Friday, 23 February 2018

பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான தேர்வை ரத்து செய்தது செல்லாது மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பு


பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான தேர்வை ரத்து செய்தது செல்லாது மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பு | முறைகேடுகள் நடந்ததாக கூறி, பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான தேர்வை ரத்து செய்தது செல்லாது மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியது. சிவகங்கையைச் சேர்ந்த இளமதி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- தேர்வில் முறைகேடு தமிழகத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளின் விரிவுரையாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான தேர்வு செப்டம்பர் 16-ந்தேதி நடந்தது. அந்த தேர்வை நானும் எழுதினேன். பின்னர் நவம்பர் மாதம் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடந்தன. இந்தநிலையில் விடைத்தாள்களில் முறைகேடு நடந்ததாகக் கூறி, அந்த தேர்வை ரத்து செய்வதாகவும் ஆகஸ்டு முதல் வாரத்தில் அந்த பணிகளுக்கான மறுதேர்வு அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1 லட்சத்து 33 ஆயிரத்து 567 பேர் அந்த தேர்வை எழுதியுள்ளனர். ஆனால் 200 பேரின் விடைத்தாள்களில் மட்டும் முறைகேடுகள் நடந்துள்ளன. தண்டிப்பது ஏற்கத்தக்கதல்ல அதுவும் தேர்வு எழுதியதில் எந்தவித முறைகேடும் நடக்கவில்லை என்பதும் உறுதி ஆகியுள்ளது. தவறு செய்த 200 பேருக்காக தேர்வு எழுதிய அனைவரையும் தண்டிப்பது ஏற்கத்தக்கதல்ல. எனவே பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் உள்ளிட்ட பணிகளுக்காக கடந்த செப்டம்பர் 16-ந்தேதி நடந்த தேர்வை ரத்து செய்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். மறுதேர்வுக்கான அறிவிப்பை வெளியிடவும், அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்கவும் தடை விதித்து உத்தரவிட வேண்டும். தேர்வு எழுதிய எனக்கு பணி வழங்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது. அரசு பதில் இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக உயர்கல்வித்துறை செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரியத்துறைத்தலைவர், ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர்-செயலாளர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'விரிவுரையாளர் தேர்வில் முறைகேடுகள் நடந்தது கண்டறியப்பட்டதன் காரணமாக தான் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. அடுத்த தேர்வை நடத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்' என்று கூறப்பட்டு இருந்தது. ரத்து செய்தது செல்லாது இதை நீதிபதி ஏற்கவில்லை. பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வை ரத்து செய்தது செல்லாது என்று நீதிபதி தீர்ப்பு அளித்தார். அவர் தனது தீர்ப்பில் கூறி இருப்பதாவது:- 'தற்போது மேற்கண்ட தேர்வில் முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளது வினாத்தாள்களிலோ, விடைத்தாள்களிலோ இல்லை. மதிப்பீடு செய்வதில் தான் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. எனவே தவறு செய்தவர்களை எளிதில் கண்டுபிடிக்கலாம். எனவே மேற்கண்ட தேர்வை தமிழக அரசு ரத்து செய்து வெளியிட்ட அரசாணை ரத்து செய்யப்படுகிறது. முறைகேடுகளில் ஈடுபட்டவர்களை தனியாக கண்டறிவது, விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்வது, சான்றிதழ் சரிபார்ப்பது உள்ளிட்ட நடைமுறைகள் குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவெடுக்க வேண்டும்' இவ்வாறு நீதிபதி தனது தீர்ப்பில் கூறி உள்ளார். SITE GUIDE

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வுக்கு கடும் கட்டுப்பாடுகள் தேர்வுத்துறை இயக்குனர் அறிவிப்பு


எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வுக்கு கடும் கட்டுப்பாடுகள் தேர்வுத்துறை இயக்குனர் அறிவிப்பு | எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வில் மாணவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதாக அரசு தேர்வுத்துறை இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்தார். பிளஸ்-2 தேர்வு அடுத்த மாதம் 1-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ந் தேதி முடிவடைகிறது. இந்த தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 6 ஆயிரத்து 903 பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 66 ஆயிரத்து 934 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். இவர்களில் 4 லட்சத்து 3 ஆயிரத்து 176 பேர் மாணவர்கள். 4 லட்சத்து 63 ஆயிரத்து 758 பேர் மாணவிகள். மேலும் தனித்தேர்வர்கள் 40 ஆயிரத்து 682 பேர் எழுதுகின்றனர். இவர்களில் திருநங்கை 2 பேர். பிளஸ்-2 தேர்வை சுயநிதி பள்ளிகளில் இருந்து 2 லட்சத்து 12 ஆயிரத்து 439 பேர் எழுத உள்ளனர். இந்த ஆண்டு முதன் முறையாக பிளஸ்-1 தேர்வு அரசு பொதுத்தேர்வாக நடத்தப்படுகிறது. இந்த தேர்வு அடுத்த மாதம் 7-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 16-ந் தேதி முடிவடைகிறது. தேர்வை 8 லட்சத்து 61 ஆயிரத்து 913 பேர் எழுதுகிறார்கள். 1,759 பேர் தனித்தேர்வர்கள். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 9 லட்சத்து 64 ஆயிரத்து 441 பேர் எழுதுகின்றனர். அவர்களில் 4 லட்சத்து 83 ஆயிரத்து 80 பேர் மாணவர்கள். 4 லட்சத்து 81 ஆயிரத்து 361 பேர் மாணவிகள். தேர்வு குறித்து தேர்வுத்துறை இயக்குனர் தண்.வசுந்தராதேவி கூறியதாவது:- தேர்வில் மாணவர்கள் காப்பி அடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் அடுத்து வரும் 6 தேர்வுகளை எழுத முடியாது. ஆள் மாறாட்டம் செய்தால் போலீசில் அவர்கள் ஒப்படைக்கப்படுவார்கள். தேர்வுக்கூடத்துக்கு ஷூ, சாக்ஸ், காலணி, பெல்ட் அணிந்து வரக்கூடாது. செல்போன் உள்ளிட்ட மின்சாதனங்கள் கொண்டுவரக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.  SITE GUIDE
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 22 February 2018

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வருடாந்திர தேர்வு கால அட்டவணை விரைவில் வெளியீடு. 2018 ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தேதியும் அறிவிக்கப்பட உள்ளது.


TRB ANNUAL PLANNER 2018 - ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வருடாந்திர தேர்வு கால அட்டவணை விரைவில் வெளியீடு இறுதிகட்ட தயாரிப்பு பணிகள் தீவிரம் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வருடாந்திர தேர்வு கால அட்டவணை தயாரிப்பு பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. தேர்வு கால அட்டவணை விரைவில் வெளியிடப்படுகிறது. அரசு பள்ளி ஆசிரியர்கள், உதவி தொடக்கக்கல்வி அதிகாரிகள், அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள், அரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர்கள், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் உள்ளிட்டோர் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். ஓராண்டில் ஆசிரியர் பதவிகளில் நிரப்பப்படும் காலியிடங்கள் எண்ணிக்கை, அதற்கான அறிவிப்பு வரும் நாள், எழுத்துத் தேர்வு மற்றும் தேர்வு முடிவு நாள் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய வருடாந்திர தேர்வு கால அட்டவணை (Annual Planner) வெளியிடும் முறையை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. இதன்மூலம், ஆசிரியர், விரிவுரையாளர், உதவி பேராசிரியர் போன்ற பணிகளில் சேர விரும்புவோர் தேர்வுக்கு முன்கூட்டியே திட்டமிட்டு படிக்க வசதியாக இருக்கும். அந்த வகையில், முதுகலை பட்டதாரி ஆசிரியர், அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர், சிறப்பு ஆசிரியர், வேளாண் ஆசிரியர், அரசு கலை அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர், உதவி தொடக்கக்கல்வி அதிகாரி ஆகிய பதவிகளில் 6,390 காலியிடங்களை நிரப்பும் வகையில் கடந்த ஆண்டு தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி, முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு மட்டும் தேர்வு நடத்தப்பட்டு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு, மதிப்பெண் முறைகேடு காரணமாக சமீபத்தில் ரத்து செய்யப்பட்டது. சிறப்பு ஆசிரியர் தேர்வு கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் நடத்தப்பட்டது. தேர்வு வாரிய அறிவிப்பின்படி, கடந்த நவம்பரில் முடிவுகள் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். 3 மாதங்கள் ஆகியும் இன்னும் முடிவு வெளியிடப்படவில்லை. வேளாண் ஆசிரியர், அரசு கலை அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர், உதவி தொடக்கக்கல்வி அதிகாரி ஆகிய தேர்வுகளுக்கு இன்னும் அறிவிப்பே வெளியிடப்படவில்லை. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை ஜனவரியில் வெளியிட்டது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தேர்வு கால அட்டவணை ஒரு வாரத்தில் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கடந்த ஜனவரியில் கூறினார். ஆனால், இன்னும் அட்டவணை வெளியிடப்பட வில்லை. இதனால், ஆசிரியர் வேலையை எதிர்பார்த்து காத்திருப்பவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தகவல் அலுவலகம் சென்னை டிபிஐ வளாகத்தில் உள்ளது. சிறப்பு ஆசிரியர் தேர்வு முடிவு எப்போது வெளியாகும், வருடாந்திர தேர்வுக்கால அட்டவணை எப்போது வெளியிடப்படும் என்பதை அறிந்துகொள்ள தினமும் ஏராளமானோர் இங்கு வந்து விசாரித்துவிட்டு செல்கின்றனர். இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, ''2018-ம் ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணை தயாரிப்பு பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. டிஎன்பிஎஸ்சி, யுபிஎஸ்சி உள்ளிட்ட இதர தேர்வாணையங்களின் தேர்வு நாள் குறித்த விவரங்களை ஆய்வு செய்துவருகிறோம். வருடாந்திர தேர்வு கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும்'' என்றனர். கடந்த ஆண்டு அட்டவணையில் இடம்பெற்ற உதவி தொடக்கக்கல்வி அதிகாரி, வேளாண் ஆசிரியர், அரசு கலை கல்லூரி உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வுகள் புதிய அட்டவணையில் முதலில் இடம்பெறும் என தெரிகிறது.  DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TNTEXT BOOKS -1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கு ஏப்ரல் இறுதிக்குள் புதிய பாடப்புத்தகம் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்


TNTEXT BOOKS -1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கு ஏப்ரல் இறுதிக்குள் புதிய பாடப்புத்தகம் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல் | ஏப்ரல் மாத இறுதிக்குள் 1,6,9, 11-ம் வகுப்புகளுக்கு புதிய பாடப்புத்தகம் தயாராகிவிடும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். புதிய பாடத்திட்டம் தயாரிப்பு பணிகள் தொடர்பாக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு நேற்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் 12 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிப் பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட இருக்கிறது. புதிய பாடத்திட்டம் தயாரிக்கும் பணி கடந்த 20.7.2017 அன்று தொடங்கப்பட்டது. 20.11.2017 அன்று வரைவு பாடத்திட்டம் தயாராகிவிட்டது. தமிழக அரசு எவ்வளவு விரைவாக செயல்படுகிறது என்பதற்கு இது ஓர் உதாரணம். பொதுவாக, மத்திய அரசு பாடத்திட்டத்தை மாற்றியமைக்கிறது என்றால் 2 ஆண்டுகள் ஆகும் என்று சொல்வார்கள். வரும் கல்வி ஆண்டில் 1,6,9,11 ஆகிய வகுப்புகளுக்கான பாடத்திட்டம் மாற்றப்பட உள்ள நிலையில், தற்போது ஒன்றாம் வகுப்புக்கும் 9-ம் வகுப்புக்கும் பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு அச்சிடும் பணிக்காக அதற்கான குறுந்தகடுகள் தமிழ்நாடு பாடநூல் கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. எஞ்சிய 6, 11-ம் வகுப்புகளுக்கான பாடத்திட்டத்துக்கான குறுந்தகடுகள் இன்னும் 15 நாளில் தயாராகும். எனவே, 1,6,9,11 ஆகிய வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்தகம் ஏப்ரல் மாத இறுதிக்குள் தயாராகிவிடும். மாணவர்களின் எதிர்கால நலனையும் பெற்றோரின் விருப்பத்தையும் மனதில்கொண்டுதான் பிளஸ் 1 வகுப்புக்கு இந்த ஆண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற 'நீட்' நுழைவுத்தேர்வில் பிளஸ் 1 வகுப்பில் இருந்து ஏராளமான கேள்விகள் இடம்பெற்றிருந்தன. பிளஸ் 1 வகுப்பு பொதுத்தேர்வு இல்லாத காரணத்தால் மாணவர்கள் அப்பாடங்களை சரியாக படிக்கவில்லை. எனவேதான். நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் தடுமாறிப்போய்விட்டார்கள். புதிய பாடத்திட்டத்தில் மேல்நிலைக்கல்வியில் பொதுப்பிரிவில் 26 பாடங்களும், தொழிற்கல்வி பிரிவில் 12 பாடங்களும், 1,6,9 வகுப்புகளில் 14 பாடங்களும் இடம்பெறும். சிறுபான்மை மொழிப்பாடங்கள் உட்பட ஒட்டுமொத்தமாக 174 பாடப்புத்தகங்கள் இருக்கும். எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளுக்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாணவர்களின் வசதிக்காக இந்த ஆண்டு கூடுதலாக 515 தேர்வு மையங்கள் அமைக்கப்பட இருக்கின்றன. தேர்வு நேரம் 3 மணி நேரத்தில் இருந்து இரண்டரை மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல், கேள்விகளின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டு இருக்கிறது. இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.  DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஜாக்டோ-ஜியோ சார்பில் அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் தொடர் மறியல் போராட்டம் 3 ஆயிரம் பேர் கைது


ஜாக்டோ-ஜியோ சார்பில் அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் தொடர் மறியல் போராட்டம் 3 ஆயிரம் பேர் கைது | பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி ஜாக்டோ-ஜியோ சார்பில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நேற்று சென்னையில் மறியல் போராட்டம் நடத்தினார்கள். இதையொட்டி 3 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் கோட்டை நோக்கி மறியல் போராட்டம் பிப்ரவரி 21-ந்தேதி முதல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று காலை 9.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே ஜாக்டோ-ஜியோ சார்பில் தாஸ், மாயவன், மீனாட்சி சுந்தரம், தியாகராஜன், அன்பரசு உள்பட ஏராளமான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூடினார்கள். பின்னர் அவர்கள் தரையில் உட்கார்ந்து போராட்டம் நடத்தினார்கள். பிறகு ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் மோசஸ், சுரேஷ், வெங்கடேசன் ஆகியோர் தலைமையில் கோட்டை நோக்கி மறியல் செய்ய காலை 11.20 மணிக்கு ஊர்வலமாக புறப்பட்டனர். அவர்களை செல்லவிடாமல் தடுக்க போலீசார் இரும்பு வேலி அமைத்து இருந்தனர். இரும்பு வேலியை மீறி கோட்டை நோக்கி செல்ல முயன்ற 3 ஆயிரம் பேர்களை ஏற்கனவே தயாராக வைத்திருந்த பஸ்களில் கைது செய்து ஏற்றிச் சென்றனர். முன்னதாக மறியல் போராட்டத்தின் போது ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் கூறியதாவது:- மத்திய அரசு 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஊதியக்குழுவின் பரிந்துரையின்படி ஊதிய உயர்வு வழங்கி உள்ளது. ஆனால் தமிழக அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அமல்படுத்தும்போது 21 மாதங்கள் விட்டுப்போனது. எனவே நிலுவையில் உள்ள 21 மாதங்களுக்கு ஊதியம் வழங்கவேண்டும். 2016-ம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியாக அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என்றனர். ஆனால் அமல்படுத்தவில்லை. புதிய ஓய்வூதிய திட்டத்தில் பிடித்தம் செய்த ரூ.20 ஆயிரம் கோடி என்னாவாயிற்று?. அரசு பொதுத்தேர்வு தொடங்க உள்ளது. இந்த பணியில் ஜாக்டோ- ஜியோ சார்பில் 50 ஆயிரம் பேர் பணியில் ஈடுபடுகிறார்கள். விரைவில் உள்ளாட்சி மன்ற தேர்தல் வரஉள்ளது. அந்ததேர்தலிலும் நாங்கள் தான் பணியாற்ற உள்ளோம். எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற பல போராட்டங்களை நடத்தி உள்ளோம். தமிழக அரசு உடனே எங்களை அழைத்துப்பேச வேண்டும். பேசும் வரை தினமும் தொடர் மறியல் போராட்டம் தொடரும். பேச்சுவார்த்தைக்கு அரசு அழைக்க வில்லை என்றால், போராட்டம் வேறு விதமாக இருக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.  FIND YOUR NEEDS HERE
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TNPSC குரூப்-2 முதன்மை, நேர்முக தேர்வு மதிப்பெண்கள் வெளியீடு



TNPSC குரூப்-2 முதன்மை, நேர்முக தேர்வு மதிப்பெண்கள் வெளியீடு | குரூப்-2 முதன்மை தேர்வு, நேர்முக தேர்வில் மதிப்பெண்கள் அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டன. சைதை துரைசாமியின் மனித நேய மையத்தில் படித்த மாணவிகள் இதில் சாதனை படைத்துள்ளனர். குரூப்-2 தேர்வு வருவாய்த்துறை உதவியாளர், தொழிலாளர் உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி, வணிக வரித்துறை அதிகாரி, கூட்டுறவு முதுநிலை ஆய்வாளர், உள்ளாட்சி மற்றும் நிதி தணிக்கையாளர் உள்ளிட்ட 1,250 பணிகளுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப்-2 தேர்வை அறிவித்தது. இதற்கான முதல் நிலை தேர்வு 2015-ம் ஆண்டு நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. பின்னர் முதன்மை தேர்வு 2016-ம் ஆண்டு நடந்தது. இந்த தேர்வை 15 ஆயிரம் பேர் எழுதினார்கள். இந்த முடிவும் வெளியிடப்பட்டது. இதையடுத்து கடந்த மாதம் 22-ந் தேதி முதல் இம்மாதம் 19-ந் தேதி வரை நேர்முக தேர்வு நடத்தப்பட்டது. முதன்மை தேர்வில் 2 ஆயிரத்து 500 பேர் எடுத்த மதிப்பெண்களும், நேர்முக தேர்வில் அவர்கள் வாங்கிய மதிப்பெண்களும் அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in ) வெளியிடப்பட்டது. இவர்களில் 1,250 பேர் தேர்ந்து எடுக்கப்பட உள்ளனர். DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, 21 February 2018

DSE - BRTE TO BT TEACHER CONVERSION COUNSELLING ANNOUNCED




விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் தேர்வு ரத்து அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு



தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் தேர்வு ரத்து அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு | தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:- தோட்டக்கலை உதவி இயக்குனர் மற்றும் தோட்டக்கலை அலுவலர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கான தேர்வு வருகிற 24-ந்தேதி மற்றும் 25-ந்தேதிகளில் நடைபெற இருந்தன. ஐகோர்ட்டு ஆணைக்கிணங்க இந்த தேர்வுகள் ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அந்த செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. | DOWNLOAD - FIND YOUR NEEDS HERE
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அரசு ஊழியர்-ஆசிரியர் சம்பள முரண்பாட்டை களைய நிதித்துறை செயலாளர் தலைமையில் கமிட்டி அமைத்து தமிழக அரசு உத்தரவு

அரசு ஊழியர்-ஆசிரியர் சம்பள முரண்பாட்டை களைய நிதித்துறை செயலாளர் தலைமையில் கமிட்டி அமைப்பு தமிழக அரசு உத்தரவு | தமிழக நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் கே.சண்முகம் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழக அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அளிக்கப்பட்ட ஊதிய உயர்வில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதாகவும், அதை களைய வேண்டும் என்றும் அரசு ஊழியர் சங்கத்தினர் முறையிட்டனர். இதையடுத்து சட்டசபையில் ஜனவரி 8-ந் தேதி பேசிய கவர்னர், அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும் என்று குறிப்பிட்டார். இதை அரசு கவனமுடன் பரிசீலித்தது. சம்பள முரண்பாடுகளை களைய ஒரு நபர் கமிட்டியை நியமிக்க அரசு முடிவு செய்தது. அதன்படி, நிதித்துறை செயலாளர் (செலவீனம்) எம்.ஏ.சித்திக் தலைமையில் இந்த கமிட்டியை நியமித்து அரசு உத்தரவிடுகிறது. சம்பள முரண்பாடுகள் தொடர்பாக அளிக்கப்பட்ட மனுக்களை இந்த கமிட்டி பரிசீலிக்க வேண்டும். அதை களையும் விதத்தில் அரசுக்கு இந்த கமிட்டி பரிந்துரைகளை 31.7.18 அன்றைய தேதிக்குள் அளிக்க வேண்டும். இந்த கமிட்டி அழைக்கும் போது அனைத்து துறையின் தலைவர்கள், செயலாளர்கள் ஆஜராகி விவரங்களை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. | DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 20 February 2018

TNPSC MOTOR VEHICLE INSPECTOR GRADE-II NOTIFICATION | மோட்டார் வாகன ஆய்வாளர் (கிரேடு-2) பதவியில் 113 காலியிடங்களை நிரப்புவதற்குத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

TNPSC MOTOR VEHICLE INSPECTOR GRADE-II NOTIFICATION | மோட்டார் வாகன ஆய்வாளர் (கிரேடு-2) பதவியில் 113 காலியிடங்களை நிரப்புவதற்குத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.| டி.என்.பி.எஸ்.சி. தேர்வு மூலம் மோட்டார் வாகன ஆய்வாளர் (கிரேடு-2) பதவிக்குத் தேர்வுசெய்யப்படுவோர் துறைத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்று மோட்டார் வாகன ஆய்வாளர் (கிரேடு-1), ஆர்டிஓ, துணை ஆணையர், இணை ஆணையர் எனப் படிப்படியாகப் பதவி உயர்வு பெறுகிறார்கள். இந்த நிலையில், தற்போது மோட்டார் வாகன ஆய்வாளர் (கிரேடு-2) பதவியில் 113 காலியிடங்களை நிரப்புவதற்குத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. தேவையான தகுதி ஆட்டோமொபைல் இன்ஜினீயரிங் அல்லது மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் டிப்ளமா முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். அதோடு பெட்ரோல் அல்லது டீசல் இன்ஜின் வாகனங்களில் குறைந்தபட்சம் ஓராண்டாவது பணிபுரிந்த அனுபவம் வேண்டும். மேலும், இரு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம், கனரகச் சரக்கு வாகனங்கள், கனரகப் பயணிகள் வாகனங்கள் உரிமம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 6 மாதங்களாவது கனரக வாகனங்கள் ஓட்டிய அனுபவமும் தேவை. வயது 21 முதல் 32-க்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு (எஸ்.சி., எஸ்.டி, பிசி, எம்.பி.சி., டி.என்.சி.) வயது வரம்பு கிடையாது. தகுதியுடையவர்கள் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் பணிக்குத் தேர்வுசெய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு இரண்டு தாள்களைக் கொண்டிருக்கும். என்ன கேட்பார்கள்? முதல் தாளில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் பாடத்தில் 100 கேள்விகள், ஆட்டோமொபைல் இன்ஜினீயரிங் பாடத்தில் 100 கேள்விகள் என மொத்தம் 200 கேள்விகள் இடம்பெறும். மதிப்பெண் 300. இரண்டாவது தாள் பொது அறிவுத் தாள். இதில் 100 கேள்விகள் கேட்கப்படும். மதிப்பெண் 200. பொது அறிவுத் தாள், பிளஸ் டூ தரத்தில் அமைந்திருக்கும். நேர்முகத் தேர்வுக்கு 70 மதிப்பெண். உரிய வயதுத் தகுதி, கல்வித் தகுதி, தொழில்நுட்பத் தகுதிகள் உடையவர்கள் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தை (www.tnpsc.gov.in) பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பிரிண்ட் அவுட் எடுக்கப்பட்ட ஆன்லைன் விண்ணப்பம், சான்றொப்பம் பெறப்பட்ட ஆவணங்களின் நகல்களை டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, தேர்வுக் கட்டணம், பாடத்திட்டம் உள்ளிட்ட விவரங்களை டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் விரிவாக அறிந்துகொள்ளலாம். | DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

சென்னை பல்கலைக்கழக எம்.ஃபில். தேர்வு முடிவுகள் பிப்ரவரி 21-ம் தேதி வெளியிடப்படுகின்றன.

சென்னை பல்கலை. எம்.ஃபில். தேர்வு முடிவு - சென்னை பல்கலைக்கழக எம்.ஃபில். தேர்வு கடந்த ஆகஸ்டு மாதம் நடைபெற்றது. இத்தேர்வின் முடிவுகள் நாளை (21-ம் தேதி) வெளியிடப்படுகின்றன. வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள எம்.ஃபில். தேர்வுக்கு மே மாதம் 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அபராத கட்டணத்துடன் விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 11-ம் தேதி ஆகும். விண்ணப்ப படிவத்தை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.unom.ac.in) இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று பதிவாளர் இராம.சீனுவாசன் தெரிவித் துள்ளார். | DOWNLOAD - FIND YOUR NEEDS HERE
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழகத்தில் மேலும் 5 நகரங்களில் அடுத்த வாரம் முதல் தலைமை அஞ்சலகங்களில் பாஸ்போர்ட் மையம்

தமிழகத்தில் மேலும் 5 நகரங்களில் அடுத்த வாரம் முதல் தலைமை அஞ்சலகங்களில் பாஸ்போர்ட் மையம் | அஞ்சல் நிலையங்களில் கூடுதல் சேவையாக பாஸ்போர்ட் பெறும் சேவை கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து, மேலும் 5 அஞ்சல் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவை மையங்கள் தொடங்கப்பட உள்ளன. மக்களுக்கு பாஸ்போர்ட் பெறுவதற்கான சேவை கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து, மேலும் 5 அஞ்சல் நிலையங்களில் இந்த சேவை மையங்கள் தொடங்கப்படவுள்ளன. இதுகுறித்து சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் ஆர்.ஆனந்த், அஞ்சல் துறை தலைவர் (மெயில் மற்றும் வர்த்தக வளர்ச்சி) ஜே.டி.வெங்கடேஸ்வரலு ஆகியோர் 'தி இந்து' விடம் கூறியதாவது: பொதுமக்கள் பாஸ்போர்ட் பெற வசதியாக அஞ்சல் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவை மையம் தொடங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கடந்த ஆண்டு மார்ச் 7-ம் தேதி சேலம் தலைமை அஞ்சல் நிலையத்திலும், மார்ச் 25-ம் தேதி வேலூர் தலைமை அஞ்சல் நிலையத்திலும் பாஸ்போர்ட் மையம் தொடங்கப்பட்டது. காரைக்காலில் கடந்த ஜனவரி 19-ம் தேதி தொடங்கப்பட்டது. மக்கள் மத்தியில் இந்த சேவைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதையடுத்து, அடுத்தகட்டமாக திருவண்ணாமலை, விழுப்புரம், விருதுநகர், நாகர்கோவில், கடலூரில் பாஸ்போர்ட் மையங் கள் திறக்கப்பட உள்ளன. சென்னை நகர மண்டல அஞ்சல் துறைக்கு உட்பட்ட விழுப்புரம் தலைமை அஞ்சல் நிலையத்தில் வரும் 27-ம் தேதியும் திருவண்ணாமலை தலைமை அஞ்சல் நிலையத்தில் மார்ச் 1-ம் தேதியும் தென்மண்டல அஞ்சல் துறைக்கு உட்பட்ட விருதுநகர் தலைமை அஞ்சல் நிலையத்தில் வரும் 27-ம் தேதியும் நாகர்கோவில் தலைமை அஞ்சல் நிலையத்தில் வரும் 28-ம் தேதியும் பாஸ்போர்ட் சேவை மையம் தொடங்கப்பட உள்ளன. மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட கடலூர் தலைமை அஞ்சல் நிலையத்தில் வரும் 27-ம் தேதி பாஸ்போர்ட் சேவை மையம் தொடங்கப்படுகிறது. இதுதவிர, ராமநாதபுரம், திண்டுக்கல், தேவகோட்டை உள்ளிட்ட 6 இடங்களில் விரைவில் அஞ்சல் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவை மையங்கள் திறக்கப்படும். இதன்மூலம், சம்பந்தப்பட்ட மாவட்ட மக்கள் மட்டுமின்றி, அருகில் உள்ள மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் பயன் பெறுவார்கள். இவ்வாறு அவர்கள் கூறினர். | DOWNLOAD - FIND YOUR NEEDS HERE
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

இந்திய வனப்பணி (IFS) தேர்வு முடிவுகள் வெளியீடு | திண்டுக்கல்லைச் சேர்ந்த மாணவி கார்த்திகேயனி தமிழக அளவில் முதல் இடம்

இந்திய வனப்பணி (IFS) தேர்வு முடிவுகள் வெளியீடு | தமிழகத்தில் 14 பேர் தேர்ச்சி கார்த்திகேயனி இந்திய வனப்பணி (ஐஎப்எஸ்) இறுதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் தமிழ்நாட்டில் இருந்து 14 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஐஎப்எஸ் என அழைக்கப்படும் இந்திய வன பணிக்கான முதன்மைத் தேர்வு கடந்த டிசம்பர் மாதம் 3-ம் தேதி முதல் 13 ம் தேதி வரை நடந்தது. எழுத்துத் தேர்வின் முடிவுகள் ஜனவரி 3-ம் தேதி வெளியானது. அதைத்தொடர்ந்து நேர்முகத்தேர்வு பிப்ரவரி 5-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்றது . இந்த நிலையில், இறுதி முடிவுகளை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நேற்று இரவு வெளியிட்டது. அகில இந்திய அளவில் மொத்தம் 110 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களில் 14 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். தமிழகத்தைச் சேர்ந்த கார்த்திகேயனி என்ற மாணவி இந்திய அளவில் 12-வது இடத்தையும் தமிழக அளவில் முதலிடத்தையும் பிடித்துள்ளார். அவர் தனது 2-வது முயற்சியில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். www.upsc.gov.in என்ற இணையதளத்தில் வனப்பணி தேர்வு முடிவுகளை தெரிந்துக்கொள்ளலாம். | DOWNLOAD - FIND YOUR NEEDS HERE
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

சென்னை உள்பட 4 மாவட்ட அரசு பள்ளிகளுக்கு இலவச ‘வை-பை’ வசதி தனியார் நிறுவனத்துடன் அரசு ஒப்பந்தம்

சென்னை உள்பட 4 மாவட்ட அரசு பள்ளிகளுக்கு இலவச 'வை-பை' வசதி தனியார் நிறுவனத்துடன் அரசு ஒப்பந்தம் | சென்னை உள்பட 4 மாவட்ட அரசு பள்ளிகளுக்கு இலவச 'வை-பை' வசதி வழங்குவதற்கு ஏ.சி.டி. என்ற தனியார் நிறுவனத்துடன் அரசு ஒப்பந்தம் மேற்கொண்டு உள்ளது. இலவச 'வை-பை' சென்னை தலைமை செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் முன்னிலையில் தமிழக அரசுடன் அட்ரியா கன்வெர்ஜென்ஸ் டெக்னாலஜிஸ் (ஏ.சி.டி.) என்ற தனியார் நிறுவனம், அரசு பள்ளிக்கூடங்களில் இலவச வை-பை (கம்பி இல்லாத அதிவேக இணையதள இணைப்பு) வசதி அமைத்துத் தருவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நேற்று கையெழுத்திட்டது. பின்னர் நிருபர்களுக்கு, அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அளித்த பேட்டி வருமாறு:- 318 அரசுப் பள்ளிகள் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 252 பள்ளிகளிலும், கோவையில் 66 பள்ளிகளிலும் மொத்தம் 318 அரசு பள்ளிகளுக்கு, வை-பை வசதி வழங்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. மேலும் இந்த திட்டத்தை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, இந்த இணையதளம் மூலம், உலக விஷயங்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 4 மாவட்டங்களில், வை-பை வசதிக்காக, பூமிக்கடியில் கேபிள் பதிக்க உள்ளனர். புதிய பாடத் திட்டம் வரும் கல்வி ஆண்டில் சி.பி.எஸ்.இ.யை விட மேலான புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்படும். ஏப்ரல் மாதத்தில் புத்தக வடிவில் அந்த பாடத்திட்டம் வழங்கப்படும். 1, 6, 9 மற்றும் 11 ஆகிய வகுப்புகளுக்கு இந்த கல்வி ஆண்டிலும், மற்ற வகுப்புகளுக்கு அடுத்த கல்வி ஆண்டிலும் புதிய பாடத்திட்டம் செயல்படுத்தப்படும். மாணவர்களுக்கான உதவி மையங்கள் விரைவில் தொடங்கப்படும். திருப்பூர் மாவட்டத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, விஞ்ஞான வளர்ச்சிக்காக ரோபோ பயிற்சி நடத்தப்பட்டது. மேல் நாடுகளுக்கு ஈடாக, கல்வி தரத்தை உயர்த்த, 96 அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு ரோபோ பயிற்சி கல்வியை வழங்க, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதை 500 ஆக உயர்த்தவும் திட்டமிடப்பட்டு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். இலவச வை-பை வசதி மூலம் ஒவ்வொரு மாதமும் பள்ளிகளுக்கு 300 ஜி.பி. வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. | DOWNLOAD - FIND YOUR NEEDS HERE
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

சென்னை பல்கலைக்கழகத்தில் 4 புதிய ‘ஆன்-லைன்’ படிப்புகள் வருகிற கல்வி ஆண்டில் அறிமுகம் சிண்டிகேட் கூட்டத்தில் ஒப்புதல்

சென்னை பல்கலைக்கழகத்தில் 4 புதிய 'ஆன்-லைன்' படிப்புகள் வருகிற கல்வி ஆண்டில் அறிமுகம் சிண்டிகேட் கூட்டத்தில் ஒப்புதல் | சென்னை பல்கலைக்கழகத்தில் வருகிற கல்வி ஆண்டு முதல் 4 புதிய ஆன்-லைன் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கான ஒப்புதல் சிண்டிகேட் கூட்டத்தில் அளிக்கப்பட்டது. சிண்டிகேட் கூட்டம் சென்னை பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு துணைவேந்தர் பி.துரைசாமி தலைமை தாங்கினார். பதிவாளர் ஆர்.சீனிவாசன் முன்னிலை வகித்தார். கல்லூரி கல்வியியல் இயக்குனர் மஞ்சுளா, உயர்கல்வித்துறை செயலாளர் சுனில் பாலிவால் உள்பட சிண்டிகேட் உறுப்பினர்கள் பங்கேற்றனர். துணைவேந்தர் தகவல் கடந்த ஆண்டு நடைபெற்ற சிண்டிகேட் கூட்டத்தின் போது, சென்னை பல்கலைக்கழகத்தில் 2018-19 கல்வி ஆண்டு முதல் 'ஆன்-லைன்' படிப்பை அறிமுகம் செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தநிலையில் நடந்த கூட்டத்தில் 4 புதிய 'ஆன்-லைன்' படிப்பை வருகிற கல்வி ஆண்டில் (2018-19) அறிமுகம் செய்வதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இதுகுறித்து துணைவேந்தர் பி.துரைசாமி கூறியதாவது:- சென்னை பல்கலைக்கழகம் NA-AC, A+ (தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சில்) சான்றிதழ் பெற்றிருப்பதால் 'ஆன்-லைன்' படிப்பை தொடங்குவதற்கு அனுமதி உண்டு. எனவே இந்த கல்வி ஆண்டு எம்.எஸ்.சி.(ஸ்பேஷியல் டெக்னாலஜி), எம்.எஸ்.சி. (இணைய தடயவியல்), எம்.ஏ. (மகளிர் கல்வி), எம்.சி.ஏ. ஆகிய 4 புதிய 'ஆன்-லைன்' படிப்புகள் தொடங்குவதற்கு திட்டமிடப்பட்டு இருந்தது. அதற்கான ஒப்புதல் சிண்டிகேட் கூட்டத்தில் பெறப்பட்டுள்ளது. மானியக்குழுவுக்கு பரிந்துரை இந்த ஒப்புதல் கடிதம் பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரைக்கு அனுப்பப்படும். பல்கலைக்கழக மானியக்குழு அனுமதி வழங்கியவுடன் சென்னை பல்கலைக்கழகத்தில் வருகிற கல்வி ஆண்டு 4 புதிய 'ஆன்-லைன்' படிப்புகள் அறிமுகம் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார். மதியம் 3 மணிக்கு தொடங்கிய கூட்டம் மாலை 6.30 மணி வரை நடந்தது. 27 சிண்டிகேட் உறுப்பினர்களில் 21 பேர் பங்கேற்றதாகவும், 6 பேர் கலந்துகொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. | DOWNLOAD - FIND YOUR NEEDS HERE
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 19 February 2018

அரசுப் பள்ளிகளில் 2,223 பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்கள் அறிவிப்பு

அரசுப் பள்ளிகளில் 2,223 பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்கள் அறிவிப்பு | அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள், பள்ளிக்கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்குகின்றன. இப்பள்ளிகளில் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்த நிலையில், அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை கணக்கெடுக்கப்பட்டு பள்ளிக் கல்வித் துறைக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது அதன்படி, பட்டதாரி ஆசிரியர் பதவியில் மட்டும் 2,223 காலியிடங்கள் உள்ளன. பாடப்பிரிவு வாரியாக காலியிடங்கள் விவரம் வருமாறு: தமிழ்-299; ஆங்கிலம் - 237; கணிதம் - 468; அறிவியல் - 731; சமூக அறிவியல் - 488. ஆசிரியர் பணி நியமனத்தைப் பொறுத்தவரையில், 50 % நேரடி நியமன முறையிலும், 50 %பதவி உயர்வு மூலமாகவும் நிரப்பப்படுகின்றன. பட்டதாரி ஆசிரியர் பணிக்கு, ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களைக் கொண்டு வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் நடைபெறுகிறது. வெயிட்டேஜ் முறையில், தகுதித்தேர்வு தேர்ச்சிக்கு 60 சதவீதமும், பிளஸ் 2, பட்டப் படிப்பு, பிஎட். மதிப்பெண்-க்கு 40 சதவீதமும் வெயிட்டேஜ் அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. | DOWNLOAD - FIND YOUR NEEDS HERE
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழ்நாட்டில் 43 கல்லூரிகளில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகளின் கல்வி தரத்தை மேம்படுத்த நடவடிக்கை அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அதிரடி

தமிழ்நாட்டில் 43 கல்லூரிகளில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகளின் கல்வி தரத்தை மேம்படுத்த நடவடிக்கை அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அதிரடி | தமிழ்நாட்டில் 43 கல்லூரிகளில் முதல் பருவத்தேர்வில் ஒரு மாணவர் கூட வெற்றி பெறாத நிலையில், தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகளில் கல்வி தரத்தை மேம்படுத்தும் நடவடிக்கையில் இந்திய தொழில் நுட்ப கல்வி கவுன்சில் களம் இறங்கி உள்ளது. புற்றீசல் போல பெருகும் கல்லூரிகள் தமிழ்நாட்டில் புற்றீசல் போல தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகள் பெருகி வருகின்றன. பல கல்லூரிகளில் சேர்வதற்கு மாணவர்கள் முன் வருவதில்லை. பல கல்லூரிகளில் பிரமாண்டமாக விளம்பரங்கள் செய்து, தரமான கட்டமைப்பு, டாக்டர் பட்டம் பெற்ற ஆசிரியர்கள், பட்டம் பெற்ற பின்னர் வேலை வாய்ப்பு வசதிகள் பெற வளாக தேர்வுக்கு முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் என கவர்ச்சியான வாக்குறுதிகள் அளித்து மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. என்ஜினீயரிங் கல்லூரிகள் பெருகி வருகிற அளவுக்கு கல்வி யின் தரம் பெருகவில்லை. இது கல்வியாளர்களுக்கும், பெற்றோர்களுக்கும் கவலை அளிப்பதாக அமைந்து உள்ளது. 43 கல்லூரிகளின் நிலை தமிழ்நாட்டில் முதல் பருவத்தேர்வில் (செமஸ்டர் தேர்வு) 43 என்ஜினீயரிங் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட வெற்றி பெறவில்லை என்று வெளியாகி உள்ள தகவல் கவலை அளிப்பதாக அமைந்து உள்ளது. 80 அரசு என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்பட 800 தொழில் நுட்ப கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து போய் இருப்பது மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறைக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் அவற்றை மூடும் அபாயம் உள்ளது. செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்று சொல்லி இந்த கல்லூரிகளுக்கு ஏற்கனவே இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அந்தக் கல்லூரிகளை மூடும் சூழல் உருவாகலாம். 25 சதவீத அளவுக்கு கூட மாணவர்கள் சேர்க்கை இல்லாத படிப்புகளை கல்லூரி நிர்வாகங்களே மூடும் மன நிலையில் உள்ளன. நடவடிக்கை இந்த நிலையில்தான் என்ஜினீயரிங் கல்லூரிகளில் கல்வி தரத்தை மேம்படுத்தும் நடவடிக்கையில் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் இறங்கி உள்ளது. குறிப்பாக, என்ஜினீயரிங் படிக்கிற மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகள் பெருகும் வகையில், கல்வித்தரத்தை மேம்படுத்துவதற்கு அகில இந்திய தொழில் நுட்ப கல்வி கவுன்சில் பல நடவடிக்கைகளுக்கு திட்டமிட்டு உள்ளது. அவற்றில் குறிப்பிடத்தக்கவை:- * மாணவர்கள் சேர்க்கையின்போது, தொழில் நுட்ப கல்விக்கு ஏற்ற வகையில் மொழி அறிவாற்றலை பெறுவதற்கு கட்டாய பயிற்சி பெற வைக்கப்படுவார்கள். * தற்போதைய பாடத்திட்டத்தை பரிசீலிக்கிற வகையில், மாறிவரும் சூழலுக்கு ஏற்ப பொருத்தமான மாற்றங்களை ஏற்படுத்தவும், ஒவ்வொரு பாடத்துக்கும் தொழில்துறை ஆலோசனைக்குழுவை ஒவ்வொரு தொழில் நுட்ப பல்கலைக்கழகமும் மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் இந்தப் பணிகள் முடிந்து விட வேண்டும். 3 பயிற்சிகள் * மாணவர்கள் இளநிலை பட்டப்படிப்பை முடிப்பதற்கு முன்பாக தலா 8 வாரங்கள் வீதம் 3 பயிற்சிகள் பெற வேண்டும். இதில் மாணவர்கள் பயிற்சிக்கு தொழில் நிறுவனத்தை கண்டறிவதற்கு அந்தந்த கல்லூரிகள் உதவ வேண்டும். அந்த பொறுப்பு, கல்லூரிகளுக்கு உண்டு. * வேலைக்கு செல்வதற்கு வசதியாக, இளம்நிலை பட்டப்படிப்பை முடித்து வெளியேறுகிறபோது அனைத்து மாணவர்களுக்கும் தொழில் நுட்பத்திலும், மென்திறனிலும் பணியாற்றும் வகையில் நிர்வாகத்திறன்கள், தொழில் திறன்கள், தலைமைத்துவ திறன்கள், தகவல் தொடர்பு திறன்கள், தொழில் நுட்பத்திறன்கள், குழுவாக பணியாற்றும் திறன்களை வழங்கி விட வேண்டும். * மாணவர்களுக்கு தேசிய வேலைவாய்ப்பு மேம்பாட்டு திட்டம், வேலை வாய்ப்பு மேம்பாட்டு திட்டம் ஆகியவற்றை அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் செயல்படுத்தும். அங்கீகாரம் ரத்து * 'சுவாயம்' தளத்தின் மூலம் ஆசிரியர்களின் கற்பிக்கும் நுட்பங்களை மேம்படுத்துவதற்கு ஆன்லைன் படிப்புகள் உருவாக்கப்பட்டு வழங்கப்படும். குறைந்த பட்சம் 50 சதவீத ஆசிரியர்கள் இந்தப் பயிற்சியை பெற முன்வந்தால் மட்டுமே, எந்த ஒரு என்ஜினீயரிங் கல்லூரிக்கும் அங்கீகாரம் அளிக்கப்படும். * கல்லூரிகளின் துறைத் தலைவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை 'சுவாயம்' தளத்தின் மூலம் தலைமைத்துவ பயிற்சி பெறச்செய்ய வேண்டும். * தொழில் நுட்ப கல்லூரிகளில் கற்பிக்கப்படுகிற படிப்புகளில் பாதி அளவுக்காவது என்.பி.ஏ. என்னும் தேசிய அங்கீகார வாரியத்திடம் 2022-ம் ஆண்டுக்குள் அங்கீகாரம் பெற்று விட வேண்டும். இதில் நம்பத்தகுந்த முன்னேற்றம் காணப்படாவிட்டால், கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். மேற்கண்டவற்றை என்ஜினீயரிங் கல்லூரிகள் மேற்கொள்வற்கு தேவையான நடவடிக்கைகளை அகில இந்திய தொழில் நுட்ப கல்வி கவுன்சில் மேற்கொள்கிறது.


| DOWNLOAD - SITE GUIDE
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Sunday, 18 February 2018

ஐடிஐ சான்றிதழில் தவறு இருந்தால் திருத்தம் செய்யலாம்-வேலைவாய்ப்பு பயிற்சித் துறை அறிவிப்பு

ஐடிஐ சான்றிதழில் தவறு இருந்தால் திருத்தம் செய்யலாம்-வேலைவாய்ப்பு பயிற்சித் துறை அறிவிப்பு-கடந்த 2014 முதல் 2017-ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் ஐடிஐ படித்தவர்கள் தங்கள் மதிப்பெண் சான்றிதழ் மற்றும் தேசிய தொழிற்பயிற்சி சான்றிதழில் தவறு இருந்தால் அதில் திருத்தம் செய்து கொள்ள அணுகலாம் என வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை அறிவித்துள்ளது.இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-வேலைவாய்ப்பு, பயிற்சித் துறையின்கீழ் இயங்கும் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) கடந்த 2014 ஆகஸ்ட் முதல் 2017 ஆகஸ்ட் வரை சேர்ந்து ஐடிஐ படித்தவர்களுக்கு சேர்க்கையின்போது வழங்கப்பட்ட விவரங்களின் அடிப்படையில் மத்திய அரசால் தேர்வு நுழைவுச்சீட்டு, மதிப்பெண் சான்றிதழ், தேசிய தொழிற்சான்றிதழ் (என்டிசி) ஆகியவை ஆன்லைன் மூலமாக வழங்கப்பட்டு வருகின்றன. பயிற்சியாளர்களின் பெயர், தந்தை பெயர், தாய் பெயர் மற்றும் பிறந்த தேதி ஆகியவை பிழைகளுடன் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தால் அப்பிழைகளை சரிசெய்ய இயலாத நிலை முன்பு இருந்து வந்தது.தற்போது, அந்த பிழைகளைச் சரிசெய்ய மத்திய அரசு வாய்ப்பு அளித்துள்ளது. எனவே, இந்த வாய்ப்பை பயிற்சியாளர்கள் பயன்படுத்தி தங்கள் அசல் சான்றிதழ்களுடன் தங்கள் இருப்பிடத்துக்கு அருகில் உள்ள அலுவலகத்துக்கு பிப்ரவரி 22-ம் தேதிக்குள் நேரில் சென்று தங்களுடைய பள்ளி கல்விச் சான்றிதழ் மற்றும் உரிய ஆவணங்களைக் காண்பித்து திருத்தம் செய்ய விண்ணப்பிக்கலாம்.
1. மண்டல பயிற்சி இணை இயக்குநர், அரசு ஐடிஐ மாணவர் விடுதி, அழகர்கோயில் மெயின் ரோடு, மதுரை - 7.
2. மண்டல பயிற்சி இணை இயக்குநர், என்ஜிஓ 'பி' காலனி, பெருமாள்புரம், திருநெல்வேலி - 627 007.
3. மண்டல பயிற்சி இணை இயக்குநர், அரசு ஐடிஐ பின்புறம், ஜி.என்.மில்ஸ் அஞ்சல், கோவை - 641 029.
4. மண்டல பயிற்சி இணை இயக்குநர், அரசு ஐடிஐ அடுக்குமாடி கட்டிடம் (முதல் மாடி), காஜாமலை, திருச்சி - 620 020.
5. மண்டல பயிற்சி இணை இயக்குநர், அரசு ஐடிஐ பின் புறம், கிண்டி, சென்னை - 600 032.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

2018-2019-ம் கல்வி ஆண்டு முதல் சென்னை பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழி கல்வியில் மாற்றம் பதிவாளர் தகவல்



2018-2019-ம் கல்வி ஆண்டு முதல் சென்னை பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழி கல்வியில் மாற்றம் பதிவாளர் தகவல் - சென்னை பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் எம்.பி.ஏ. பட்டமேற்படிப்பு முடித்த மாணவிக்கு பல்கலைக்கழக பதிவாளர் ஆர்.சீனிவாசன் பட்டம் வழங்கிய போது எடுத்தபடம். அருகில் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் எம்.சீனிவாசன் உள்பட பேராசிரியர்கள் உள்ளனர். சென்னை, பிப்.18- சென்னை பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு பாடங்களை வழங்குவதில் தகவல் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதுடன், அஞ்சல் வழி கல்வியிலும் 2018-2019-ம் கல்வியாண்டு முதல் மாற்றம் கொண்டு வர திட்டமிடப்பட்டு உள்ளது என்று பல்கலைக்கழக பதிவாளர் ஆர்.சீனிவாசன் கூறினார். மாணவர்களுக்கு பட்டம் சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ., பட்ட மேற்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு சிறப்பு குறைதீர்வு மற்றும் மாணவர்களுக்கான பட்டமேற்படிப்பு முடித்ததற்கான பட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்தது. பதிவாளர் ஆர்.சீனிவாசன் தலைமை தாங்கி, மாணவர்களுடைய குறைகளை தீர்த்து வைத்ததுடன், பட்டங்களையும் வழங்கினார். தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் எம்.சீனிவாசன், கூடுதல் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஆர்.டி.சந்தானகிருஷ்ணன் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர். பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பம் பின்னர் பல்கலைக்கழக பதிவாளர் ஆர்.சீனிவாசன் கூறியதாவது:- நவீன யுகத்துக்கு ஏற்றார் போன்று பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களுக்கு பாடங்களை எளிய முறையில் கொண்டு செல்வதற்காக தகவல் தொழில்நுட்பத்தை 2018-2019-ம் கல்வியாண்டு முதல் முழுமையாக அறிமுகப்படுத்த திட்டமிட்டு உள்ளோம். குறிப்பாக தற்போது பாட திட்டங்கள் அனைத்தும் அச்சடித்த புத்தகங்களாக மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. அடுத்த கல்வியாண்டு முதல் மாணவர்களுக்கு பல்கலைக்கழக இணையதள முகவரி மூலமும் பாடங்கள் வெளியிடப்படும். இதன் மூலம் பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் போதிப்பதுடன், பல்கலைக்கழக இணையதளம் மூலமாக வெளியிடப்படும் பாடங்களை மாணவர்கள் தங்களுடைய வீடுகளில் உள்ள கணினி, செல்போன் மற்றும் டேப்-லெட் மூலமாகவும் எளிதாக படிக்க முடியும். அத்துடன் 'ஸ்கைப்' வசதி மூலம் பல்கலைக்கழக ஆசிரியர்களிடம், மாணவர்கள் வீடுகளில் இருந்தபடியே பாடம் தொடர்பான சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ள முடியும். இதற்காக குறிப்பிட்ட நாளில் பகல் 2 மணி முதல் 4 மணி வரை ஆசிரியர்கள் தயார் நிலையில் இருப்பார்கள். மாணவர்கள் 'ஸ்கைப்' மூலம் பாடத்தில் உள்ள சந்தேகங்களை நேரடியாக கேட்டு தெரிந்து கொள்ளும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் அடுத்த தலைமுறைக்கான நவீன தொழில்நுட்ப வசதி பல்கலைக்கழகத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மாணவர்கள் தாங்கள் படிக்கும் பாடத்தில் கூடுதலாக பிற பாடங்களையும் சேர்த்து படிக்க விரும்பும் தேர்வு சார்ந்த அமைப்பு (சாய்ஸ் பேஸ்ட்டு கிரெடிட் சிஸ்டம்) என்ற முறை கொண்டு வரப்பட உள்ளது. பி.எஸ்சி. பட்டப்படிப்பு அல்லது பட்ட மேற்படிப்பு படிக்கும் மாணவர்கள் பி.காம் பாடத்தில் கணக்குப்பதிவியலில் உள்ள ஏதாவது ஒரு பாடத்தை கூடுதலாக படிக்க விரும்பினால் அதனையும் சேர்த்து படிக்க முடியும். அவ்வாறு படிக்கும் மாணவர்களுக்கு படிப்பு முடித்து பட்டம் வழங்கும் போது 4 அல்லது 6 'கிரெடிட்' என்ற பெயரில் கூடுதலான மதிப்பெண் வழங்கப்படுகிறது. அவ்வாறு 3 ஆண்டுகளில் 140 'கிரெடிட்' மதிப்பெண்கள் பெறும் பட்டதாரி படிப்பு மாணவர்களுக்கும் 91 'கிரெடிட்' மதிப்பெண் பெறும் எம்.ஏ. படிக்கும் மாணவர்களுக்கும் கூடுதலாக பி.ஏ., மற்றும் எம்.ஏ. பட்டம் வழங்கப்படும். வரும் ஆண்டுகளில் பட்டப்படிப்புகளில் இந்த முறை அமல்படுத்தப்பட உள்ளது. அதேபோன்று அஞ்சல் வழி கல்வி முறையிலும் சில மாற்றங்கள் கொண்டு வர திட்டமிடப்பட்டு உள்ளது. வேலை பார்த்துக் கொண்டே அஞ்சல் வழி மூலம் கல்வி பயின்று வருபவர்கள், வேலையை துறந்துவிட்டு கல்லூரியில் சேர்ந்து நேரடியாக (ரெகுலர்) வகுப்பில் சேர்ந்து படிக்கவும், நேரடியாக படித்து வருபவர்களுக்கு திடீரென்று வேலை கிடைத்து விட்டால், அவர்கள் அஞ்சல் வழியில் சேர்ந்து படிக்கவும் வசதி அளிக்கும் புதிய முறையும் கொண்டு வரப்பட உள்ளது. இந்ததிட்டம் மூலம் மாணவர்கள் கல்வியை பாதியில் நிறுத்திவிட்டு செல்லும் முறை தவிர்க்கப்படும். இந்த திட்டத்திற்கு ஆசிரியர் மற்றும் மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும். இந்த 3 திட்டங்களையும் 2018-2019-ம் கல்வி ஆண்டு முதல் பல்கலைக்கழகத்தில் அறிமுகப்படுத்துவது குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் தலைமையில் ஆலோசனை நடத்தி வருகிறோம். தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் முதன்முறையாக இந்த திட்டங்கள் கொண்டுவரப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். | DOWNLOAD - FIND YOUR NEEDS HERE
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, 16 February 2018

தொடக்க கல்வி பட்டய தேர்வு -16.02.2018 முதல் 20.02.2018 வரை விடைத்தாள் நகல்...



தொடக்க கல்வி பட்டய தேர்வு எழுதி, விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்தவர்கள், இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்' என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், தொடக்க கல்வி பட்டய தேர்வு ஆசிரியர் படிப்பை முடித்து, தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள், விடைத்தாள் நகல் கேட்டு, ஜன., 22 முதல், 25 வரை விண்ணப்பித்தனர்.அவர்கள், இன்று முதல் விடைத்தாள் நகலை,scan.tndge.in என்ற, இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். வரும், 20ம் தேதி வரை, விடைத்தாள் நகலை பிரதி எடுக்க, அவகாசம் அளிக்கப்படும்.நகல் பெற்றவர்கள், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடுக்கு, அதே இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பிரதி எடுக்க வேண்டும்.அதில், கேட்கப்பட்ட விபரங்களை நிரப்பி, ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில், வரும், 21ம் தேதி முதல், 23ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது | DOWNLOAD - FIND YOUR NEEDS HERE
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

திறந்தநிலை கல்வி நிறுவனங்களில் பிளஸ் 2 படிப்பவர்கள் நீட் தேர்வு எழுத முடியாது

திறந்தநிலை கல்வி நிறுவனங்களில் பிளஸ் 2 படிப்பவர்கள் நீட் தேர்வு எழுத முடியாது என்ற இந்திய மருத்துவ கவுன்சிலின் திடீர் உத்தரவால் 5 ஆயிரம் மாணவர்களின் டாக்டர் கனவு தகர்ந்துள்ளது. இந்த ஆண்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு ( நீட்) மே 6-ம் தேதி நடைபெறும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. நாடுமுழுவதும் இருந்து மாநிலப் பாடத்திட்டங்கள், சிபிஎஸ்இஉள்ளிட்ட மத்திய பாடத்திட்டங்களில் படிக்கும் பிளஸ் 2 மாணவர்கள் நீட் தேர்வுக்காக www.cbseneet.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து வருகின்றனர்.இந்நிலையில், தேசிய திறந்தநிலை கல்வி நிறுவனத்தில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாது என்று இந்திய மருத்துவ கவுன்சிலின் (எம்சிஐ) உத்தரவின்படி சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் நாடுமுழுவதும் என்ஐஓஎஸ் மற்றும் மாநில அரசுகளின் திறந்தநிலை கல்வி நிறுவனங்களின் பாடத்திட்டங்களில் மருத்துவக் கனவோடு பிளஸ் 2 படிக்கும் சுமார் 5 ஆயிரம் மாணவர்கள் டாக்டராக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.திறந்தநிலை கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்லாமல் நேரடி யாக பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர். அந்த இடைப்பட்ட காலத்தில் நீட் போன்ற போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி மையங்களில் சேர்ந்து படிக்கின்றனர். அவர்கள் எளிதாக போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவதால், பள்ளிகளில் சேர்ந்து படிக்கும் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். அதனால், திறந்தநிலை பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் நீட் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. | DOWNLOAD - FIND YOUR NEEDS HERE
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

'பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள தனித் தேர்வர்களுக்கு, வரும், 20ல், செய்முறை தேர்வு துவங்கும்' என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

'பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள தனித் தேர்வர்களுக்கு, வரும், 20ல், செய்முறை தேர்வு துவங்கும்' என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது. அரசு தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: பத்தாம் வகுப்புக்கு, மார்ச்சில் பொதுத்தேர்வு நடக்கஉள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்களுக்கு, அறிவியல் பாட செய்முறை தேர்வு, வரும், 20 முதல், 28ம் தேதி வரை நடக்கும்.தனித்தேர்வர்கள், செய்முறை பயிற்சி வகுப்பில் பங்கேற்ற அதே பள்ளியில், செய்முறை தேர்விலும் பங்கேற்க வேண்டும். இதுகுறித்து, பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளை அணுகி, விபரம் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு, http://www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், நேற்று பிற்பகலில், ஹால் டிக்கெட்வெளியாகும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மாலை வரை, ஹால் டிக்கெட் வெளியாகாததால், தேர்வர்கள் நீண்ட நேரம் அவதிப்பட்டனர். | DOWNLOAD - FIND YOUR NEEDS HERE
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கோடை விடுமுறையில் ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்டம் குறித்து பயிற்சி

கோடை விடுமுறையில் ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்டம் குறித்து பயிற்சி | வரும் கல்வியாண்டில், புதிய பாடத்திட்டம் அமலுக்கு வருவதால், அதனடிப்படையில் பாடம் நடத்த, 10 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, ஏப்ரலில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. தமிழகத்தில், ஒன்று முதல், 10ம் வகுப்பு வரை, சமச்சீர் கல்வி பாடத்திட்டம், ஏழு ஆண்டுகளாக அமலில் உள்ளது. பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, 13 ஆண்டுகளாக, ஒரே பாடத்திட்டத்தில் தான் பாடம் நடத்தப்படுகிறது. இந்நிலையில், 10 ஆண்டுகளாக தொழில்நுட்ப வளர்ச்சியை உள்ளடக்கிய, புதிய பாடத்திட்டம் கொண்டு வர, கல்வியாளர்கள் வலியுறுத்தினர்.அதன்படி, பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவின்படி, செயலர் உதயசந்திரன் தலைமையில், புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. வரும் கல்வி ஆண்டில், ஜூன் மாதம் பள்ளிகள் திறந்ததும், முதற்கட்டமாக, ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும்பிளஸ் 1 பாடங்களுக்கு, புதிய பாடத்திட்டம் அமலாக உள்ளது. புதிய பாடத்திட்ட இறுதி அறிக்கைக்கு, முதல்வர் ஒப்புதல் கிடைத்ததும், பாட புத்தகம் அச்சிடும் பணியை துவங்க, அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். இதற்கிடையில், புதிய பாடத்திட்டத்தை மாணவர்களுக்கு பயிற்றுவிக்க, ஆசிரியர்களுக்கு முன்கூட்டியே, கல்லுாரி பேராசிரியர்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும், என்.ஜி.ஓ,,க்கள் வழியாக சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.அதற்காக, ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்பு ஆசிரியர்களுக்கு விடுமுறை நாட்களை குறைத்து, ஏப்ரலில் புதிய பாடத்திட்ட பயிற்சி அளிக்க, அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். முதற்கட்டமாக, ஒவ்வொரு பாடத்திலும், 10 ஆயிரம் ஆசிரியர்களை தேர்வு செய்து, பயிற்சி தரப்பட உள்ளது. | DOWNLOAD SITE MAP
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஆசிரியர் தேர்வு வாரிய பணிகள் - உயர்நீதிமன்றத்தில் TRB சார்பில் பதில் மனு தாக்கல்

ஆசிரியர் தேர்வு வாரிய பணிகள் - உயர்நீதிமன்றத்தில் TRB சார்பில் பதில் மனு தாக்கல்.ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தில் பயோமெட்ரிக் முறையை கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. | DOWNLOAD SITE MAP
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பொதுத் தேர்வெழுதும் மாணவர்கள் தங்களுக்கு இருக்கும் பயத்தை போக்க வேண்டும்-பிரதமர் நரேந்திர மோடி

பொதுத் தேர்வெழுதும் மாணவர்கள் தங்களுக்கு இருக்கும் பயத்தை போக்க வேண்டும் என்றால் நம்பிக்கையையும் கவனத்தையும் கைகொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். தேர்வு தொடர்பான விவாதம் என்ற நிகழ்ச்சிக்கு பிரதமர் அலுவலகம் ஏற்பாடு செய்திருந்தது. புது தில்லியில் உள்ள டல்கடோரா மைதானத்தில் இன்று ஆயிரக்கணக்கான மாணவர்கள் முன்னிலையில், பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது, இன்று நான் ஒரு மாணவனாகவும், நீங்கள் தேர்வாளராகவும் இருக்கிறீர்கள். என்னை பிரதமராக நினைக்கவேண்டாம். உங்களில் ஒருவனாக நினைத்து எனக்கு மதிப்பெண் அளியுங்கள். 10 மதிப்பெண்களுக்கு எனக்கு எவ்வளவு மதிப்பெண் அளிப்பீர்கள் என்று சொல்லுங்கள் என்றார். தேர்தல் பயம், அழுத்தம் போன்ற பல்வேறு சந்தேகங்களை எழுப்பி மாணவ, மாணவிகள் கேட்ட கேள்விகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பதிலளித்தார். தேர்வுக்கு முழுதும் தயாராகியும் பயத்தை எப்படி போக்குவது என்ற கேள்விக்கு பதிலளித்த மோடி, நேர்மையாக நாம் தேர்வுக்கு முழுவதும் தயாரானாலும் கூட, நமக்கு நம்பிக்கை இல்லை என்றால் கடைசி நேரத்தில் படித்தது எல்லாம் மறந்துவிடும். தன்னம்பிக்கை என்பது மிக அவசியம். எனவே நமக்கு நாமே சவால் விட்டுக் கொண்டு கடின உழைப்பை செலுத்தி படிக்க வேண்டும். நம்மை மேம்படுத்திக் கொள்வது பற்றியே சிந்திக்க வேண்டும். கல்வி பயில கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம், அது ஒரு தனிக்கலை என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் அது தவறு. நாம் அனைவருமே தினந்தோறும் பல காரியங்களை செய்கிறோம். அனைத்துக்குமே கவனம் மிக அவசியம் என்று கூறினார். | DOWNLOAD SITE MAP
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அடுத்த 20 ஆண்டுகளில் வகுப்பறைகளில் பாடம் நடத்த ஆசிரியர்களுக்கு பதில் ரோபோக்கள் குஜராத் கணிதவியல் நிபுணர் தகவல்

அடுத்த 20 ஆண்டுகளில் வகுப்பறைகளில் பாடம் நடத்த ஆசிரியர்களுக்கு பதில் ரோபோக்கள் குஜராத் கணிதவியல் நிபுணர் தகவல் | அடுத்த 20 ஆண்டுகளில் வகுப்பறைகளில் ஆசிரியர்களுக்குப் பதில் ரோபோக்கள் பாடம் நடத்தும் நிலை உருவாகும் என்று குஜராத் கணிதவியல் நிபுணர் சசிரஞ்சன் யாதவ் கூறினார். தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் 7-வது பட்டமளிப்பு விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான பன்வாரிலால் புரோஹித் தலைமை தாங்கினார். இணைவேந்தரும், உயர்கல்வித் துறை அமைச்சருமான கே.பி.அன்பழகன் முன்னிலை வகித்தார். பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பெற்ற 162 மாணவ-மாணவிகளுக்கு ஆளுநர் பதக்கங்களையும் ரொக்கப் பரிசுகளையும் வழங்கினார். 44,994 பேர் பிஎட் பட்டமும், 1,473 பேர் எம்எட் பட்டமும் 118 பேர் எம்பில் பட்டமும், 21 பேர் பிஎச்டி பட்டமும் பெற்றனர். முன்னதாக, குஜராத் காந்திநகர் இந்திய கல்வியியல் நிறுவன பல்கலைக்கழக துணைவேந்தரும், பிரபல கணிதவியல் நிபுணருமான பேராசிரியர் சசிரஞ்சன் யாதவ் பட்டமளிப்பு விழா உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: தகவல் தொழில்நுட்பம் வெகு விரைவாக வளர்ந்து வரும் நிலையில், ஏற்கெனவே இருந்து வரும் பல வேலைவாய்ப்புகள் மறைந்து வருகின்றன. அதேநேரத்தில் அதற்குப் பதில் பல்வேறு புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகின்றன. தற்போது டேட்டா அனலட்டிக்ஸ் உள்ளிட்ட புதிய துறைகளில் வேலைவாய்ப்புகள் பெருகிவருகின்றன. முன்பு கல்வியின் ஆதாரமாக ஆசிரியர்கள் திகழ்ந்தனர். மாணவர்கள் தங்களுக்கு எதேனும் சந்தேகம் இருந்தால் ஆசிரியர்களை நாடுவார்கள். ஆனால், இப்போது கூகுளில் தகவல்களை தேடுகிறார்கள். அடுத்த 20 ஆண்டுகளில் வகுப்பறைகளில் ஆசிரியர்களுக்குப் பதில் ரோபோக்கள் பாடம் நடத்தக்கூடிய சூழல் உருவாகும் என்றார். உயர் கல்வி அமைச்சர் அன்பழகன் பங்கேற்று பேசினார். முன்னதாக, துணைவேந்தர் எஸ்.தங்கசாமி வரவேற்று ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். விழாவில் பதிவாளர் (பொறுப்பு) ரவீந்திரநாத் தாகூர், பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர் கலந்துகொண்டனர். | SITE MAP
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 15 February 2018

தேர்வு பணி: தனியார் பள்ளிஆசிரியர்களுக்கு அரசு எச்சரிக்கை!!!

'பொது தேர்வு பணிகளில், தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஈடுபடாமல் 'டிமிக்கி' கொடுத்தால், பள்ளி மீது, நடவடிக்கை பாயும்' என, தேர்வுத்துறை எச்சரித்து உள்ளது. தமிழக அரசின் பாடத்திட்டத்தில், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஓரியன்டல் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, மார்ச்சில் பொது தேர்வு நடக்கிறது.முதற்கட்டமாக, மார்ச், 1ல், பிளஸ் 2 பொது தேர்வு துவங்குகிறது. மார்ச், 7ல், பிளஸ் 1; மார்ச், 16ல், பத்தாம் வகுப்புக்கு தேர்வு துவங்க உள்ளது.இந்த தேர்வுகளில், 27.5 லட்சம் மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். இதற்காக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 2,794 தேர்வு மையங்கள் அமைக்கப் பட்டுள்ளன. தேர்வு பணிகளுக்கு, ஒரே நாளில், 1.10 லட்சம் ஆசிரியர்களை ஈடுபடுத்த, தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது.இதற்காக, சுழற்சி அடிப்படையில், ஆசிரியர்களை தேர்வு பணியில் ஈடுபடுத்த, வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.இந்த பணிகளில், பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களும், உடற்கல்வி, தொழிற்கல்வி ஆசிரியர்களும் ஈடுபட உள்ளனர். அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்களும் பணியில் ஈடுபட, அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.இதில், தனியார் பள்ளிகள் சிலவற்றில், தங்கள் நிர்வாக பணிகளை காரணம் காட்டி, ஆசிரியர்களை தேர்வு பணிக்கு அனுப்புவதில்லை என, புகார்கள் எழுந்துள்ளன.இதையொட்டி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் வழியே, தனியார் பள்ளிகளுக்கு, தேர்வுத்துறை சார்பில், எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.எச்சரிக்கை கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:தனியார் பள்ளிகளில், தேர்வு எழுதும் மாணவர்களின் விகிதத்திற்கேற்ப, தேர்வு பணிக்கு, ஆசிரியர்களை அனுப்ப வேண்டும். ஆனால், பல பள்ளிகள், பொது தேர்வு பணிகளில், தங்கள் ஆசிரியர்களை அனுப்புவதில்லை.அதனால், தேர்வு நடத்துவது, விடைத்தாள் மதிப்பீடு போன்ற பணிகளில் சுணக்கம் ஏற்படுகிறது. எனவே, இந்த ஆண்டு, எந்த பள்ளியில், ஆசிரியர்களை தேர்வு பணிக்கு அனுப்பவில்லையோ, அந்த பள்ளி மீது நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. | DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் பணி: தேர்வை ரத்து செய்த உத்தரவுக்கு தடை கோரி மனு: அரசு பதிலளிக்க உத்தரவு

பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் பணியிடங்களுக்கான தேர்வை ரத்து செய்த உத்தரவுக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவுக்கு மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. சிவகங்கையைச் சேர்ந்த எம்.இளமதி சென்னை உயர்நீதிமன்றமதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியின் விரிவுரையாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு கடந்த ஜூலை 28 இல் வெளியானது. தொடர்ந்து, செப்டம்பர் 16 இல் தேர்வு நடைபெற்ற நிலையில், விடைக்குறிப்பு வெளியிடப்பட்டு, நவம்பரில் சுயவிவரங்கள் பெறப்பட்டு சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. இந்நிலையில், விடைத்தாள்களில் முறைகேடுகள் செய்யப்பட்டதாகக் கூறி, அந்த தேர்வை ரத்து செய்வதாகவும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் அந்தப் பணிகளுக்கான மறுதேர்வு அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1 லட்சத்து 33 ஆயிரத்து 567 பேர் தேர்வெழுதிய நிலையில், 200 பேரின் விடைத்தாள்களிலேயே முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. அதுவும் தேர்வு எழுதியதில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை என்பதும் உறுதியாகியுள்ளது. ஆகவே, தவறிழைத்த 200 பேருக்காக தேர்வெழுதிய அனைவரையும் தண்டிப்பது முறையல்ல. எனவே பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் உள்ளிட்ட பணிகளுக்காக செப்டம்பர் 16இல் நடைபெற்ற தேர்வை ரத்து செய்த உத்தரவிற்கும், மறுதேர்விற்கான அறிவிப்பை வெளியிடவும், அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்கவும் தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, இதுதொடர்பாக உயர்கல்வித்துறைச் செயலர், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் ஆகியோர் பிப்ரவரி 22 ஆம் தேதி பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர். | DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை பெறுவதற்கானஆண்டு வருமான உச்ச வரம்பு அதிகரிப்பு

பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை பெறுவதற்கானஆண்டு வருமான உச்ச வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. இந்தியா முழுக்க இருக்கும் பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. முக்கியமாக பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு இருக்கிறது. தற்போது இந்த மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு உதவித்தொகை பெறுவதற்கான உச்ச வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.அதன்படி பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ. 44,500லிருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. இனி ஆண்டு வருமானம் 2.5 லட்சம் வரை இருக்கும் குடும்பத்தை சேர்ந்த மாணவர்களும் உதவித் தொகை பெற முடியும்.அதேபோல் தாழ்த்தப்பட்டவர்களுக்கான ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. | DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பள்ளிகளில் கரும்பலகைக்கு பதிலாக "ஸ்மார்ட் போர்டு'கள் அறிமுகம்




பள்ளிகளில் கரும்பலகைக்கு பதிலாக "ஸ்மார்ட் போர்டு'கள் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் உபேந்திர குஷ்வாகா தெரிவித்துள்ளார். ஸ்மார்ட் டிஜிட்டல் போர்டு மூலம் மாணவர்களுக்கு கற்பிக்கும் முறை எளிமையாகவும், நவீனமாகவும் இருப்பதுடன், இந்த ஸ்மார்ட் டிஜிட்டல் போர்டுகள் மூலம் பள்ளிகள் அனைத்தும் மின்னணுமுறையில் இணைக்கப்படும். இதனால், அங்கு கற்பிக்கப்படும் பாடங்களை எளிதாக கண்காணிக்கவும் முடியும். பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த உபேந்திர குஷ்வாகா மேலும் கூறியதாவது: பள்ளிகளில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்மார்ட் போர்டுகள் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன. இதன் முதல்கட்டமாக 25 கேந்திர வித்யாலயா பள்ளிகளுக்கு முன்னோடித் திட்டமாக "டேப்லெட்'கள் அளிக்கப்படவுள்ளன. இதன் தொடர்ச்சியாக "ஸ்மார்ட் போர்டு'கள் நிறுவப்படும். இதற்கு மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) ஏற்கெனவே ஒப்புதல் அளித்துவிட்டது. சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு அனைத்துப் பள்ளிகளிலும் கரும்பலகை வைத்து பாடம் கற்பிப்பதை மத்திய அரசு ஒரு செயல்திட்டமாக முன்னெடுத்து நடத்தியது. இப்போது, அதே பாணியில் "ஸ்மார்ட் போர்டு' திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. ஆனால், இத்திட்டத்துக்கு அதிக பணம் செலவாகும். எனினும், மத்திய மாநில அரசுகள் மட்டுமல்லாது, மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்தும். பெரிய தொழில் நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு நிதியில் இருந்தும் நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. | DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கல்லூரி, பல்கலை. உதவிப் பேராசிரியர் பணி நியமனத்துக்கு யுஜிசி வரைவு விதிகள் வெளியீடு.

கல்லூரி, பல்கலை. உதவிப் பேராசிரியர் பணி நியமனத்துக்கு யுஜிசி வரைவு விதிகள் வெளியீடு | கல்லூரி மற்றும் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் பணிக்கு புதிய விதிகளை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வெளியிட்டு கருத்து கேட்டுள்ளது. நாட்டிலுள்ள சுமார் 40,000 கல்லூரிகள் மற்றும் 800 பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் பணிக்கு புதிய விதிமுறைகளை யுஜிசி வகுத்துள்ளது. இந்த வரைவு விதிகள் அதன் இணையதளத் தில் பதிவேற்றம் செய்யப் பட்டுள்ளன. இதில் இளநிலை பட்டப்படிப்புக்கு நேர்முகத் தேர்வில் அதிகபட்சம் 21 மதிப்பெண் தரப்பட்டுள்ளது. (80 சதவீதத்தை விட அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு 21 மதிப்பெண், 60 முதல் 79 சதவீதம் பெற்றவர்களுக்கு 19-ம், 55 முதல் 59-க்கு 16-ம் தரப்பட்டுள்ளது). இதையடுத்து முதுகலை பட்டப் படிப்புக்கு அதிகபட்சம் 33 மதிப்பெண் தரப்பட்டுள்ளது. (80 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களுக்கு 33 மதிப்பெண், 60 முதல் 79-க்கு 30, 55 முதல் 59-க்கு 25). இதைத் தொடர்ந்து எம்.பில் பட்டத்துக்கு வெறும் 7 மதிப்பெண் மட்டுமே தரப்பட்டுள்ளது. இந்த மூன்றையும் விட உயர்ந்த முனைவர் பட்டத்திற்கு 20 மதிப்பெண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் முனைவர் பட்டம் பெற்றவர்கள் மத்திய அல்லது மாநில அளவிலான தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் அது கூடுதல் தகுதியாக குறிப்பிடப்பட்டுள்ளது. உதவிப் பேராசிரியர் பணிக்கு வெயிட்டேஜ் முறையிலான இந்த மதிப்பெண் நிர்ணயம் கல்லூரி மற்றும் ஆசிரியர்கள் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து 'தி இந்து'விடம் டெல்லி பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் பேராசிரியர் ராஜீவ் ரே கூறும்போது, 'இது கிராமப்புற மாணவர்களுக்கு எதிரானதாக அமையும். அந்த மாணவர்களுக்கு சிறந்த கல்லூரிகளில் பயில வாய்ப்பு கிடைக்காமல் அதிக மதிப்பெண் பெற முடியாத நிலை உள்ளது. இவர்களால் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் பணியில் சேர முடியாது. ஏற்கெனவே குறைந்த மதிப்பெண்ணுடன் இளநிலை, முதுநிலை முடித்தவர்களையும் யுஜிசியின் புதிய விதிகள் பாதிக்கும்" என்றார். தற்போது மத்தியப் பல்கலைக்கழகங்கள், யுஜிசி விதிமுறைகளுக்கு உட்பட்டு தம் தேவைக்கு ஏற்ற வகையில் நேர்முகத் தேர்வில் மதிப்பெண் அளித்து வருகின்றன. மாநில அரசுகளும் இதே முறையை கடைப்பிடிக்கின்றன. யுஜிசியின் புதிய விதிகள் 2021 ஜூலை முதல் கட்டாயமாக்கப்பட உள்ளன. இதன்மூலம், பல்கலைக்கழகங்களின் தன்னாட்சி முறையும் மெல்ல முடிவுக்கு வரும் அபாயம் தெரிகிறது. இணைப் பேராசிரியர், பேராசிரியர் பதவி உயர்வுக்கும் புதிய வரைவு விதிகளை யுஜிசி வெளியிட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

இளநிலை உதவியாளர், விஏஓ பணிக்கு விண்ணப்பித்தவர்களில் 992 பேர் பிஎச்.டி பட்டம் பெற்றவர்கள் 10-ம் வகுப்பு படித்தவர்களைவிட பட்டதாரிகளே அதிகம் என தகவல்

இளநிலை உதவியாளர், விஏஓ பணிக்கு விண்ணப்பித்தவர்களில் 992 பேர் பிஎச்.டி பட்டம் பெற்றவர்கள் 10-ம் வகுப்பு படித்தவர்களைவிட பட்டதாரிகளே அதிகம் என தகவல் | தமிழகத்தில் சமீபத்தில் நடந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4- தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் 992 பேர் பிஎச்டி பட்டம் பெற்றவர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 85 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்து காத்திருக்கின்றனர். இவர்களில் குறிப்பிட்ட சதவீதத்தினர் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 படித்தவர்கள் என்றாலும், பட்டம், முதுநிலை பட்டம், பட்டயம், பொறியியல், எம்.ஃபில், முனைவர் பட்டம் முடித்தவர்களும் உள்ளனர். உடனடி பணிவாய்ப்பு ஆண்டுதோறும் பொறியியல் படித்து, லட்சக்கணக்கானவர்கள் வெளிவருகின்றனர். இவர்கள் எல்லோரும் உடனடியாக பணிவாய்ப்பு பெற்றுவிடுவதில்லை. இதனால்தான் தற்போது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், மத்திய பணியாளர் தேர்வாணையம், ரயில்வே பணியாளர் தேர்வாணயம் உள்ளிட்ட பல்வேறு தேர்வு அமைப்புகள் நடத்தும் குறைந்த ஊதியத்தைக் கொண்ட அடிப்படை பணிகளுக்குக்கூட அதிக அளவில் விண்ணப்பிக்கும் நிலை உள்ளது. அந்த வகையில், தமிழகத்தில் சமீபத்தில் நடந்த டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு எல்லோரையும் சிந்திக்க வைத்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் டிஎன்பிஎஸ்சி இந்த தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டது. 494 கிராம நிர்வாக அலுவலர், 4,349 இளநிலை உதவியாளர், 230 வரி தண்டலர், நில அளவர், வரைவாளர், 3,463 தட்டச்சர், 815 சுருக்கெழுத்து தட்டச்சர் என, 9,351 பணியிடங்களுக்கு தேர்வு நடந்தது. குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு இப்பணிகளுக்கான குறைந்த பட்ச கல்வித்தகுதி 10-ம் வகுப்பு ஆகும். இப்பணிகளுக்காக 20 லட்சத்து 83 ஆயிரத்து 152 பேர் விண்ணப்பித்தனர். இதில் 20 லட்சத்து 69 ஆயிரத்து 274 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. இவர்களுக்கான எழுத்துத்தேர்வு, கடந்த பிப்.11-ம் தேதி நடந்தது. இத்தேர்வில் 3 லட்சம் பேர் வரை பங்கேற்கவில்லை என்று கூறப்பட்டது. அடுத்த கட்டமாக, தற்போது விடைத்தாள்கள் மதிப்பிடும் பணிகள் நடந்து வரும் நிலையில், விண்ணப்பித்தவர்களில் 992 பேர் முனைவர் பட்டம் பெற்றவர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும், எம்.ஃபில் முடித்த 23,000 பேர், முதுநிலை பட்டதாரிகள் 2.5 லட்சம் பேர், 8 லட்சம் பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர். குறைந்த பட்ச கல்வித்தகுதியான 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படித்தவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு. பட்டதாரிகளில் 6 லட்சத்து 20 ஆயிரம் பேர் பொறியியல் அல்லாத மற்ற துறை பட்டதாரிகள் என்றும் டிஎன்பிஎஸ்சி வட்டாரங்கள் தெரிவித்தன. டிஎன்பிஎஸ்சி தேர்வு மட்டுமின்றி, காவல், தீயணைப்பு, சிறைத்துறையினருக்கு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்விலும் முனைவர், எம்பில் பட்டம் பெற்றவர்கள் எண்ணிக்கை, அதிக அளவில் இருந்தது. நீதித்துறையில் சமீபத்தில் துப்புரவாளர் பணிக்கு பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பித்த சம்பவமும் நடந்தேறியது குறி்ப்பிடத்தக்கது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

SSLC MARCH 2018 PRIVATE HALL TICKET DOWNLOAD | SSLC பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்த நேரடி தனித்தேர்வாளர்கள் ஆன்லைனில் ஹால் டிக்கெட்.

எஸ்எஸ்எல்சி தனித்தேர்வர்களுக்கு இன்றுமுதல் ஹால் டிக்கெட் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம் | எஸ்எஸ்எல்சி தனித்தேர்வர்கள் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை (ஹால் டிக்கெட்) இன்றுமுதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசுத் தேர்வு கள் இயக்குநர் தண்.வசுந்தரா தேவி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மார்ச், ஏப்ரலில் நடக்க உள்ள எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் (தத்கால் தேர்வர்கள் உட்பட) தங்களது தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை பிப்ரவரி 15-ம் தேதி (இன்று) பிற்பகல் முதல் அரசு தேர்வுத் துறையின் இணையதளத்தில் (www.dge.tn.gov.in) இருந்து பதி விறக்கம் செய்துகொள்ளலாம். பதிவிறக்கம் செய்யும்போது தங்கள் விண்ணப்ப எண், பிறந்த தேதியைக் குறிப்பிட வேண்டும். உரிய தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு இல்லாமல் யாரும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார் கள். அறிவியல் பாட செய்முறைத் தேர்வுக்கான தேதி குறித்த விவரங்களைத் தனித்தேர்வர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையத்தின் முதன்மை கண்காணிப்பாளரை அணுகி அறிந்துகொள்ள வேண்டும். பொதுத் தேர்வுக்கான காலஅட்டவணையை அரசு தேர்வுத் துறை இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள் ளார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

என்ஜினீயரிங் கல்லூரிகளில் முதல் செமஸ்டர் தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் குறைந்தது ஏன்? கல்லூரி முதல்வர்கள் விளக்கம்

என்ஜினீயரிங் கல்லூரிகளில் முதல் செமஸ்டர் தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் குறைந்தது ஏன்? கல்லூரி முதல்வர்கள் விளக்கம் | என்ஜினீயரிங் கல்லூரிகளில் முதல் செமஸ்டரில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் மிகவும் குறைந்துள்ளது. தேர்ச்சி சதவீதம் குறைந்தது ஏன்? என என்ஜினீயரிங் கல்லூரி முதல்வர்கள் விளக்கம் அளித்துள்ளனர். அண்ணா பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு, அரசு உதவி பெறும் என்ஜினீயரிங் கல்லூரிகள், சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகள் என்று மொத்தத்தில் 500-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் உள்ளன. அந்த கல்லூரிகளில் முதலாம் ஆண்டு முதல் செமஸ்டர் தேர்வு கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது. தேர்வை 1 லட்சத்து 13 ஆயிரத்து 298 பேர் எழுதினார்கள். இந்த தேர்வுகளில் மொத்தம் 39 ஆயிரத்து 142 மாணவ-மாணவிகள் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 34.55 ஆகும். இந்த தேர்வு முடிவுகள் கல்லூரி மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 5 வருடங்களில் இப்போதுதான் இவ்வளவு குறைந்துள்ளது. இந்த வருடம் தேர்ச்சி சதவீதம் குறைந்தது குறித்து அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் எஸ்.கணேசன், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பேராசிரியர் ஜி.வி.உமா மற்றும் அதிகாரிகள் அனைத்து என்ஜினீயரிங் கல்லூரி முதல்வர்களிடமும் காரணம் கேட்டனர். அதற்கு அவர்கள் அளித்த பதில் வருமாறு:- மாணவர்களுக்கு பி.இ. முதல் செமஸ்டர் தேர்வில் பிளஸ்-1 பாடத்தில் உள்ள கேள்விகளும் கேட்கப்படுகின்றன. பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு பிளஸ்-1 ஆசிரியர்களும் பாடத்தை சரியாக சொல்லி கொடுப்பதில்லை. மாணவர்களும் ஆழமாக படிப்பதில்லை. பள்ளிகளில் தமிழ் வழியில் படித்த மாணவர்கள் பலர் என்ஜினீயரிங் கல்லூரிகளில் ஆங்கில வழியில் படிக்கிறார்கள். இது திடீர் திருப்பம். விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு வீட்டு எண்ணம் இருக்கும். அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய செமஸ்டர் தேர்வில் வினாக்கள் கேட்கும் முறை, தேர்வுமுறை ஆகியவற்றில் மாற்றம் ஏற்படுகிறது. நீட் தேர்வு முடிவு வெளியிடும் முன்பே தமிழகத்தில் என்ஜினீயரிங் கலந்தாய்வு நடத்தப்பட்டது. நீட் தேர்வு முடிவு தெரியாமல் என்ஜினீயரிங் சேர்ந்த மாணவர்கள், பிளஸ்-2 வகுப்பில் உயிரியல் பாடத்தை நன்றாக படித்து இருப்பார்கள். அவர்களில் பலருக்கு கணித பாடம் அவ்வளவாக தெரியாது. இந்த காரணங்களால் என்ஜினீயரிங் முதல் செமஸ்டரில் தேர்ச்சி சதவீதம் குறைந்து இருக்கலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மாணவர்களின் மன அழுத்தத்தை போக்க பிரசார திட்டம் அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்



மாணவர்களின் மன அழுத்தத்தை போக்க பிரசார திட்டம் அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார் | அரசு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ-மாணவிகளுக்கு மன அழுத்தத்தை போக்குவதற்காக ஒரு பிரசார திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று சென்னை கோட்டையில் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையும், லீடு என்ற அமைப்பும் சேர்ந்து இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளன. மாணவர்களின் இன்னல்கள், பெற்றோர்களின் சிக்கல்கள், குழப்பங்கள், பயம் ஆகியவற்றை நீக்கி விடை தெரியாத பிரச்சினைகளுக்கு சரியான தீர்வுகளை வழங்க உள்ளது. மன நலம் சார்ந்த ஆலோசகர்கள், கல்வியாளர்கள், வல்லுனர்கள் ஆலோசனை வழங்க உள்ளனர். மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோர் டுவிட்டர், முகநூல், வாட்ஸ்-அப் மூலம் பிரச்சினைகளை தெரிவிக்கலாம். தொடர்புகொள்ள வாட்ஸ் அப் செல்நம்பர் 7373002426, முகநூல் Tamilnadu govt.Exam stress Relief, டுவிட்டர் முகவரி: @TNSchoolEdudept., இ-மெயில் முகவரி : ednstressrelief@gmail.com ஆகியவற்றை அணுகலாம். இந்த தகவலை கல்வி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, 14 February 2018

TNPSC GROUP 4 OFFICIAL ANSWER KEY DOWNLOAD | TNPSC GROUP 4 தேர்வுக்கான உத்தேச விடைக் குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

TNPSC GROUP 4 OFFICIAL ANSWER KEY DOWNLOAD | TNPSC - GENERAL TAMIL- GENERAL ENGLISH- GENERAL STUDIES - ANSWER KEYS - 2018 | COMBINED CIVIL SERVICES EXAMINATION -4 (GROUP - IV SERVICES) (DATE OF EXAMINATION:11.02.2018 FN) | Note: Right Answer has been tick marked in the respective choices for each question. Representations if any shall be sent so as to reach the Commission's Office within 7 days. Representations received after 21st February 2018 will receive no attention. | DOWNLOAD GT | DOWNLOAD GE | DOWNLOAD GS
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE