயலாளருமான (பொறுப்பு) இரா.சுதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு 2ஏ-வில் (நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகள்) அடங்கிய பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு மூலசான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். அதற்கான வசதி நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. அடுத்த மாதம் (மே) 4-ந் தேதிக்குள் தங்களது மூலச்சான்றிதழ்களை தேர்வாணைய இணையதளத்தில் அரசு கேபிள் டி.வி. நிறுவனம் நடத்தும் அரசு இ-சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்ய வேண்டும். இதற்கான சேவையை மாவட்ட கலெக்டர்கள் அந்தந்த மாவட்டங்களில் தொடங்கி வைக்க உள்ளனர். சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் என்னென்ன சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்ற குறிப்பாணையும், எந்தெந்த அரசு இ-சேவை மையங்களில் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யலாம் என்ற அரசு இ-சேவை மையங்களின் முகவரியுடன் கூடிய பட்டியலும் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், அவர் வெளியிட்டுள்ள மற்றொரு செய்திக்குறிப்பில், ‘தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த ஜனவரி 12-ந் தேதியன்று, தொழிலாளர் உதவி கமிஷனர் (அசிஸ்டெண்ட் கமிஷனர் ஆப் லேபர்) பதவிக்கு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. அதற்கான தேர்வு வருகிற 29-ந் தேதி முற்பகல் மற்றும் பிற்பகலில் 6 மாவட்ட தலைநகரங்களில் (சென்னை, மதுரை, கோவை, சேலம், திருச்சி, நெல்லை) நடைபெற உள்ளது. இதற்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு (ஹால் டிக்கெட்) www.tnps-c-ex-ams.net எனும் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்கள் நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பேராவூரணி அருகே அரசுப் பள்ளியில் சேரும் மாணவருக்கு தங்க நாணயம் பெற்றோருக்கும் ஊக்கத் தொகை

பேராவூரணி அருகே அரசுப் பள்ளியில் சேரும் மாணவருக்கு தங்க நாணயம் பெற்றோருக்கும் ஊக்கத் தொகை பேராவூரணி அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புதிதாக சேரும் மாணவருக்கு ஒரு கிராம் தங்க நாணயமும், பெற்றோருக்கு ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகையும் கிராம மக்கள் சார்பில் வழங்கப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை அடுத்த துலுக்கவிடுதி வடக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 87 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். 7 ஆசிரியர், ஆசிரியைகள் பணிபுரிகின்றனர். இப்பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில், புதிதாக 1 முதல் 8-ம் வகுப்பு வரை சேரும் மாணவர்களுக்கு புரவலர்கள் மூலமாக ஒரு கிராம் தங்க நாணயம், பெற்றோருக்கு ஊக்கத் தொகையாக ரூ.1000-ம் வழங்க முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. அறிவிக்கப்பட்ட சில நாட்களிலேயே 15 புதிய மாணவர்கள் பள்ளியில் சேர்ந்தனர். புதிதாக பள்ளியில் சேர்ந்தவர்களுக்கு தங்க நாணயம் வழங்கும் விழா கூடுதல் தொடக்கக் கல்வி அலுவலர் அ.அங்கயற்கண்ணி தலைமையில் அண்மையில் நடைபெற்றது. பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பிரகலாதன், பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் ஆனந்தி முன்னிலை வகித்தினர். தலைமை ஆசிரியர் வாசுகி வரவேற்றார். விழாவில், புதிதாக பள்ளியில் சேர்ந்த 15 மாணவர்களுக்கு நேரு இளைஞர் நற்பணி மன்றத்தினர் தலா ஒரு கிராம் தங்க நாணயம் வழங்கினர். முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் செந்தில்குமார் 15 குழந்தைகளின் பெற்றோருக்கு தலா ரூ.1000 வீதம் வழங்கினார். கூட்டத்தில், விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும்போது புதிதாக 50 மாணவர்களை சேர்ப்பது, அவர்களுக்கும் இதேபோல தங்க நாணயம், பெற்றோருக்கு ஊக்கத் தொகையும் வழங்குவது என முடிவுசெய்யப்பட்டது. மாணவர் முன்னேற்ற அமைப்பின் தலைவர் பழனிவேல், பள்ளி வளர்ச்சிக் குழு தலைவர் செல்வராசு, கிராம பிரமுகர்கள் அண்ணா பரமசிவம், ராமநாதன், ராமச்சந்திரன், ஆசிரியர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதுகுறித்து கிராம மக்கள் கூறியது: இந்தப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து முடிக்கும் மாணவ, மாணவிகள் 9-ம் வகுப்பில் சேர, 5 கி.மீ. தொலைவில் உள்ள புதுக்கோட்டை மாவட்டம் அணவயல் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கோ அல்லது 6 கி.மீ. தொலைவில் உள்ள ஆவணம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கோ செல்ல வேண்டியுள்ளது. இதனால் இப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தக் கோரி, நாங்கள் பங்களிப்புத் தொகையை அரசுக்கு செலுத்தியுள்ளோம். ஆனால், இப்பள்ளியில் 8-ம் வகுப்பு வரை குறைந்தபட்சம் 120 மாணவர்கள் இருந்ததால்தான், தரம் உயர்த்த முடியும் என்ற நிலை உள்ளது. எனவே, மாணவர் சேர்க்கை அதிகரிக்க, இதுபோன்ற முயற்சியை முன்னெடுத்துள்ளோம் என்றனர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

காலியாக உள்ள அரசு பணியிடங்களை விரைவாக நிரப்ப புதிய நடைமுறை அறிமுகம் துறை தலைவர்களே முடிவு செய்யலாம்

காலியாக உள்ள அரசு பணியிடங்களை விரைவாக நிரப்ப புதிய நடைமுறை அறிமுகம் துறை தலைவர்களே முடிவு செய்யலாம் ஜெ.கு.லிஸ்பன் குமார் தமிழக அரசு பணியில் காலியிடங்களை விரைவாக நிரப்ப புதிய நடைமுறை பின்பற்றப்பட இருக்கிறது. அதன்படி, அந்தந்த துறைகளின் தலைவர்களே காலியிடங்களை முடிவுசெய்துகொள்ளலாம். அவர்கள் தற்போது இருப்பதுபோல நிதித்துறையிடமோ, பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறையிடமோ, பணியாளர் குழுவிடமோ ஒப்புதல் பெறத் தேவையில்லை. தமிழக அரசின் பல்வேறு துறைகளில் ஏறத்தாழ 12 லட்சம் அரசு ஊழியர்கள், அலுவலர்கள், ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். பணி ஓய்வு, விபத்தில் மரணம், விருப்ப ஓய்வு காரணமாக அரசு துறைகளில் காலியிடங்கள் ஏற்படுகின்றன. இந்த இடங்களை நிரப்புவதற்கு அந்தந்த துறைகளின் தலைவர்கள் காலியிடங்கள் பட்டியலை ஆண்டுதோறும் அரசுக்கு அனுப்பிவைப்பர். அங்கு நிதித்துறை, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை, பணியாளர் குழு ஆகியவற்றின் ஒப்புதல் பெறப்பட்டு டிஎன்பிஎஸ்சி, ஆசிரியர் தேர்வு வாரியம் உள்ளிட்ட தேர்வாணையங்கள் மூலமாகவோ, மின்சார வாரியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் சிறப்பு தேர்வுகள் மூலமாகவோ அக் காலியிடங்களுக்கு ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள். இவ்வாறு துறைத்தலைவர்கள் காலியிடங்கள் பட்டியலை அனுப்பி குறிப்பிட்ட துறைகளின் ஒப்புதல் பெற்று காலியிடங்களை நிரப்புவதற்கு அதிக காலம் எடுத்துக்கொள்கிறது. துறைத்தலைவர் மூலம் அனுப்பப்படும் காலியிடங்களுக்கு அப்படியே ஒப்புதல் கிடைக்கும் என்று சொல்லவும் முடியாது. அரசின் நிதிநிலையை காரணம் காட்டி காலியிடங்களின் எண்ணிக்கை குறைக்கப்படலாம். மாநில பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறையின் செயலர் எஸ். ஸ்வர்ணா அண்மையில் வெளியிட்ட அரசாணை: அரசு துறைகளில் காலியிடங்களை விரைவாக நிரப்பும் வகையில், காலியிடங்களை கணக்கிடுவதற்கு தற்போது நடைமுறையில் இருந்துவரும் முறையை மாற்றியமைக்க அரசு முடிவுசெய்துள்ளது. துறைத்தலைவர்கள் பணிநியமன அலுவலர்களாக இருக்கும்பட்சத்தில் காலியிடங்களுக்கு நிதித்துறையிடமோ, பணியாளர் மற்றும் நிர்வாகச்சீர்திருத்தத்துறையிடமோ, பணியாளர் குழுவிடமோ ஒப்புதல் பெறாமல் அவர்களே முடிவு செய்துகொள்ளலாம். அதேபோல், துறைத்தலைவர்களுக்கு அடுத்தநிலையில் உள்ள சார்நிலை அதிகாரிகள் பணிநியமன அலுவலர்களாக இருக்கும்பட்சத்திலும் இதே நடைமுறை பொருந்தும். டிஎன்பிஎஸ்சி, ஆசிரியர் தேர்வு வாரியம் உள்ளிட்ட தேர்வு வாரியங்கள் மூலமாக நிரப்பப்படும் பணிகளில் உள்ள காலியிடங்களையும் சம்பந்தப்பட்ட துறைத்தலைவர்களே முடிவு செய்துகொள்ளலாம். இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது. என்ஜிஓ சங்கம் வரவேற்பு அரசு துறைகளில் காலியிடங்களை மதிப்பீடு செய்வது தொடர்பான புதிய நடைமுறை குறித்து தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய (என்ஜிஓ) மாநில தலைவர் இரா.சண்முகராஜன் கூறும்போது, “புதிய முறையின்படி நேரம் பெருமளவு மிச்சமாகும். எனவே, நேரடி பணிநியமனங்கள் விரைவாக முடிக்கப்படும். இப்புதிய நடைமுறை வரவேற்கத்தக்கது” என்றார். “தற்போதைய நடைமுறையில், ஆசிரியர் காலியிடங்களுக்கு சம்பந்தப்பட்ட அரசு துறைகளிடம் ஒப்புதல் பெற்று அதை இறுதிசெய்வதற்கு அதிக காலம் ஆகிவிடுகிறது. அரசின் புதிய முறை மூலம் அரசு பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்பமுடியும்” என்று பள்ளிக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் தெரிவித்தார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

புத்தக தினத்தை முன்னிட்டு பல்வேறு பதிப்பகங்களில் 50 சதவீதம் வரை தள்ளுபடி பபாசி அமைப்பு அறிவிப்பு

புத்தக தினம் இன்று (ஏப்ரல் 23) கொண்டாடப்படுவதை முன்னிட்டு பல்வேறு பதிப்பகங்களில் 50 சதவீதம் வரை தள்ளுபடியில் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட உள்ளதாக பபாசி அமைப்பு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க (பபாசி) தலைவர் எஸ். வயிரவன், செயலாளர் அரு. வெங்கடாச்சலம் ஆகியோர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- உலக புத்தக தினத்தை சிறப்பிக்கும் வகையில் வாசிப்புப் பழக்கத்தை விசாலப்படுத்துவதற்காகவும் வாசகர்கள் வாங்கும் புத்தகங்களுக்கு பல்வேறு பதிப்பகங்கள் 20 முதல் 50 சதவீதம் வரை தள்ளுபடி அறிவித்துள்ளன. சென்னையில் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் (அனைத்து கிளைகளிலும்) கண்ணதாசன் பதிப்பகம், பாரதி புத்தகாலயம், குமரன் பதிப்பகம், கலைஞன் பதிப்பகம் - அநுராகம், வனிதா பதிப்பகம், சாஜிதா புக் செண்டர், இஸ்லாமிக் பவுண்டேஷன் ட்ரஸ்ட், உயிர்மை பதிப்பகம், டிஸ்கவரி புக் பேலஸ், நவீன விருட்சம் மற்றும் பொள்ளாச்சி எதிர் வெளியீடு, ராஜபாளையம் முன்னேற்றப் பதிப்பகம் ஆகிய பதிப்பகங்கள் மற்றும் புத்தக விற்பனையகங்களில் மேற்கண்ட சலுகையை பெறலாம். மேலும், உலக புத்தக தினத்தை முன்னிட்டு சென்னை எழும்பூர் கன்னிமரா நூலக வளாகத்தில் அமைந்துள்ள நிரந்தரப் புத்தகக் காட்சி வளாகத்திலும் சிறப்புக் கழிவுடன் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தொடக்கக்கல்வி பட்டயத் தேர்வுக்கு தனித்தேர்வர்கள் நாளைக்குள் விண்ணப்பிக்கலாம்

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்கு (ஜூன் 2018) சிறப்பு அனுமதி திட்டத்தின்கீழ் (தட்கல்) தனித்தேர்வர்கள் நாளைக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தொடக்கக்கல்வி பட்டயத் தேர்வுகள் ஜூன் 4-ம் தேதி தொடங்கி 21-ம் தேதி வரை நடைபெற உள்ளன. இதற்கு விண்ணப்பிக்கத் தவறியவர்களுக்கு தற்போது சிறப்பு அனுமதி திட்டத்தின்கீழ் (தட்கல்) விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படுகிறது. எனவே, தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, ஏற்கெனவே தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற மதிப்பெண் சான்றிதழ்களின் நகல்களை இணைத்து சம்பந்தப்பட்ட மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம் வரும் ஏப்ரல் 23, 24-ம் தேதிகளில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.50, பதிவுக் கட்டணம் ரூ.10, மதிப்பெண் சான்றிதழ் (முதலாம் ஆண்டு) ரூ.100, இரண்டாம் ஆண்டு ரூ.100, சிறப்பு அனுமதி கட்டணம் ரூ.1,000, சேவைக் கட்டணம் ரூ.5, ஆன்லைன் பதிவுக் கட்டணமாக ரூ.50 செலுத்த வேண்டும். தேர்வுக் கூட அனுமதிச்சீட்டு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 24-ம் தேதி (நாளை) மாலைக்குள் சமர்ப்பிக்க வேண்டும். சிறப்பு அனுமதி திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கும் தேர்வர்களுக்கு தேர்வுக் கூட அனுமதிச் சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாட்கள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும். தபால் மூலமாக பெறப்படும் விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மத்திய தொழில்நுட்ப கல்வி மையமான ஐ.ஐ.டி.யின் மெட்ராஸ் கிளையில் ஜூனியர் டெக்னீசியன், என்ஜினீயர், டெபுடி ரிஜிஸ்திரார் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது.

ஐ.ஐ.டி. மெட்ராஸ் மத்திய தொழில்நுட்ப கல்வி மையமான ஐ.ஐ.டி.யின் மெட்ராஸ் கிளையில் ஜூனியர் டெக்னீசியன், என்ஜினீயர், டெபுடி ரிஜிஸ்திரார் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 25 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். அலுவலக பணியிடங்களில் 32 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களுக்கும், அதிகாரி பணியிடங்களில் 50 வயதுடையவர்களுக்கும் வாய்ப்பு உள்ளது. அந்தந்த பணிக்கான வயது வரம்பை இணையதளத்தில் பார்க்கலாம். சிவில், எலக்ட்ரிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், மெக்கானிக்கல், கெமிஸ்ட்ரி போன்ற என்ஜினீயரிங், தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு பணிவாய்ப்பு உள்ளது. அதிகாரி தரத்திலான பணிக்கு குறிப்பிட்ட பிரிவுகளில் முதுநிலை பட்டப்படிப்பும், பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் இது பற்றிய விரிவான விவரங்களை https://recruit.iitm.ac.in/external/ என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் 19-5-2018-ந் தேதியாகும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டர், ஜெராக்ஸ் ஆபரேட்டர், இரவு காவலாளி, துப்புரவு பணியாளர் போன்ற பணியிடங் களுக்கு 37 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டர், ஜெராக்ஸ் ஆபரேட்டர், இரவு காவலாளி, துப்புரவு பணியாளர் போன்ற பணியிடங் களுக்கு 37 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், தட்டச்சு தெரிந்தவர்கள் மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. அந்தந்த பணிக்கான கல்வித் தகுதியை இணையதளத்தில் பார்க்கலாம். விருப்பமுள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை நிரப்பி அனுப்ப வேண்டும். விண்ணப்பம் 28-4-2018-ந் தேதிக்குள் முதன்மை மாவட்ட நீதிபதி, முதன்மை மாவட்ட நீதிமன்றம், திருநெல்வேலி 627002 என்ற முகவரிக்கு சென்றடைய வேண்டும். மாதிரி விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கவும், இது பற்றிய விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் http://ecourts.gov.in/tn/tirunelveli என்ற முகவரியைபார்க்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

புத்தக வங்கி துவங்க உத்தரவு

மாணவர்கள் பயன்படுத்திய பழைய பாடப்புத்தகங்களை சேகரித்து, புத்தக வங்கி துவங்கும்படி, அனைத்து அரசு பள்ளிகளுக்கும், டில்லி அரசு உத்தரவிட்டுள்ளது. தலைநகர் டில்லியில், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த, அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக உள்ளார். ஒவ்வொரு ஆண்டும், பாடப் புத்தகம் அச்சிட, லட்சக்கணக்கான டன் காகிதம் பயன்படுத்தப்படுகிறது. தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, அவர்கள் செல்லும் வகுப்புக்கான புதிய பாடப் புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. முந்தைய வகுப்பில் பயன்படுத்திய பழைய பாட புத்தகங்களை சேகரித்து, தேவைப்படுவோருக்கு வழங்கலாம் என, தேசிய பசுமை தீர்ப்பாயம் பரிந்துரைத்தது. அதன்படி, அனைத்து பள்ளிகளிலும், புத்தகவங்கி துவங்க டில்லி அரசு முடிவு செய்தது. இதுகுறித்து, அனைத்து அரசு பள்ளிகளுக்கும், மாநில கல்வித் துறை அனுப்பிய உத்தரவில் கூறியிருப்பதாவது:ஒவ்வொரு பள்ளியும், மாணவர்களிடம் இருந்து, அவர்கள் பயன்படுத்திய பழைய பாடப் புத்தகங்களை சேகரித்து, புத்தக வங்கி துவங்க வேண்டும்.இவ்வாறு சேகரிக்கப்படும், பாடப் புத்தகங்களை, பள்ளி நிர்வாக கமிட்டி மூலம், மிகவும் நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு வழங்கலாம்.இவ்வாறு அந்தஉத்தரவில் கூறப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

வீடுகளில் கழிப்பறை கட்டாத, 600அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதை நிறுத்த உத்தரவு.

ஜம்மு - காஷ்மீர் மாநிலம், கிஷ்த்வார் மாவட்டத்தில், வீடுகளில் கழிப்பறை கட்டாத, 600 அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஜம்மு - காஷ்மீரில், முதல்வர், மெஹபூபா முப்தி தலைமையிலான, மக்கள் ஜனநாயக கட்சி - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.'துாய்மை இந்தியா' திட்டத்தின் கீழ், திறந்தவெளி கழிப்பறை இல்லாத மாநிலமாக்க, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.லடாக்கின்லே மற்றும் கார்கில் மாவட்டங்கள், காஷ்மீரின் தென் பகுதியில் உள்ள ஷோபியான் மற்றும் ஸ்ரீநகர் ஆகியவை திறந்தவெளி கழிப்பறை இல்லா மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இம்மாத இறுதிக்குள், அனந்தநாக் மற்றும் புல்வாமா மாவட்டங்களில், கழிப்பறை கட்டும் பணி, 100 சதவீதம் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.கிஷ்த்வார் மாவட்டத்தில், கழிப்பறை கட்டும் பணி, 57 சதவீதத்தை எட்டியுள்ளது. இங்கு பணிபுரியும் அரசுஊழியர்களின் வீடுகளில் கழிப்பறை கட்டப்பட்டுள்ளதா என, ஆய்வு செய்யப்பட்டது; அப்போது, 616 ஊழியர்களின் வீடுகளில் கழிப்பறை கட்டப்படாதது தெரியவந்தது. இதையடுத்து, கழிப்பறை கட்டும் வரை, அந்த ஊழியர்களின் மாத சம்பளத்தை நிறுத்தும்படி, மாவட்ட அபிவிருத்தி ஆணையர், அங்கிரேஸ் சிங் ராணா உத்தரவிட்டார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மகப்பேறு விடுப்புக் காலம் பணிக்காலம்தான்! உயர்நீதிமன்றம்உத்தரவு

மகப்பேறு விடுப்புகாலத்தை பணிக்காலமாகதான் கருத வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அரசு மருத்துவர்களாக இரண்டு ஆண்டு பணியாற்றியவர்களுக்கு முதுகலை மருத்துவ மேற்படிப்பில் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. மேலும் அவர்கள் பணியாற்றிய பகுதிகளை பொறுத்து சலுகை மதிப்பெண்ணும் வழங்கப்படுகிறது.இந்நிலையில் வரும் கல்வியாண்டில் சேர்க்கை தொடர்பான அறிவிப்பாணையை தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்டது. இதில் தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகள் அரசுமருத்துவர்களாகப் பணி யாற்றி இருக்க வேண்டும் எனவும், மகப்பேறு விடுப்பு எடுத்திருந்தால் அது பணிக்காலமாக எடுத்துக் கொள்ளப்படமாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டது.இதை எதிர்த்து அருணா என்பவர் உள்ளிட்டபல மருத்துவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி தனிநீதி பதி, இது தொடர்பாக முடிவு எடுக்க இரு நீதிபதிகள் அமர்விற்கு வழக்கை மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்தார். இதன்படி இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் குலுவாடி ஜி.ரமேஷ், நீதிபதிதண்டபாணி ஆகியோர் அடங்கிய அமர்வு, பெண்ஊழியர்களையும், அவர்களின் சிசுக்களையும் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வழங்கப்படும் மகப்பேறு விடுப்பு காலத்தைபணிக்காலமாக கருதி, சலுகை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என தமிழகஅரசுக்கு உத்தரவிட்டது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, 21 April 2018

கோடை வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு சனிக்கிழமை (ஏப்.21) முதல் மே 31-ஆம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கோடை வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு சனிக்கிழமை (ஏப்.21) முதல் மே 31-ஆம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் ஒரு வாரத்திற்கு முன் நிறைவுபெற்றன. 10-ஆம் வகுப்புக்கு சமூக அறிவியல் தேர்வு வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. தனியார், நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் 5-ஆம் வகுப்பு வரையில் தேர்வுகள் ஏற்கெனவே முடிவடைந்து விட்டன. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வெள்ளிக்கிழமையுடன் தேர்வுகள் முடிவடைகின்றன. எனவே, நிகழ் கல்வியாண்டுக்கான வேலைநாள்கள் ஏப்ரல் 20-ஆம் தேதியுடன் நிறைவு பெறுகின்றன. முன்கூட்டியே முடிக்கப்பட்ட தேர்வுகள்: வழக்கமாக ஏப்ரல் மாதம் இறுதி வரை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் நடைபெறும். ஆனால், இந்த ஆண்டு 10 நாள்கள் முன்னதாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என்பதால் தேர்வுகளை முன்கூட்டியே நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அதனால், ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக மே மாதம் மட்டும் தான்விடுமுறை வழங்கப்படும். இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில்10 நாள்களுடன் மே மாத விடுமுறையும் சேர்த்து 40 நாள்களுக்கு மேலாக மாணவர்களுக்கு விடுமுறை கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து, ஜூன் 1-ஆம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ரெ.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அதிகமான பாடங்களை கற்பிக்க வற்புறுத்தவில்லை: நீதிமன்றத்தில் என்சிஇஆர்டி பதில்

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) விநியோகிக்கும் புத்தகங்களை மட்டும் சிபிஎஸ்இ பள்ளிகள் பயன்படுத்த உத்தரவிடக் கோரி தொடரப்பட்டுள்ள வழக்கில், 'ஒருபோதும் அதிகமான பாடங்களை கற்பிக்க வேண்டுமென பள்ளிகளை வற்புறுத்தவில்லை'என என்சிஇஆர்டி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில்தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞர் புருஷோத்தமன் தாக்கல் செய்த மனுவில், 'கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும்பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) பாடத்திட்டத்தின்படி முதல் வகுப்பில் மூன்று பாடங்கள் மட்டுமே பயிற்றுவிக்கப்படுகிறது. மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) பாடத்திட்டத்தை பின்பற்றும் தனியார் பள்ளிகள் முதல் வகுப்பில் எட்டுப் பாடங்களை பயிற்றுவிக்கின்றன. இதனால் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் 5 முதல் 7 கிலோ எடையுள்ள புத்தகப் பைகளைச் சுமந்து செல்கின்றனர். இதனால் குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். எனவே, என்சிஇஆர்டி விநியோகிக்கும் புத்தகங்களை மட்டும் சிபிஎஸ்இ பள்ளிகள் பயன்படுத்த சிபிஎஸ்இ நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும்' எனக் கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இந்த மனு தொடர்பாக மத்திய அரசு, என்சிஇஆர்டி மற்றும் சிபிஎஸ்இ பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. தரமான புத்தகங்கள்: இதையடுத்து, என்சிஇஆர்டி செயலாளர் மேஜர் ஹர்ஷ் குமார் பதில்மனு தாக்கல் செய்தார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:குழந்தைகள் மத்தியில் எந்தவிதமான கல்வி பாகுபாடும் பார்க்கக் கூடாது. எந்தவொரு குழந்தைக்கும் கல்வி மனஅழுத்தத்தையும் தரக்கூடாது என பள்ளிகளுக்கு அறிவுறுத்தி உள்ளோம். கல்வித் தரத்தை மேம்படுத்தும் வகையில் தலைசிறந்த ஆசிரியர்களைக் கொண்டு பாடப் புத்தகங்களை நாங்களே வடிவமைத்து வழங்கி வருகிறோம். ஆண்டுதோறும் குறைவான கட்டணத்தில் 364 தலைப்புகளில் தரமான புத்தகங்களை வெளியிடுகிறோம். ஒரு குழந்தை எவ்வளவு நேரம் படிக்க வேண்டும், எவ்வளவு நேரம் கற்பிக்க வேண்டும் என்பதை வரையறுத்துதான் பாடத்திட்டம் உருவாக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் ஆரம்ப கல்வியில் இருந்து இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப் பாடம் கொடுக்கக் கூடாது. 3 -ஆம்வகுப்பிலிருந்து 5-ஆம் வகுப்பு வரை வாரத்துக்கு 2 மணி நேரம் வீட்டுப் பாடம் கொடுக்க வேண்டும். 8 -ஆம் வகுப்பு வரையிலான நடுநிலைப் பள்ளிகளில் தினமும் ஒரு மணி நேரம் வீதம், வாரத்தில் 5 முதல் 6 மணி நேரமும், 9 -ஆம் வகுப்பு முதல் 12 - ஆம் வகுப்பு வரை தினமும் 2 மணி நேரம் வீதம் வாரத்தில் 10 முதல் 12 மணி நேரம் மட்டுமே வீட்டுப்பாடம் கொடுக்கப்பட வேண்டும் என ஏற்கெனவே பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வற்புறுத்தவில்லை: புத்தகச் சுமையைக் குறைக்க முதல் மற்றும் இரண்டாம் வகுப்புகளுக்கு மொழிப்பாடம், கணிதம் ஆகிய இரண்டு பாடங்களையும், மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மொழிப்பாடம், சூழ்நிலையியல், கணிதம் ஆகிய 3 பாடங்களை மட்டுமே கற்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இவை தவிர பொது அறிவுப் பாடமும் கொடுக்கப்பட்டுள்ளது. என்சிஇஆர்டி ஒருபோதும் அதிகமான பாடங்களை கற்பிக்க வேண்டுமென வற்புறுத்தவில்லை. அதே போன்று, பள்ளியில் விநியோகிக்கும் புத்தகங்களை வாங்க வேண்டும் என மாணவர்களை ஒருபோதும் நிர்பந்திக்கக் கூடாது. இதுகுறித்து பெற்றோர்களும் பள்ளி நிர்வாகத்துடன் பேச வேண்டும். அதே வேளையில் எல்லா பாடங்களையும் ஒரே நாளில் கற்பிக்க வேண்டிய கட்டாயமும் கிடையாது. வாழ்க்கைக்குத் தேவையான அறிவை போதிக்கும் இடமாக திகழவேண்டிய பள்ளிகள் தரமான கல்வியை மட்டுமே கற்பிக்க வேண்டும். கல்வி ஒருபோதும் சுமையாக இருக்கக்கூடாது என்பதை தாரகமந்திரமாக வைத்து என்சிஇஆர்டி செயல்பட்டு வருகிறது. மேலும் மின்னணு வடிவிலான இ-புத்தக திட்டத்தையும் வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறோம். இதனை கைபேசி செயலி வழியாகவும் பெற முடியும் என அந்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

நீட் தேர்வுக்கூடங்களை மாற்ற இயலாது: சிபிஎஸ்இ அறிவிப்பு

எம்.பி.பி.எஸ். படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு கூடங்களை மாற்ற இயலாது என்று மத்திய இடைநிலைக் கல்விவாரியம் (சிபிஎஸ்இ) அறிவித்துள்ளது. இதுதொடர்பாக சிபிஎஸ்இ நீட் தேர்வு இயக்குநரகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பு: நீட் தேர்வுக்கான தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை பதிவிறக்கம் செய்த பிறகு மாணவர்கள் தரப்பில் இருந்துசில கோரிக்கைகள் வந்துள்ளன. அதன்படி, தாங்கள் முதல் தேர்வாக குறிப்பிட்டிருந்த நகரத்தில் தங்களுக்கு தேர்வுக்கூடம் அளிக்கப்படவில்லை என பலரும், தேர்வு நடைபெறும் நகரத்தை தவறாக தேர்வு செய்துவிட்டதாக பலரும் கூறி, தங்களுக்கு தேர்வு நடைபெறும் நகரங்களை மாற்றித் தரும்படி கோரியுள்ளனர். ஏற்கெனவே, தேர்வு அறிவிக்கையில் தெரிவித்த விதிகளின்படி, எந்தக் காரணத்தைக் கொண்டும் தேர்வு நகரங்கள், தேர்வுக் கூடங்கள் மாற்றப்படாது. ஏனென்றால், நீட் தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விட்டன. மேலும், தேர்வு எழுதும் நகரங்கள் கணினி மூலமாகவே ஒதுக்கப்பட்டன. அதில் மனித தலையீடுகள் எதுவும் நிகழவில்லை. எனவே, தேர்வுக்கூடத்தை மாற்ற இயலாது. இதுதொடர்பாக தேர்வர்களின் கோரிக்கைகளுக்கு தனித்தனிபதில்களும் அனுப்பப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

10ம் வகுப்பு ஆங்கிலப் பாடத்திற்கு கருணை மதிப்பெண் வழங்கப்படும் : சிபிஎஸ்இ அறிவிப்பு.

10ம் வகுப்பு ஆங்கிலப் பாடத்திற்கு கருணை மதிப்பெண் வழங்கப்படும் : சிபிஎஸ்இ அறிவிப்பு. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் ஆங்கிலம் பொதுத் தேர்வு எழுதிய 10ம் வகுப்பு மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அச்சுப்பிழை காரணமாக ஆங்கிலப் பாடத்திற்கு 2 கருணை மதிப்பெண் வழங்கப்படும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. கடந்த 12ம் தேதி நடைபெற்ற சிபிஎஸ்இ 10ம் வகுப்பு ஆங்கில தேர்வு நடைபெற்றது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழகம் முழுவதும் எஸ்எஸ்எல்சி விடைத்தாள் திருத்தும் பணி ஏப்.24ல் தொடக்கம் : மே 7ம் தேதி வரை நடக்கிறது

தமிழகம் முழுவதும் எஸ்எஸ்எல்சி விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 24ம் தேதி தொடங்கி, மே 7ம் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழகத்தில் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வுகள் கடந்த மாதம் 16ம் தேதி தொடங்கியது. இன்று (20ம் தேதி) நிறைவுபெறுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 9 லட்சத்து 64 ஆயிரத்து 401 மாணவ மாணவிகள் எஸ்எஸ்எல்சி தேர்வை எழுதினர்.இவர்களைத் தவிர தனித்தேர்வர்களாக 36,649 பேர் தேர்வில்பங்கேற்றனர். இந்த நிலையில் எஸ்எஸ்எல்சி விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று தொடங்க உள்ளது. இதற்காக கல்வி மாவட்டத்திற்கு ஒன்று வீதம் விடைத்தாள் திருத்தும் மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. விடைத்தாள் திருத்தும் மையங்களில் முகாம் அலுவலர்கள் கடந்த 17ம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டனர். விடைகள் தொடர்பான பட்டியல் வரும் 23ம் தேதி விநியோகம் செய்யப்படுகிறது.ஏப்ரல் 24ம் தேதி செவ்வாய்க்கிழமை விடைத்தாள் திருத்தம் பணிகள் தொடங்குகிறது. முதல் நாளில் தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களுக்கு முதன்மை தேர்வர்கள்விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபடுவர். ஏப்ரல் 25ம் தேதி முதல் மே 7ம் தேதி வரை தமிழ், ஆங்கிலம், கணித பாடங்களில் உதவி தேர்வர்கள் விடைத்தாள் திருத்த பணிகளை மேற்கொள்வர். ஏப்ரல் 26ம் தேதி அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கு முதன்மை தேர்வர்கள் விடைத்தாள் திருத்த பணிகளை மேற்கொள்வர். ஏப்ரல் 27ம் தேதி முதல் மே 7ம் தேதி வரை அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கு உதவி தேர்வர்கள் விடைத்தாள் திருத்தும் பணிகளை மேற்கொள்வர் என்று அரசு தேர்வுகள் இயக்குநர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே அறிவியல், சமூக அறிவியல் விடைத்தாள் திருத்த தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டு இந்த புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

நெல்லை மாவட்டத்திற்கு ஏப்ரல் 27ம் தேதி உள்ளூர் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்திற்கு ஏப்ரல் 27ம் தேதி உள்ளூர் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லையப்பர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் மே 12ம் தேதி பணிநாளாக அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

1 முதல் 5-ம் வகுப்பு வரை என்ன பாடங்கள் நடத்தப்படுகின்றன? சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு ஐகோர்ட்டு கேள்வி

தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிக்கூடங்களில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நடத்தப்படும் பாடங்கள், பாடத்திட்டங்கள் குறித்து அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. புத்தக சுமை சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் எம்.புருஷோத்தமன் தாக்கல் செய்த வழக்கில், ‘தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பாடத்திட்ட விதிகளை மீறி சி.பி.எஸ்.இ. பள்ளிகள் செயல்படுகின்றன. 1 முதல் 3-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு 8 பாடங்களைப் கற்பிக்கின்றனர். தனியார் நிறுவனங்களிடம் இருந்து புத்தகங்களை வாங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் செயல்படுவதால், குழந்தைகள் தங்களது எடையை விட கூடுதல் சுமையாக புத்தகங்களை சுமந்து செல்கின்றனர்’ என்று கூறப்பட்டு உள்ளது. வீட்டு பாடம் கூடாது இந்த வழக்கை நீதிபதி என்.கிருபாகரன் விசாரித்து வருகிறார். இந்த வழக்கிற்கு தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், ‘கல்வி என்பது எந்தவொரு குழந்தைக்கும் மன அழுத்தத்தை தரக்கூடாது என்ற நோக்கத்துடன் பாடப் புத்தகங்களை வடிவமைத்து வழங்கி வருகிறோம். ஒரு குழந்தைக்கு எவ்வளவு நேரம் கல்வி கற்பிக்க வேண்டும்? எவ்வளவு நேரம் அந்த குழந்தைகளே படிக்கவேண்டும்? என்பதை வரையறுத்துத்தான் பாடத்திட்டத்தை உருவாக்கியுள்ளோம். அதன்படி 2-ம் வகுப்புவரை படிக்கும் குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் கண்டிப்பாக கொடுக்கக்கூடாது. மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை வாரத்துக்கு 2 மணி நேரமும், 8-ம் வகுப்பு வரை தினமும் ஒரு மணி நேரமும், 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தினமும் 2 மணி நேரமும் வீட்டுப்பாடம் அளிக்கப்பட வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது. பாடத்திட்டம் என்ன? இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, “இந்த வழக்கில் எதிர்மனுதாரராக உள்ள தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் சங்கம், தங்களது பள்ளிக்கூடங்களில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை என்ன பாடங்கள் நடத்தப்படுகின்றன?, அந்த பாடத்திட்டத்தின் விவரங்கள் ஆகியவற்றை அறிக்கையாக தாக்கல் செய்யவேண்டும்” என நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார்.மேலும், “சி.பி.எஸ்.இ. பள்ளிக்கூடங்களுக்கு கல்வியாண்டு ஏப்ரல் மாதமே தொடங்கிவிடுகிறது என்று கூறப்பட்டது. அவ்வாறு ஏப்ரல் மாதமே கல்வியாண்டு தொடங்கவேண்டும் என்று சி.பி. எஸ்.இ. நிர்வாகம் அனுப்பிய சுற்றறிக்கையையும் தாக்கல் செய்யவேண்டும். இந்த வழக்கு விசாரணையை வருகிற 24-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறேன்” என்று நீதிபதி உத்தரவிட்டார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் 23-ந் தேதி வெளியீடு: எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிந்தது சமூக அறிவியல் தேர்வு எளிதாக இருந்ததாக மாணவர்கள் மகிழ்ச்சி

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு  முடிந்தது. சமூக அறிவியல் தேர்வு எளிதாக இருந்ததாக மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். 2017-18 கல்வி ஆண்டுக்கான அரசு பொதுத்தேர்வுகள் கடந்த மாதம் தொடங்கின. கடந்த மாதம் 1-ந்தேதி பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கி கடந்த 6-ந்தேதி வரையிலும் நடந்தது. இந்த தேர்வினை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து 8 லட்சத்து 51 ஆயிரத்து 792 மாணவ-மாணவிகள் எழுதியுள்ளனர். இதேபோல பிளஸ்-1 வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 7-ந்தேதி தொடங்கி கடந்த 16-ந்தேதி வரை நடந்தது. இந்த தேர்வினை 8 லட்சத்து 61 ஆயிரத்து 915 மாணவ-மாணவிகள் எழுதியுள்ளனர். எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு மார்ச் மாதம் 16-ந்தேதி தொடங்கியது. தொடர்ந்து சீரான இடைவெளியில் தேர்வுகள் நடைபெற்று வந்தது. எஸ்.எஸ்.எல்.சி. இறுதித் தேர்வான சமூக அறிவியல் தேர்வு நேற்று நடந்தது. சமூக அறிவியல் தேர்வு மிகவும் எளிதாக இருந்ததாக தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்த மாணவ-மாணவிகள் தெரிவித்தனர். இதனால் அவர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். வாழ்த்துக்கள் பரிமாற்றம் பொதுத்தேர்வுகள் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் தேர்வு எழுதி முடித்துவிட்டு வெளியே வந்த மாணவ-மாணவிகள் உற்சாகத்தில் துள்ளி குதித்தனர். மாணவ-மாணவிகள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டு விடைப்பெற்று சென்றனர். ஒட்டுமொத்தமாக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வினை மட்டும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 லட்சத்து 1,140 மாணவ-மாணவிகள் எழுதியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே நேற்று நடந்த சமூக அறிவியல் தேர்வில் காப்பி அடித்ததாக 10 பேர் பிடிபட்டனர். இதில் 8 பேர் விழுப்புரம் மாவட்டத்தையும், 2 பேர் திருச்சியையும் சேர்ந்தவர்கள். பொதுத்தேர்வு முடிவுகள் பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் 16-ந்தேதி பிளஸ்-2 தேர்வு முடிவுகளும், 23-ந்தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகளும், 30-ந்தேதி பிளஸ்-1 தேர்வு முடிவுகளும் வெளியிடப்படும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த கல்வி ஆண்டில்தான் முதல் முறையாக பிளஸ்-1 வகுப்புக்கு பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டு, நடந்து முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பொதுத்தேர்வுகள் நிறைவடைந்த நிலையில் உயர் படிப்பு தொடர்பான எதிர்பார்ப்புடன் தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி மாணவ-மாணவிகள் காத்திருக்கின்றனர். இந்த கல்வி ஆண்டுக்கான பள்ளி வேலை நாட்கள் நேற்றுடன் முடிவடைந்து இன்று முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது. கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ந் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் பெயர் பட்டியலில் திருத்தம் செய்ய இறுதி வாய்ப்பு அரசு தேர்வுகள் இயக்குனர் தகவல்

அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி, அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள அவசர கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:- மாணவர்கள் நலன் கருதி, அனைத்து உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கும் மார்ச், ஏப்ரல்-2018, எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகளுக்கான பெயர் பட்டியல்களில் தேர்வர்களது தலைப்பெழுத்து, பெயர் (ஆங்கிலம், தமிழ்), பிறந்த தேதி, பாடத்தொகுதி எண், பயிற்றுமொழி, பள்ளியின் பெயர் ஆகியவற்றில் மட்டும் திருத்தங்கள் மேற்கொள்ள இறுதியாக ஒருவாய்ப்பு பள்ளிகளுக்கு தற்போது வழங்கப்படுகிறது. பள்ளி தலைமை ஆசிரியர்கள், பெயர் பட்டியல்களில் மேற்கொள்ளப்பட உள்ள திருத்தங்களின் விவரங்களை, தனித்தனியே பட்டியலிட்டு சம்பந்தப்பட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் வருகிற 23-ந் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். முதன்மை கல்வி அலுவலர்கள் வருகிற 25-ந் தேதி முதல் 27-ந் தேதிக்குள் அரசு தேர்வுத்துறை இணையதளத்தில் தங்களது ஆளுகைக்குட்பட்ட உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் இருந்து பெறப்படுகின்ற மார்ச், ஏப்ரல்-2018 எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பொது தேர்வுகளுக்கான பெயர் பட்டியல்களில் திருத்தங்களை பதிவேற்றம் செய்திட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் தமிழக மாணவர்கள் மட்டுமே படிக்கும் வகையில் சட்டம் கொண்டு வர வேண்டும் ‘நீட்’ தேர்வு எதிர்ப்பு மாநாட்டில் தீர்மானம்

தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் தமிழக மாணவர்கள் மட்டுமே படிக்கும் வகையில் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று சென்னையில் நடந்த நீட் தேர்வுக்கு எதிரான மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ‘நீட்’ விலக்கு மாநாடு உலக தமிழ் அமைப்பு, தமிழ்நாடு-புதுச்சேரி அனைத்து மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பு, தமிழர் உரிமைக்கான மாணவர்கள், இளைஞர்கள் கூட்டமைப்பு ஆகியவை சார்பில் ‘நீட்’ தேர்வுக்கு எதிரான மாநாடு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தி.மு.க. எம்.பி., திருச்சி சிவா, உலக தமிழர் பேரவை தலைவர் பழ.நெடுமாறன், ஓய்வு பெற்ற நீதிபதிகள் ராஜன், அரி பரந்தாமன், கவிஞர் வைரமுத்து, நடிகர் சத்யராஜ், பா.ம.க. சார்பில் வக்கீல் பாலு, தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் எஸ்.சி./எஸ்.டி. பிரிவு தலைவர் செல்வப்பெருந்தகை, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் துணை பொதுச்செயலாளர் ஆலூர் ஷானவாஸ், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. கலைராஜன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு, காவிரி உரிமை மீட்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் மணியரசன், தமிழக விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் உள்பட பலர் பங்கேற்றனர். மருத்துவ மாணவர்களும் அதிகளவில் கலந்துகொண்டனர். 7 தீர்மானங்கள் மாநாட்டில் 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் சில தீர்மானங்கள் வருமாறு:- * தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ‘நீட்’ விலக்கு சட்ட முன்வரைவை மத்திய அரசு உடனடியாக சட்டமாக்க வேண்டும். * கல்வி உரிமை சட்டத்தை மீண்டும் மாநில பட்டியலில் சேர்க்க வேண்டும். * தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவக்கல்லூரிகளிலும் தமிழக மாணவர் கள் மட்டுமே படிக்கும் வகையில் சட்டத்திருத்தங்களை மாநில அரசு கொண்டுவர வேண்டும். * தமிழ் இன மீட்சிக்காக போராடி வருகின்ற இளைஞர் களுக்கும், மாணவர்களுக்கும் இந்த மாநாடு பாராட்டுக்களை தெரிவிக்கிறது. மேற்கண்டவாறு தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டுக்கான நிகழ்ச்சி ஏற்பாடுகளை இயக்குனர் வ.கவுதமன் செய்திருந்தார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவோர் இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யும் புதிய நடைமுறை அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுபவர்கள் இணையதளம் மூலம் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யும் புதிய நடைமுறையை அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. புதிய நடைமுறை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி ரா.சுதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:- தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் துரித மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்யும் பொருட்டு, தகவல் தொழில்நுட்பம் உதவியுடன், விண்ணப்பதாரர்கள் பயன்பெறும் வகையில் அவ்வப்போது புதிய நடைமுறைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. தற்போதுள்ள நடைமுறையில் சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வுக்கு தரவரிசைப்படி தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் 2 முறை சென்னையில் உள்ள தேர்வாணைய அலுவலகம் வந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் தேர்வர்களுக்கு பண விரயம், கால விரயம் ஏற்படுகிறது. எனவே சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், தங்களது இணையவழி விண்ணப்பத்தில் கூறியுள்ள அனைத்து தகுதிகளுக்கான ஆதாரங்கள் அடங்கிய மூலச்சான்றிதழ் களை (ஒரிஜினல் சான்றிதழ்) ஸ்கேன் செய்து இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யும் முறையை அரசு பணியாளர் தேர்வாணையம் முதல் முறையாக அறிமுகப்படுத்துகிறது. குரூப்-2 தேர்வு இந்த நடைமுறை 23-ந் தேதி முதல் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வுகள் குரூப்-2 (நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகள்) அடங்கிய பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பிலிருந்து தொடங்குகிறது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் அடுத்த மாதம் 4-ந் தேதிக்கு முன்னர் தங்களது மூலச்சான்றிதழ்களை அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் அரசு இ-சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்யவேண்டும். இதற்கென மூலச்சான்றிதழ்களின் ஸ்கேன் படிவத்தின் தரத்தை உறுதி செய்யும் வகையில் இ-சேவை மையங்கள் வழியாக ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு சான்றிதழ் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய ரூ.5 கட்டணமாக இ-சேவை மையங்களில் வசூலிக்கப்படும். ஒரு முறை இந்த புதிய நடைமுறையில் இணையவழி மூலம் பெறப்படும் சான்றிதழ்கள், விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தில் தெரிவித்துள்ள கல்வி தகுதிகளின் அடிப்படையில் சரிபார்க்கப்பட்டு, தகுதியான விண்ணப்பதாரர்கள் மட்டும் தரவரிசைப்படி கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார்கள். இதன் மூலம் தகுதி மற்றும் தரவரிசை அடிப்படையில் கலந்தாய்வுக்கு தேர்ந்தெடுக் கப்படும் விண்ணப்பதாரர்கள் ஒருமுறை தேர்வாணைய அலுவலகத்துக்கு மூலச்சான்றிதழ்களுடன் நேரில் வந்தால் போதும். இ-சேவை மையங்களின் முகவரி, அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. வண்ண படிவம் இணைய வழிமூலம் பதிவேற்றம் செய்யும் வழிமுறைகள்:- * மூலச்சான்றிதழ்களின் தெளிவான வண்ண படிவம் மட்டுமே பதிவேற்றம் செய்ய வேண்டும். * விண்ணப்பதாரர்களின் புகைப்படத்தையும் பதிவேற்றம் செய்யவேண்டும். * குறிப்பிட்ட தேதியிலோ அல்லது அதற்கு முன்னதாகவோ சான்றிதழ்களின் நகலை பதிவேற்றம் செய்யவேண்டும். * விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தில் கூறியுள்ள தகுதிக்கான சான்றிதழ்கள் ஏதேனும் பதிவேற்றம் செய்யப்படாமல் விடுபட்டுபோனால் அவர் பதிவு செய்துள்ள விவரம் கணக்கில் கொள்ளப்படமாட்டாது. எனவே விண்ணப்பம் நிராகரிக்கப்படும் அல்லது அவர் பதிவேற்றம் செய்த சான்றிதழ்களின் தகுதிகள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும். பரிசீலனைக்கு... * விண்ணப்பதாரர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யாவிட்டால் அவரது விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது. * விண்ணப்பதாரர் விண்ணப்பத்தில் பதிவு செய்துள்ள விவரங்களுக்கு மட்டுமே சான்றிதழ்களை பதிவேற்றம் செய்தால் போதும். கூடுதலான பதிவேற்றம் செய்தால் அவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது. * நிர்ணயிக்கப்பட்ட கடைசி நாளுக்கு பிறகு அதற்கான இணையதள பக்கம் செயல்படாது. * அஞ்சல் மற்றும் நேரில் பெறப்படும் சான்றிதழ்கள் பரிசீலிக்கப்படமாட்டாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அரசின் மேல்முறையீட்டு மனு மீது விசாரணை தமிழக கூட்டுறவு சங்க தேர்தலுக்கு தடை நீக்கம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீது விசாரணை நடத்திய சுப்ரீம் கோர்ட்டு, கூட்டுறவு சங்க தேர்தலுக்கு விதிக்கப் பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டது. தமிழ்நாட்டில் உள்ள 18 ஆயிரத்து 435 கூட்டுறவு சங்கங்களுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டது. மதுரை ஐகோர்ட்டு தடை இருகட்ட தேர்தல்கள் ஏற்கனவே முடிவடைந்த நிலையில், தேர்தல் நடைமுறைகளில் பாரபட்சம் காட்டப்படுவதாக தி.மு.க. எம்.எல்.ஏ. சக்கரபாணி தொடர்ந்த வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு, தேர்தல் பணிகளை நிறுத்திவைக்கவும், 3, 4 மற்றும் 5-வது கட்ட தேர்தல்களை நடத்த தடை விதித்தும் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை இந்த மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தி.மு.க. எம்.எல்.ஏ. சக்கரபாணி தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஹர்மீந்தர் சரண் வாதாடுகையில் கூறியதாவது:- முறைகேடுகள் கூட்டுறவு சங்க தேர்தலில் பெருமளவில் முறைகேடுகள் நடைபெற்று உள்ளன. வேண்டு மென்றே பலரிடம் வேட்பு மனுக்களை பெறாமல் நிராகரித்துவிட்டனர். எனவே பலரால் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் விண்ணப்பித்ததில் வெறும் 70 ஆயிரம் மனுக்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டு, அந்த 70 ஆயிரம் பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். எனவே, தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தல் முறையாக நடைபெறாத சூழல் நிலவுகிறது. இவ்வாறு அவர் கூறினார். தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் முகுல் ரோகத்கி வாதாடுகையில், “பெரும்பாலான சங்கங்கள் மீனவர்களுக்கான சங்கங்கள். கூட்டுறவு சங்கங்களில் சுமார் 2 லட்சம் இடங்கள் காலியாக உள்ளன. எனவே உடனடியாக தேர்தல் நடத்த வேண்டியது அவசியமாக இருக்கிறது. ஐகோர்ட்டு விதித்த தடையை நீக்கி தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல்கள் நடைபெற வழிவகுக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார். தடை நீக்கம் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மதுரை ஐகோர்ட்டு விதித்த தடையை நீக்கி கூட்டுறவு சங்க தேர்தல்களை நடத்த உத்தரவிட்டனர். என்றாலும் தேர்தல் முடிவுகளை வெளியிட இடைக் கால தடை விதித்தனர். அத்துடன், தாக்கலான மொத்த வேட்புமனுக்கள், தள்ளுபடி செய்யப்பட்டவை உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய நிலவர அறிக்கையை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்யுமாறு இரு தரப்புக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வருகிற மே 3-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

நூலகங்களுக்கு கொள்முதல் மாதிரி நூல்கள் சமர்ப்பிக்க ஏப்.27 வரை காலஅவகாசம் நூலகத்துறை இயக்குநர் அறிவிப்பு

நூலகங்களுக்கு புத்தகங் கள் வாங்கும் வகையில் பதிப்பாளர்கள் மற்றும் புத் தக விற்பனையாளர்கள் மாதிரி நூல்கள் சமர்ப்பிக்க ஏப்ரல் 27-ம் தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள் ளது. இதுதொடர்பாக பொது நூலக இயக்குநர் (கூடுதல் பொறுப்பு) வி.சி.ராமேஸ்வர முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பொது நூலக இயக்கத்தின்கீழ் செயல்படும் பொது நூலகங்களுக்கு 2016 மற்றும் 2017-ம் ஆண்டு பதிப்பு தமிழ் மற்றும் ஆங்கில நூல்களை பதிப்பாளர்கள் மற்றும் புத்தக விற்பனையாளர்களிடம் இருந்து வாங்குவதற்கு மாதிரி நூல்கள் சமர்ப்பிக்க கடைசி நாள் ஏப்ரல் 19-ம் தேதி என்று முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது பதிப்பகத்தார் மற்றும் புத்தக விற்பனையாளர்களின் வேண்டுகோளை ஏற்று, மாதிரி நூல்களை பொது நூலக இயக்ககத்தில் சமர்ப்பிக்க கடைசி நாள் ஏப்ரல் 27 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஏப்ரல் 25-ம் தேதி குரூப்-2 தேர்வுக்கான 2-வது கட்ட கலந்தாய்வு டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

டிஎன்பிஎஸ்சி செயலாளர் (பொறுப்பு) இரா.சுதன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது: குரூப்-2 பணிகளில் 1,094 காலியிடங்களை நிரப்பும் பொருட்டு முதல் கட்ட கலந்தாய்வு மார்ச் 19 முதல் ஏப்ரல் 3-ம் தேதி வரை நடைபெற்றது. இக்கலந்தாய்வு முடிந்து, நிரப்பப்படாமல் உள்ள 88 காலியிடங்களில் 45 இடங்களை நிரப்பும் வகையில் 2-வது கட்ட கலந்தாய்வு ஏப்ரல் 25-ம் தேதி நடத்தப்பட உள்ளது. ஒரு காலியிடத்துக்கு 5 பேர் என்ற விகிதாச்சார அடிப்படையில் 2-வது கட்ட கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் அடங்கிய பட்டியல், டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. மறுவாய்ப்பு இல்லை கலந்தாய்வு நாள், நேரம் உள்ளிட்ட விவரங்கள் அழைப்புக் கடிதம், குறுஞ்செய்தி, மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பதாரர்களுக்கு தனித்தனியே அனுப்பப்பட்டுள்ளது. அழைப்புக் கடிதத்தை தேர்வாணைய இணையதளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் வருகை தரத் தவறினால், அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது. 2-வது கட்ட கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்பட்டவர்களைத் தவிர ஏற்கெனவே முதல்கட்ட கலந்தாய்வில் கலந்துகொண்டு அடிப்படை சம்பள விகிதம் 9,300/- ல் ஏதேனும் ஒரு பதவியைத் தேர்வு செய்திருந்து தற்போது இடம் பெற்றுள்ள பதவி காலியிடங்களில், ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்க விரும்பும் விண்ணப்பதாரர்களும் கலந்தாய்வில் பங்கேற்கலாம். காலிப்பணியிடங்களின் அடிப்படையில் கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்படுவர். ஒரு காலியிடத்துக்கு 5 பேர் என்ற விகிதாச்சாரத்தில் அழைக்கப்பட்டுள்ளதால், கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ள அனைவரும் தெரிவு பெறும் வாய்ப்பு இல்லை எனவும் விண்ணப்பதாரர்கள் அறிவுறுத் தப்படுகிறார்கள்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, 20 April 2018

தொலைநிலைக் கல்வி: 3 பல்கலைக்கழகங்கள் மட்டுமே நடத்த முடியும்

பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) புதிய விதிகளின்படி, தமிழகத்தில் உள்ள மூன்று பல்கலைக்கழகங்கள் மட்டுமே 2018-ஆம் ஆண்டில் தொலைநிலைக் கல்வியை நடத்த முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. அதாவது, சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் காரைக்குடிஅழகப்பா பல்கலைக்கழகம் ஆகிய மூன்று பல்கலைக்கழகங்கள் மட்டுமே 2018-ஆம் ஆண்டில் தொலைநிலைப் படிப்புகளில் மாணவர் சேர்க்கையை நடத்த முடியும்.இதனால், தமிழகத்தில் உள்ள பிற பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் தொலைநிலைப் படிப்புகளில் சேரும் மாணவர்களின் பட்டம் செல்லாது என யுஜிசியால் அறிவிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. தொலைநிலை படிப்புகளைக் கட்டுப்படுத்தி வரும் யுஜிசி, உயர் கல்வித் தரத்தை மேம்படுத்தும்வகையில் அண்மையில் புதிய வழிகாட்டுதல் ஒன்றை வெளியிட்டது. அதில், தேசிய ஆய்வு மற்றும் அங்கீகார கவுன்சிலின் ('நாக்') அங்கீகாரம் பெற்று குறைந்தபட்சம் 3.26 புள்ளிகளைப் பெற்றிருக்கும் பல்கலைக்கழகங்கள் மட்டுமே தொலைநிலைக் கல்வியை நடத்த முடியும் எனத் தெரிவித்திருந்தது.'நாக்' அங்கீகாரம்: 'நாக்' கவுன்சில் அதிகபட்சமாக 4 புள்ளிகளைக் கொண்ட அளவீடு மூலம் நாடு முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களை பல்வேறு காரணிகளின் கீழ் ஆய்வு செய்து அங்கீகாரம் வழங்கும். இதில் 3.51 முதல் 4 புள்ளிகள் பெறும் கல்வி நிறுவனத்துக்கு ஏ (பிளஸ், பிளஸ்)கிரேடு, 3.26 முதல் 3.50 புள்ளிகள் பெறும் நிறுவனங்களுக்கு ஏ (பிளஸ்) கிரேடு, 3.01 முதல் 3.25 வரை பெறும் கல்வி நிறுவனத்துக்கு ஏ கிரேடு வழங்கும். மேலும் 2.76 முதல் 3 புள்ளிகள் வரை வாங்கும் கல்வி நிறுவனத்துக்கு பி (பிளஸ், பிளஸ்) கிரேடு, 2.51 முதல் 2.75 வரை பெறும் கல்வி நிறுவனத்துக்கு பி (பிளஸ்) கிரேடு, 2.01 முதல் 2.50 புள்ளிகள் வரை பெறும் நிறுவனங்களுக்கு பி கிரேடும், 1.51 முதல் 2 புள்ளிகள் வரை பெறும் கல்வி நிறுவனத்துக்கு சி கிரேடும் வழங்கும்.இதில் 1.50 புள்ளிகளும் அதற்குக் கீழ் பெறும் கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்படாது. இந்த நிலையில், யுஜிசி-யின் புதிய வழிகாட்டுதலின் படி பார்க்கும்போது தமிழகத்தில் உள்ள மூன்று பல்கலைக்கழகங்கள் மட்டுமே 3.26-க்கும் மேற்பட்ட நாக் புள்ளிகளைப் பெற்றுள்ளன. காரைக்குடிஅழகப்பா பல்கலைக்கழகம் 3.64 புள்ளிகளும், அண்ணா பல்கலைக்கழகம் 3.46 புள்ளிகளும், சென்னைப் பல்கலைக்கழகம் 3.32 புள்ளிகளும் பெற்றுள்ளன. மற்ற பல்கலைக்கழகங்கள் அனைத்தும் 3.26 புள்ளிகளுக்குக் குறைவான புள்ளிகளையே பெற்றுள்ளன. 'நாக்' புள்ளிகள் காரணமாக...கோவை பாரதியார் பல்கலைக்கழகம் 3.11 'நாக்' புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் 3.09புள்ளிகளையும், சேலம் பெரியார் பல்கலைக்கழகம் 3.15 புள்ளிகளையும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் 3.08 புள்ளிகளையும் பெற்றுள்ளன. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் குறைவான புள்ளிகளைப் பெற்றுள்ளன.இவற்றில் திருநெல்வேலி மனோண்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம், கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம், தமிழ்நாடு உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம் ஆகியவை மிகக் குறைவாக பி கிரேடு புள்ளிகளையே பெற்றுள்ளன. இந்த பல்கலைக்கழகங்கள் அனைத்தும் 2018-ஆம் ஆண்டில் தொலைநிலைக் கல்வியில் மாணவர் சேர்க்கையை நடத்த இயலாது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து உயர் கல்வித் துறை செயலர் சுனில் பாலிவால் கூறியது: யுஜிசி-யின் இந்தக் கட்டுப்பாடு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.தமிழகம் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தும். யுஜிசி-யின் இந்த புதிய வழிகாட்டுதலால் இந்தியா முழுவதும் 40 கல்வி நிறுவனங்கள் மட்டுமே தொலைநிலைக் கல்வி நடத்தக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. கோரிக்கை: எனவே, தொலைநிலைப் படிப்புகளை வழங்க இப்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள 3.26 நாக் புள்ளிகள் என்பதை, 3 புள்ளிகளாகக் குறைக்க வேண்டும் என யுஜிசியிடம் தமிழக உயர் கல்வித் துறை சார்பிலும், பல்கலைக்கழகங்கள் சார்பிலும் தனித்தனியாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதை யுஜிசி ஏற்றுக் கொள்ளும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

திருச்சி மாணவருக்கு கேரள மாநிலத்தில் நீட் நுழைவுத் தேர்வுக்கு மையம் ஒதுக்கீடு கூடுதல் செலவு, நேர விரயம் ஏற்படும் என பெற்றோர் புகார்

திருச்சி மாணவருக்கு கேரள மாநிலத்தில் நீட் நுழைவுத் தேர்வுக்கு மையம் ஒதுக்கீடு கூடுதல் செலவு, நேர விரயம் ஏற்படும் என பெற்றோர் புகார் | மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான நீட் 2018 நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்த யைச் சேர்ந்த மாணவர் ஒருவருக்கு கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், அவரும் அவரது பெற்றோரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கு நீட் நுழைவுத் தேர்வை சிபிஎஸ்இ நடத்துகிறது. இதற்கென பிளஸ் 2 முடித்துள்ள மாணவர்கள் ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டு நாடு முழுவதும் 108 நகரங்களில் நீட் நுழைவுத் தேர்வு நடைபெற்றது. இந்த ஆண்டு மாணவர்களின் வசதிக்காக நாடு முழுவதும் மொத்தம் 150 நகரங்களில் 1,921 மையங்களில் நுழைவுத் தேர்வு மே 6-ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்வு மையங்கள் அதிகரிக்கப்பட்ட பிறகும், மாணவர்கள் விருப்பமாக தெரிவித்திருந்த 3 மையங்களைத் தாண்டி வேறு நகரங்களில் உள்ள தேர்வு மையங்களை சிபிஎஸ்இ ஒதுக்கீடு செய்துள்ளது. திருச்சி காட்டூர் பகுதியைச் சேர்ந்த மாணவர் ஒருவருக்கு கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளி தேர்வு மையமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த மாணவரின் தந்தையும் மருத்துவருமான ஜி.திருவாசகன் ‘தி இந்து’விடம் கூறியது: தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு அவர்கள் விருப்பமாக தெரிவித்த 3 தேர்வு மையங்களில் ஒன்றை ஒதுக்கீடு செய்வதுதான் முறையானது. என் மகன் திருச்சி, நாமக்கல், சேலம் ஆகிய ஊர்களை விருப்பமாக தேர்வு செய்து விண்ணப்பித்தார். ஆனால், அவருக்கு கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் தேர்வு எழுத சிபிஎஸ்இ ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த தேர்வை எழுத ஏறத்தாழ 400 கிலோ மீட்டர் தொலைவு அவர் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. ரயிலில் சென்றால் உரிய நேரத்தில் தேர்வு மையத்துக்குச் செல்ல முடியுமா என்பது தெரியவில்லை. எனவே, இங்கிருந்து கார் மூலம்தான் செல்ல வேண்டி உள்ளது. இதனால் கூடுதல் செலவு மற்றும் நேர விரயம் உள்ளிட்டவை ஏற்படுகின்றன. சில மாணவர்களுக்கு வட மாநிலங்களில் உள்ள தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார். இதுகுறித்து கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு ‘தி இந்து’விடம் கூறியது: சொந்த மாவட்டத்தில் இல்லாமல், வெளி மாவட்டங்களுக்குச் செல்வதற்கே ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு எவ்வளவு பெரிய சிரமம். அதிலும் காலை 7.30 மணிக்கே தேர்வு மையத்துக்கு வர வேண்டும் என்றால் முதல் நாளே அந்த ஊருக்குச் சென்று லாட்ஜில் தங்க வேண்டும். மாணவர் மட்டும் தனியாக செல்ல முடியாது, உடன் பெற்றோரும் செல்ல வேண்டும். இதற்கான செலவுகளை எல்லாம் யார் கொடுப்பது என்றார். இதுபோன்ற நிலையை தடுக்க வரும் ஆண்டுகளில் கூடுதலாக தேர்வு மையங்களை உருவாக்குவதோடு, மாணவர்களுக்கு மனஉளைச்சல் ஏற்படாதவாறு குறைந்த தூரத்திலேயே தேர்வு மையங்களை அமைக்க சிபிஎஸ்இ நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பள்ளிகளுக்கு நாளை முதல் கோடை விடுமுறை ஆரம்பம் எஸ்எஸ்எல்சி தேர்வு இன்று முடிவடைகிறது

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பொதுத்தேர்வுகளும் வருடாந்திர தேர்வுகளும் முடிந்து ஏப்ரல், மே மாதத்தில் கோடை விடுமுறை விடப்படுவது வழக்கம். நடப்பு கல்வி ஆண்டில் (2017-18) பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 1-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ம் தேதி முடிவடைந்தது. அதேபோல, இந்த ஆண்டு முதல்முறையாக பொதுத்தேர்வு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் மார்ச் 7-ம் தேதி தொடங்கி கடந்த 16-ம் தேதி முடிவடைந்தன. எஸ்எஸ்எல்சி தேர்வு இன்றுடன் (வெள்ளிக்கிழமை) முடிகிறது. மற்ற அனைத்து வகுப்புகளுக்கும் வருடாந்திர தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுவிட்டன. இந்நிலையில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, அனைத்து வகை பள்ளிகளுக்கும் நாளை (21-ம் தேதி) முதல் கோடை விடுமுறை விடப்படுகிறது. ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக் கப்படும். இது தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள், மாவட்டக் கல்வி அதிகாரிகள், மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகள், மாவட்ட மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர்கள் ஆகியோருக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறி யிருப்பதாவது: அரசு, அரசு உதவி பெறும் தொடக்க, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள், தனியார் பள்ளிகள், மெட்ரிக்குலேஷன் பள்ளிகள், அனைத்து வகையான இதர வாரிய பள்ளிகளில் (சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ போன்றவை) 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளும், பிற வகுப்புகளுக்கான வருடாந்திர தேர்வுகளும் முடிவடைந்து ஏப்ரல் 21-ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்படும் என்றும், விடுமுறைக்குப் பிறகு ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வி அமைச்சர் முன்னதாக அறிவித்துள்ளார். எனவே, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் இதை அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களின் கவனத்துக்கு கொண்டுசென்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எஸ்எஸ்எல்சி தேர்வு நிறைவு எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு மார்ச் 16-ம் தேதி தொடங்கியது. தமிழகம், புதுச்சேரியில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தேர்வில் கலந்துகொண்டுள்ளனர். இந்தத் தேர்வு இன்று முடிவடைகிறது. இதைத்தொடர்ந்து, உடனடியாக விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கும். அரசு தேர்வுத் துறை ஏற்கெனவே அறிவித்தபடி, தேர்வு முடிவுகள் மே 23-ம் தேதி வெளி யிடப்படும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

சி.பி.எஸ்.இ. ஆங்கில வினாத்தாளில் தவறு: 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் 2

சி.பி.எஸ்.இ. ஆங்கில வினாத்தாளில் தவறு: 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் 2 | மத்திய கல்வி வாரியத்தின் 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகள் கடந்த மாதம் 5-ந் தேதி தொடங்கி நடந்துவருகிறது. இதில் கடந்த மாதம் 12-ந் தேதி நடைபெற்ற 10-ம் வகுப்பு ஆங்கில தேர்வு வினாத்தாளில் விரிவாக எழுதும் பிரிவில் அச்சுப்பிழை இருந்தது. இதுகுறித்து ஆசிரியர்களும், மாணவர்களும் மத்திய கல்வி வாரியத்துக்கு புகார் கொடுத்தனர். வினாத்தாள் அச்சுப்பிழை காரணமாக மாணவர்கள் யாரும் பாதிக்கப்படக்கூடாது என்ற கல்வி வாரியத்தின் கொள்கைப்படி அந்த தேர்வில் கருணை மதிப்பெண்ணாக 2 வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆங்கில தேர்வில் குறிப்பிட்ட அந்த கேள்விக்கு பதில் அளித்துள்ள (சரியாக இருந்தாலும் அல்லது தவறாக இருந்தாலும்) அனைத்து மாணவர்களுக்கும் 2 மதிப்பெண் வழங்கப்படுகிறது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் வழங்கும் அனைத்து படிப்புகளுக்கும் 2020-ம் ஆண்டு வரை யு.ஜி.சி. அங்கீகாரம் பதிவாளர் சுப்பிரமணியம் தகவல்

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் வழங்கும் அனைத்து படிப்புகளுக்கும் 2020-ம் ஆண்டு வரை யு.ஜி.சி. அங்கீகாரம் பதிவாளர் சுப்பிரமணியம் தகவல் | தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் வழங்கும் அனைத்து படிப்புகளுக்கும் 2020-ம் ஆண்டு வரை பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) அங்கீகாரம் உள்ளது என்று பதிவாளர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கே.எம்.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- பல்கலைக்கழக மானியக்குழு இந்திய அளவில் பல்கலைக்கழகங்கள் மற்றும் திறந்தநிலை பல்கலைக்கழகங்கள் தொலைநிலைக்கல்வி முறையில் படிப்புகளை வழங்கி வருகின்றன. பல்கலைக்கழகங்கள் தொலைநிலைக்கல்வி முறையில் படிப்புகளை வழங்க வேண்டுமெனில், தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலின்(என்.ஏ.ஏ.சி.) தரமதிப்பீடு பெற்றிருக்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) அறிவித்துள்ளது. திறந்தநிலை பல்கலைக்கழங்கள் தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலின் தரமதிப்பீட்டினை பெறுவதற்கான விதிமுறைகளை உருவாக்கும் செயல்பாடுகள் தற்போது தான் தொடங்கி உள்ளன. அங்கீகாரம் அளித்துள்ளது எனவே தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலின் தரமதிப்பீட்டினை பெற்றுள்ள பல்கலைக்கழகங்கள் மட்டுமே தொலைநிலைக்கல்வி முறையில் படிப்புகளை வழங்க வேண்டும் என்ற யு.ஜி.சி.யின் அறிவிப்பு தற்போதைய நிலையில் இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு பொருந்தாது. குறிப்பாக தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்துக்கு பொருந்தாது. ஏனெனில் தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலின் தரமதிப்பீட்டினை பெறாமல் 2020-ம் ஆண்டு வரை தொலைநிலை மற்றும் திறந்தநிலை கல்வி முறையில் படிப்புகளை வழங்குவதற்கு தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்திற்கு பல்கலைக்கழக மானியக்குழு அங்கீகாரம் அளித்துள்ளது. ஆய்வு படிப்புகள் இதன்படி, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் தொலைநிலை மற்றும் திறந்தநிலை கல்வி முறையில் வழங்கும் சான்றிதழ், பட்டயம், பட்டம், முதுநிலை பட்டம் ஆகிய படிப்புகள் பல்கலைக்கழக மானியக்குழுவின் அங்கீகாரம் பெற்றவை ஆகும். மேலும் நேரடி கல்வி முறையில் முழுநேரம் மற்றும் பகுதிநேர முறையில் ஆய்வியல் நிறைஞர்(எம்.பில்), முனைவர் (பி.எச்.டி.) ஆகிய ஆய்வு படிப்புகளை வழங்குவதற்கும் பல்கலைக்கழக மானியக்குழு அங்கீகாரம் அளித்துள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஓய்வூதியம், பணிக்கொடை உயர்வு எதிரொலி: ஓய்வூதிய விதிகளில் மாற்றம் அரசிதழ் வெளியீடு

ஓய்வூதியம், பணிக்கொடை உயர்வு எதிரொலி: ஓய்வூதிய விதிகளில் மாற்றம் அரசிதழ் வெளியீடு | மத்திய 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளுக்குப் பிறகு, தமிழக அரசின் ஓய்வூதியதாரருக்கு ஓய்வூதிய உயர்வு அமலுக்கு வந்தது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு ஓய்வூதிய விதிகளில் சில திருத்தங்களை அரசு கொண்டு வந்துள்ளது. இதுதொடர்பாக நிதித்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் கே.சண்முகம் வெளியிட்ட அரசிதழில் கூறப்பட்டு இருப்பதாவது:- 80 வயதுக்கு மேற்பட்டு 84 வயதுக்கு உட்பட்ட ஓய்வூதியர்களின் அடிப்படை ஓய்வூதியத்தில் 20 சதவீதம், 85-89 வயதுடைய ஓய்வூதியர்களின் அடிப்படை ஓய்வூதியத்தில் 30 சதவீதம், 90-94 வயதுடைய ஓய்வூதியர்களின் அடிப்படை ஓய்வூதியத்தில் 40 சதவீதம், 95-99 வயதுடைய ஓய்வூதியர்களின் அடிப்படை ஓய்வூதியத்தில் 50 சதவீதம், 100 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியர்களுக்கு 100 சதவீத ஓய்வூதிய உயர்வு அளிக்கப்படும் வகையில் விதிகளில் திருத்தம் செய்யப்படுகிறது. குடும்ப ஓய்வூதியமும் குடும்ப அடிப்படை ஓய்வூதியத்தில் இருந்து இதே அளவில் உயர்த்தப்படும். பணியில் இருக்கும் அரசு ஊழியர் மரணமடையும்பட்சத்தில், அவரது இறப்பு ஒரு ஆண்டுக்குள் நிகழ்ந்திருந்தால், அவர் வாங்கிய மாதச் சம்பளத்துக்கு இரண்டு மடங்கை அவரது இறப்பு பணிக்கொடையாக வழங்க வேண்டும். இறப்பு நிகழ்ந்து 1-5 ஆண்டுக்குள் இருந்தால் சம்பளத்தில் 6 மடங்கும், 5-11 ஆண்டுக்குள் இருந்தால் சம்பளத்தில் 12 மடங்கும், 11-20 ஆண்டுக்குள் இருந்தால் சம்பளத்தில் 15 மடங்கும், 20 ஆண்டுக்கு மேல் இருந்தால் அதிகபட்சம் 33 மடங்கும் இறப்பு பணிக்கொடை வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான ‘நீட்’ தேர்வு எழுதுவோருக்கு உடை கட்டுப்பாடுகள் சி.பி.எஸ்.இ. அறிவிப்பு

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான ‘நீட்’ தேர்வு எழுதுவோருக்கு உடை கட்டுப்பாடுகள் சி.பி.எஸ்.இ. அறிவிப்பு | அடுத்த மாதம் (மே) 6-ந் தேதி நடைபெற உள்ள ‘நீட்’ தேர்வு எழுதுபவர்களுக்கான உடைக்கட்டுப்பாடுகளை சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது. ‘நீட்’ நுழைவுத்தேர்வு இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் 2018-19-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வை (நீட்) சி.பி.எஸ்.இ. (மத்திய கல்வி வாரியம்) நடத்த இருக்கிறது. அடுத்த மாதம்(மே) 6-ந் தேதி நடைபெற உள்ள ‘நீட்’ தேர்வுக்கான நுழைவுச்சீட்டு(ஹால் டிக்கெட்) நேற்று முன்தினம் வெளியானது. கடந்த ஆண்டு தேர்வுக்கு முந்தைய நாட்களில் அதற்கான விதிமுறைகள் அறிவிக்கப்பட்டன. இதை சில மாணவ-மாணவிகள் கவனிக்காததால், தேர்வுக்கு வந்த கடைசி நேரத்தில் உடைக்கட்டுப்பாடு, அணிகலன்கள் அணிய தடை என பல்வேறு சம்பவங்கள் தேர்வு மையத்தின் முன்பு அரங்கேறின. இதனால் சர்ச்சைகள் எழுந்தன. உடைக்கட்டுப்பாடுகள் என்ன? இந்த நிலையில் இந்த ஆண்டு ‘நீட்’ தேர்வுக்கான நுழைவுச்சீட்டிலேயே உடைக்கட்டுப்பாடு, தேர்வு விதிமுறைகள் ஆகியவை தொடர்பான தகவல்களை குறிப்பிட்ட இணையதளத்தில் சென்று பார்த்து தெரிந்துகொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதன்படி, உடைக்கட்டுப்பாடுகள் என்னென்ன? என்பது குறித்து அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- வெளிர் நிறத்திலான அரைக்கை ஆடைகள்(ஹாப் ஸ்லீவ்ஸ்) அணிந்து வரவேண்டும். அதில் பெரிய பொத்தான், பேட்ஜ், பூ போன்றவை இடம்பெறக்கூடாது. சல்வார் மற்றும் பேண்ட் அணிந்துவரவேண்டும். குறைந்த உயரத்திலான செருப்புகள் மட்டுமே அணியவேண்டும். மூடப்பட்ட நிலையில் இருக்கும் காலணிகளுக்கு அனுமதி கிடையாது. கைக்கெடிகாரம் அனுமதி இல்லை மேலும், தொலைதொடர்பு சாதனங்களான செல்போன், புளூடூத், ஹெட்செட், மைக்ரோபோன், பேஜர், ஹெல்த் பேண்ட் அணிந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வெற்று அல்லது எழுதிய காகிதங்கள், ஜாமெட்ரி மற்றும் பென்சில் பாக்ஸ், பிளாஸ்டிக் பை, கால்குலேட்டர், பேனா, அளவுகோல்(ஸ்கேல்), பரீட்சை அட்டை, பென் டிரைவ்ஸ், ரப்பர், எலக்ட்ரானிக் பேனா, ஸ்கேனர் ஆகியவை கொண்டு செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. அதேபோல், மணிபர்ஸ், கைப்பை, பெல்ட், தொப்பி, கைக்கெடிகாரம், கேமரா, உலோக பொருட்கள், மூடப்பட்ட நிலையில் இருக்கும் சாப்பிடும் உணவு பொருட்கள், வாட்டர் பாட்டில் ஆகியவற்றையும் எடுத்து செல்ல அனுமதி இல்லை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிருப்தி அதேபோல், ‘நீட்’ தேர்வு எழுத இருக்கும் மாணவர்களுக்கான தேர்வு மையமும் நுழைவுச்சீட்டில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. மாணவ-மாணவிகள் விண்ணப்பித்த போது 3 விருப்பங்களை கேட்டு இருந்தனர். அதன்படி, தமிழக மாணவர்கள் தமிழ்நாட்டிற்குள் 3 இடங்களில் தேர்வு மையங்களை கேட்டிருந்தாலும், அவர்களுக்கு தமிழ்நாட்டை தவிர வெளி மாநிலங்களிலும் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இதனால் மாணவ-மாணவிகளும், பெற்றோரும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். தெரியாத மாநிலத்தில் முகவரியை தேடி கண்டுபிடித்து தேர்வு எழுத வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றனர். இதுதொடர்பாக சி.பி.எஸ்.இ. தன்னுடைய இணையதளத்தில் தேர்வு மையத்தை எக்காரணத்தை கொண்டும் மாற்ற இயலாது என்றும், தேர்வு மையத்தை தேர்வு செய்வது கணினி முறை என்றும் தெரிவித்துள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 19 April 2018

எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளுக்கான ‘டான்செட்’ நுழைவுத்தேர்வு தேதி மாற்றம் விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு

எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளுக்கான ‘டான்செட்’ நுழைவுத்தேர்வு தேதி மாற்றம் விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு | தமிழ்நாடு முழுவதும் எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான், எம்.பி.ஏ., எம்.சி.ஏ. ஆகிய படிப்புகளில் சேர தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வை (டான்செட்) அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது. இந்த நுழைவுத்தேர்வுக்கு கடந்த 2-ந் தேதி முதல் www.an-n-au-n-iv.edu என்ற இணையதளத்தில் ஏராளமானோர் விண்ணப்பித்து வருகிறார்கள். நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் வருகிற 23-ந் தேதி என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில், விண்ணப்பிப்பதற்கான தேதி வருகிற 25-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது நுழைவுத்தேர்வுக்கான தேதியும் மாற்றப்பட்டுள்ளது. மாற்றப்பட்ட தேதிகள் விவரம் வருமாறு:- எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் ஆகிய படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு அடுத்த மாதம் (மே) 19-ந் தேதி காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரையும், எம்.பி.ஏ. நுழைவுத்தேர்வு மே 19-ந் தேதி பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையும், எம்.சி.ஏ. நுழைவுத்தேர்வு மே 20-ந் தேதி காலை 10 மணிமுதல் பகல் 12 மணி வரையும் நடைபெறும். இந்த தகவலை டான்செட் செயலாளர் பேராசிரியர் ஜி.நாகராஜன் தெரிவித்தார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பள்ளிகளை மூடுவதோ, திறப்பதோ அரசு தான் முடிவு செய்யும் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

பள்ளிகளை மூடுவதோ, திறப்பதோ அரசு தான் முடிவு செய்யும் அமைச்சர் செங்கோட்டையன் தகவல் | பள்ளிகளை மூடுவதோ, திறப்பதோ அரசு தான் முடிவு செய்யும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். சுற்றறிக்கை தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குனர் இளங்கோவன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருக்கிறார். அதில் அரசு, நிதி உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 1.8.2017 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் முதுகலை, பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்வது தொடர்பான தகவல்கள் இடம்பெற்று இருந்தன. மேலும், சுற்றறிக்கையில் மேல்நிலை பிரிவுகளை பொறுத்தவரை பள்ளி அமைந்துள்ள பகுதி நகராட்சி, மாநகராட்சி பகுதியாக இருப்பின் குறைந்தபட்சம் 30 மாணவர்களும், ஏனைய ஊரக பகுதியாக இருப்பின் குறைந்தபட்சம் மாணவர் எண்ணிக்கை 15 ஆக இருத்தல் வேண்டும். குறைந்தபட்ச மாணவர்கள் இல்லாமல் நடைபெற்று வரும் பாடப்பிரிவுகளை நீக்கம் செய்துவிட்டு அதில் பயிலும் மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளுக்கு மாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசு தான் முடிவு செய்யும் இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் தொடர்பு கொண்டு பேசும்போது, அவர் கூறியதாவது:- அரசு ஆணை 2010-ன் படி ஒவ்வொரு ஆண்டும் தேர்வு முடிந்த பிறகு, மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்துவதற்காக சில தகவல்கள் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும். அந்த அடிப்படையில் தான் இது வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் பள்ளிகள் மூடுவது தொடர்பாக எந்தவித கருத்தும் பதிவிடப்படவில்லை. ஒரு பள்ளியை மூடுவது என்பதை அரசு ஆராய்ந்து, ஆலோசனை செய்து அதன் பின்னர் தான் முடிவு செய்யும். எனவே பள்ளிகளை திறப்பதோ, மூடுவதோ என்பதை அரசு தான் முடிவு செய்யும். பள்ளிக்கல்வி அலுவலர்கள் அதை முடிவு செய்ய முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

போராட்டத்தில் ஈடுபட்டால் ஆசிரியர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை ஐகோர்ட்டில், தமிழக அரசு உறுதி

விடைத்தாள் திருத்தும் பணியின்போது, ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐகோர்ட்டில் தமிழக அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. சென்னை வடபழனியை சேர்ந்த மாணவி நர்மதா. இவர் சார்பில் அவரது தந்தை சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:- தேர்வு முடிவு பிளஸ்-2 பொதுத்தேர்வை எழுதியுள்ளேன். தமிழக பள்ளிக்கல்வித்துறையின் அட்டவணையின்படி, பிளஸ்-2 பொதுத்தேர்வு மார்ச் 1-ந் தேதி முதல் ஏப்ரல் 6-ந் தேதி வரை நடந்தது. ஏப்ரல் 11-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை விடைத்தாள்கள் திருத்தப்பட்டு, தேர்வு முடிவுகள் மே 16-ந் தேதி அறிவிக்கப்பட வேண்டும். இதேபோல 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 30-ந் தேதியும், 10-ம் வகுப்புத் தேர்வு மே 23-ந் தேதியும் அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் போராட்டம் இந்த நிலையில், விடைத்தாள் திருத்த வேண்டிய ஆசிரியர்கள், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக கூறப்படுகிறது. இதனால், விடைத்தாள் திருத்தும் பணி தொய்வு ஏற்பட்டு, குறிப்பிட்ட நாளில் தேர்வு முடிவுகள் வெளியிடுவது தள்ளி போகலாம் என்று மாணவர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஆசிரியர்களின் போராட்டத்துக்கு தடைவிதிக்க வேண்டும். அந்த போராட்டம் நடைபெறாமல் பார்த்துக்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார். சட்டப்படி நடவடிக்கை இந்த வழக்கு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆஜரான சிறப்பு அரசு பிளடர் சி.முனுசாமி, ‘போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கையை அரசு எடுக்கும். அட்டவணையின் அடிப்படையில் உரிய தேதியில், பிளஸ்-2, 11-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளின் முடிவுகள் அறிவிக்கப்படும்’ என்று உறுதி அளித்து வாதிட்டார். இதை பதிவு செய்துகொண்ட நீதிபதி எஸ்.வைத்தியநாதன், விசாரணையை வருகிற 24-ந் தேதிக்கு தள்ளிவைத்தார். பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கும், ஆசிரியர்கள் சங்கங்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

குறைந்தபட்ச மாணவர்களின்றி நடக்கும் பாடப்பிரிவுகளை நீக்கம் செய்யலாம்: பள்ளிக்கல்வித்துறை

குறைந்தபட்ச மாணவர்களின்றி நடக்கும் பாடப்பிரிவுகளை நீக்கம் செய்யலாம்: பள்ளிக்கல்வித்துறை | குறைந்தபட்ச மாணவர்களின்றி நடக்கும் பாடப்பிரிவுகளை நீக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளில் மாணவர்களின் எணிக்கையின் அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஒரு ஆசிரியருக்கு வாரத்திற்கு குறைந்தபட்சம் 28 பாடவேலைகள் உள்ளதா என்பதை கணக்கில் கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, 18 April 2018

பொதுமாறுதல் கலந்தாய்விற்கான அரசாணை ஓரிரு தினங்களில் வெளியீடு.

2018-19க்கான பொதுமாறுதல் கலந்தாய்விற்கான அரசாணை இன்னும் ஓரிரு தினங்களில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து ஆசிரியர்கள் மாறுதல் கோரும் விண்ணப்பங்களை அவர்களுக்குரிய‌ அரசு அலுவலகங்களில் வழங்கலாம் எனவும் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்- உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்- உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் திட்டமிட்டபடி +2 தேர்வு முடிவுகள் மே 16-ஆம் தேதி வெளியாகும் என்று தமிழக அரசு உறுதிப்படத் தெரிவித்துள்ளது. மேலும் போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடைத்தாள் திருத்தும் பணியின் போது, ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட தடை கோரிய வழக்கில் ஆசிரியர் சங்கம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

விஐபி வரவேற்பில் மாணவியர் பங்கேற்க தடை

அருப்புக்கோட்டையில் உள்ள, தேவாங்கர் கலை கல்லுாரி கணித பேராசிரியை, நிர்மலாதேவி, தன்னிடம் படிக்கும், பி.எஸ்சி., மாணவியரை, தவறான வழிக்கு துாண்டிய விவகாரம், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வெளியான, 'ஆடியோ' பதிவில், கல்லுாரி நிகழ்ச்சிகளுக்கு, வி.ஐ.பி.,க்கள் என்ற, முக்கிய பிரமுகர்கள் வருகை தரும்போது, சில விஷயங்கள் தேவைப்படுவதாக, மாணவியரிடம் நிர்மலா தேவி கூறியுள்ளார். இதனால், பெற்றோர்களும், கல்வியாளர்களும், அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து, கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில் நடக்கும் நிகழ்ச்சிகளில், உபசரிப்பு, வரவேற்பு, விருந்து போன்றவற்றில், மாணவியர் மற்றும் பேராசிரியைகளை பங்கேற்க அனுமதிக்க வேண்டாம் என, கல்லுாரி முதல்வர்களுக்கு, உயர் கல்வித் துறை சார்பில், சுற்றறிக்கை அனுப்ப உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

வரும் கல்வியாண்டுக்கான புத்தகங்களை இணையதளம் மூலம் பெறலாம்

வரும் கல்வியாண்டுக்கான (2018-19) பாடநூல்களை இணையதளம் மூலம் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம் என தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறியது:- தமிழகத்தில் வரும் கல்வியாண்டுக்கான பாடநூல்களை பள்ளிகள் மொத்தமாக, தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழகத்திடமிருந்து கொள்முதல் செய்து விநியோகிக்கின்றன. நிகழாண்டு புதிய பாடத்திட்டத்தின்படி அச்சிடப்படவுள்ள 1,6,9,11 ஆகிய வகுப்புகளுக்குத் தேவையான நூல்கள் ஜூன் மாதத்தில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவை தவிர 2,3,4,5,7,8,10, பிளஸ் 2 ஆகிய வகுப்புகளுக்கான பாடநூல்கள், சென்னை நுங்கம்பாக்கம் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோன்று, சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மையத்திலும் பாடநூல் விற்பனை தொடங்கியுள்ளது. மேலும் வெளி மாவட்டங்களில் உள்ள மாணவர்கள், பெற்றோர் வசதிக்காக www.textbookcorp.in என்ற இணையதளம் மூலம் பதிவு செய்து பணம் செலுத்தி பாட புத்தகங்களை பெற்றுக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. இணையதளத்தில் பதிவு செய்த அடுத்த மூன்று நாள்களுக்குள் பாடநூல்கள் நேரடியாக வீடுகளுக்கே கூரியர் சேவை மூலம் அனுப்பி வைக்கப்படும். பாடநூல்கள் விலை விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் நிறுவனத்தில் ஏற்கெனவே பதிவு செய்த பள்ளிகள், பாடநூல்களை மொத்தமாகப் பெறுவதற்கு இணையதளத்தைத் தொடர்பு கொள்ளலாம் என அவர்கள் தெரிவித்தனர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

‘நீட்’ தேர்வு - மே 6-ம் தேதிநாடு முழுவதும் 150 நகரங்களில் நடக்கிறது

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு வரும் மே மாதம் 6-ம் தேதி நடக்கும் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் (அனுமதி சீட்டு)இணையதளத்தில் சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. நாடுமுழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் எம்பிபிஎஸ், பிடிஎஸ்படிப்புகள் மற்றும் ஆயுர்வேதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், சித்தா, ஹோமியோபதி (ஆயுஷ் - AYUSH) படிப்புகளுக்கு, வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க செல்பவருக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET - நீட்) கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 2018-19-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு வரும் மே மாதம் 6-ம் தேதி நடைபெறுகிறது. மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்தும் நீட் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது கடந்த பிப்ரவரி மாதம் 8-ம் தேதி தொடங்கி, மார்ச் 12-ம் தேதி முடிவடைந்தது. மாநிலப் பாடத்திட்டங்கள், சிபிஎஸ்இ உள்ளிட்ட மத்தியபாடத்திட்டங்கள், திறந்தநிலை கல்வி நிறுவனங்களில் பிளஸ் 2 படிப்பவர்கள் என சுமார் 15 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். நீட் தேர்வு எழுதுவதற்கான ஹால் டிக்கெட்டை சிபிஎஸ்இ நேற்று www.cbseneet.nic.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.மாணவர்கள் தங்களுடைய பதிவு எண், பிறந்த தேதிஉள்ளிட்ட விவரங்களை அளித்து ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், காஞ்சிபுரம், மதுரை, நாமக்கல், சேலம், திருவள்ளூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் உட்பட நாடுமுழுவதும் 150 நகரங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் நீட் தேர்வு நடக்கிறது. தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒடிசா, அசாம், வங்காளம், உருது ஆகிய 11 மொழிகளில் நீட் தேர்வு நடைபெறுகிறது. ஜூன் 5-ம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியிட திட்டமிட்டிருப்பதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை - தொடக்கக் கல்வி இயக்குநர்

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ஏப்ரல் 21 முதல் பள்ளிகளுக்கு கோடைவிடுமுறை விடப்படுகிறது என தெரிவித்திருந்தார். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அறிவிப்பால் ஏப்ரல் 19ஆம் தேதியுடன் பள்ளி வேலைநாள்கள் முடிவதாக இருந்த சூழ்நிலை ஏப்ரல் 20ஆம் தேதியும் பள்ளி வேலைநாள் என்ற நிலை உருவானது. சென்ற ஆண்டு மாறுதல் ஆணை பெற்று விடுவிக்கப்படாமல் (ஈராசிரியர் பள்ளிகளில்) உள்ள ஆசிரியர்களை தற்போது பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் ஆணைக்கிணங்க ஏப்ரல் 18 ஆம் தேதி விடுவித்து ஏப்ரல் 19 ஆம் தேதிக்குள் பணியில் சேர்ந்துகொள்ள குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆணை அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் இ.மெயில் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. பள்ளி கோடை விடுமுறை மாற்றம் தொடர்பாக எழுத்து பூர்வமான அறிவிப்புகள் எதுவும் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்படாததால் ஏற்கனவே உள்ள பள்ளி வேலைநாள் கால அட்டவணைப்படி ஏப்ரல் 19 ஆம் தேதிதான் இவ்வாண்டின் கடைசி வேலைநாளாகும். ஏப்ரல் 20 ஆம் தேதி கோடைவிடுமுறை தொடங்குகிறது. தொடக்கக் கல்வித் துறை பள்ளிகள் 210 பள்ளி வேலைநாள்கள் முடித்திருக்க வேண்டும். பள்ளி வேலைநாள்கள் 210 க்கு குறைவாக உள்ளது எனில் ஏப்ரல் 20 பள்ளி வேலைநாளாக செயல்படலாம். இதில் வேறு எந்தவித குழப்பமும் தேவை இல்லை
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE